திங்கள், 28 பிப்ரவரி, 2011

மூடிக்கிடந்த கண்களைத் திறந்த விக்கி லீக்கும் ராடியா டேப்பும்

அம்பலப்படுத்தும் முதலாளித்துவ அவலங்கள்
சமீபத்தில் டெல்லியில் நடந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியது. அதாவது ஒரு கணவன் தனது மனைவியைக் கொன்று அவளது உடலைக் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி ஒன்றைக் கடையில் வாங்கி அதில் பல தினங்கள் வைத்திருந்தான் என்பதே அச்செய்தி. இருந்தாலும் கூட அப்பெட்டியிலிருந்தும் துர்நாற்றம் கிளம்புவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை வைத்தே அவனைக் கைது செய்து விட்டார்கள்.
எத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்து பராமரித்தாலும் இறந்துவிட்ட மனித உடலில் இருந்து துர்நாற்றம் கிளம்புவதைத் தவிர்க்க முடியாது. அதீத முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான சாதனங்களை வடிவமைத்து அத்துர்நாற்றம் கிளம்பும் காலத்தை வேண்டுமானால் தள்ளிப்போட முடியுமே தவிர நாற்றம் வராமல் நிரந்தரமாகத் தடுக்க ஒரு வழியுமில்லை.
அதையொத்த விதத்தில் தான் சமூகத்திற்குக் கொடுப்பதற்கென்று உயிரோட்டமுள்ள ஆக்கபூர்வமான எதையும் கொண்டிராது இறந்துவிட்ட நிலையில் இருக்கும் முதலாளித்துவமும் உலக அளவிலும் இந்திய அளவிலும் சகிக்க முடியாத துர்நாற்றங்களை வெளிவிட்டுக் கொண்டுள்ளது. அதனை அவ்வாறு வெளிப்படுத்தும் இறந்துவிட்ட பிணத்தை வைத்திருக்கும் குளிர்பதனப் பெட்டியின் துளைகள் துவாரங்களாக விக்கிலீக்கும் ராடியா டேப்பும் செயல்பட்டு வெளிப்படையாக ஜனநாயக அடிப்படைகளில் செயல்படுவது போல் தோற்றம் காட்டிக் கொண்டிருக்கும் உலக மற்றும் உள்ளூர் முதலாளித்துவ அமைப்புகளை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

ஊழலுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு



பணம் கொடுத்துப் பெறும் தேர்தல் வெற்றி மூலம் அதைச் சந்திக்கத் தயாராகும்
ஆளும் கட்சியும் அதனை எதிர்கொள்ள வழி தெரியாது திணறும் எதிர்க் கட்சியும்
2010ம் ஆண்டு ஊழல், மோசடிகளின் ஆண்டு என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது. அத்தனை ஊழல்கள் இந்த ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. காமன் வெல்த் விளையாட்டு மைதானம் அமைப்பதில் ஊழல், இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி முறைகேடாக ஒதுக்கீடுகள் செய்ததில் ஊழல், தனது உறவினர்களுக்கு முறைகேடாக அரசுக்குச் சொந்தமான இடங்களை வழங்கியதில் கர்நாடகாவின் எடியூரப்பா செய்துள்ள ஊழல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வீடுகளை மந்திரிகளின் சொந்தக்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒதுக்கி தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் செய்துள்ள ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நிதர்சனமாகிவிட்ட நிலை நிலவுவதால் இந்த ஆண்டையே ஊழல், மோசடிகள் நிறைந்த ஆண்டாக ஊடகங்கள் வர்ணிப்பதில் தவறேதுமில்லை.
மேலும் படிக்க 
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

ராசாவின் பதவி விலகலும் கபில் சிபலின் பொறுப்பேற்பும் மன்மோகன் சிங் அரசால் ஊழலை மூடிமறைக்க அரங்கேற்றப்பட்டதொரு ஓரங்க நாடகம்




நான் அடிப்பது போல் அடிக்கிறேன், நீ அழுவதுபோல் அழு என்பது நமது ஆட்சியாளர்களின் நடவடிக்கை ஆகிவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் நடத்த ஊழல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி மூலம் வெளிவந்தவுடன் அதனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஊடகங்கள் மூலமும் வந்த விமர்சனங்களின் விளைவாகத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா பதவி விலக நேர்ந்தது. அவர் வகித்த தொலைத் தொடர்பு அமைச்சகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.
மத்திய மந்திரி சபையில் புதிதாகச் சேர்க்கப்பட்டவராக இருந்தாலும் திருவாளர் கபில் சிபல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்தபடியாக அதிகம் மதிக்கப்படுபவர். அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர், சிறந்த ஆங்கில அறிவு பெற்றவர், நாவன்மை பொருந்தியவர் என்பவற்றோடு கூட அவருக்கு ஊடகங்கள் அளித்துவரும் அதீதமான விளம்பரத்திற்கு வேறொரு காரணமும் உண்டு. அதே காரணத்திற்காகத் தான் மன்மோகன் சிங்கும் நேர்மையாளர் என்று ஊடகங்களால் கருதப்படுகிறார்.
அதாவது அரசியலில் சமீபத்தில் நுழைந்தவர்களாக இருப்பது தற்போதெல்லாம் பலரது நற்பெயருக்கு ஒரு காரணமாக ஆகிவருகிறது. அந்த அடிப்படையில் இவர்கள் இருவரும் பலகாலம் அரசியலில் இருந்து பதவிகள் வகித்துப் படிப்படியாகச் சீரழிந்து இன்று பொது வாழ்க்கையில் இருக்க வேண்டிய மதிப்புகள் எதுவும் இல்லாமல் அவப்பெயர் எடுத்த மூத்த அமைச்சர்களைப் போன்றவர்கள் அல்ல என்பது இவர்களது நற்பெயருக்கான முக்கியக் காரணமாக உள்ளது. ஒப்பு நோக்குமிடத்து முழுநேர அரசியலுக்குப் புதியவர்கள் என்பதும் அவர்களுக்கு ஊடகங்கள் மூலமாக ஒரு நற்பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளது.
மேலும் படிக்க 
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கார் திரைப்படம் - ஒரு திறனாய்வு





முழுக்க முழுக்கக் கற்பனை அடிப்படையில் எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் சில வரலாற்றுப் பாத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அதாவது கற்பனைக் கதைகளை எழுதுபவருக்கும், திரைப்படமாக எடுப்பவருக்கும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதையைக் கையாள்பவருக்கு இருப்பதைக் காட்டிலும் கூடுதல் சுதந்திரம் உண்டு. அதாவது அவர் விரும்பினால் கதையை அவர் விரும்பும் விதத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதை எழுதுபவர்கள், திரைக்கதையை உருவாக்குபவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஒரு உண்மைக் கதையை அதை அப்படியே சொன்னால் சுவைகரமாக இல்லாமல் அலுப்புத் தட்டும். அதனைத் தவிர்ப்பதற்காக அக்கதையைச் சொல்லும் விதத்திலேயே அதைச் சுவைகரமாக்க வேண்டும். அவ்வாறு ஆக்கும் பொறுப்பும் சிரமமும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதை எழுதுபவர்களுக்கும், திரைப்படம் எடுப்பவர்களுக்கும் உள்ளது.
அதிலும் ஏறக்குறைய சமகாலத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பாத்திரங்களை மையமாகக் கொண்டவையாக ஒருவர் உருவாக்கும் கலைப் படைப்பு இருக்கும் போது அவரது சுதந்திரம் இன்னும் குறுகலாகி விடும். அவருக்கு அவர் கையாளும் வரலாற்றுப் பாத்திரத்தின் வாழ்க்கையை ஒட்டி அவரது படைப்பைச் சுவாரஸ்யமாக்குவதற்காகச் சிலவற்றைப் புனைவது கூட அத்தனை எளிதானதாக இராது. கையாளப்படும் வரலாற்றுப் பாத்திரங்கள் குறித்த சில எதிர்மறை அம்சங்களும் மக்கள் மனதைவிட்டு அகன்றிருக்காது என்பதால் அவற்றில் சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிடுவதும் கூடப் பல சமயங்களில் சிரமமாகிவிடும். இந்நிலையில் ஒருவகை ஆவணத் தன்மை அத்தகைய படத்திற்குப் பெரும்பாலும் வந்துவிடும்.
மேலும் படிக்க 
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

கல்விக்கட்டண உயர்வினை எதிர்த்த இங்கிலாந்து மாணவர் போராட்டம்:


சளைக்காத மாணவர் இயக்கத்தின் முன் பலிக்காமல் போன ஆட்சியாளரின் தந்திரங்கள்
பிரான்ஸையே உலுக்கி எடுத்த உழைப்பாளர் மற்றும் மாணவர் போராட்டங்கள் ஓய்ந்தது போல் காட்சியளித்தாலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுள்ளன. அந்நிலையில் லண்டன் மாநகரையே இங்கிலாந்து நாட்டின் மாணவர் போராட்டங்கள் உலுக்கி எடுத்துக் கொண்டுள்ளன. இது ஐரோப்பாக் கண்டமே ஒரு வகையான மகத்தான எழுச்சியினால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
2010 நவம்பர் 10ம் நாள் பயிற்சிக் கட்டண உயர்வினை எதிர்த்து ஒரு மாணவர் எழுச்சி லண்டன் நகரில் உருவெடுத்தது. 50,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு கட்டண உயர்வை எதிர்த்த கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் அணிவகுத்து வரும் பாதை லண்டன் மாநகரக் காவல்துறைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் காவல்துறை அந்த ஊர்வலத்தை இடையில் தடுத்து நிறுத்தியது. இலக்கைச் சென்றடைய முடியாத மாணவர்கள் அப்போது இங்கிலாந்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறின.
அடுத்துக் கல்விக் கட்டண உயர்வு குறித்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நாளான 9.12.2010 அன்று ஒரு பெரும் மாணவர் கிளர்ச்சி லண்டன் நகரை மீண்டும் உலுக்கி எடுத்தது. இந்த முறை காவல் துறையினரால் யூகித்து அறிய முடியாத வகையில் அணிவகுப்பு மாணவர் அமைப்புகளால் திட்டமிடப்பட்டது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பாடல்கள் இசைத்த வண்ணம் சென்ற ஊர்தி ஒன்று மாணவர்களை வழிநடத்தியது. காவல் துறையினர் ஒவ்வொரு முனையாக மாணவர் ஊர்வலத்தைத் தடுக்கத் தடுக்க அங்கிருந்து மாற்றுப் பாதையில் அந்த ஊர்தியை வழி நடத்தி ஊர்வலத்தை நகர் முழுவதும் வியாபித்த ஒன்றாக அணிவகுப்பை ஏற்பாடு செய்தவர்கள் ஆக்கினர்.
மேலும் படிக்க
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

சீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு





கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அகில இந்திய அளவிலான 49 பங்கேற்பாளர்களைக் கொண்ட உள் அரங்க மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 ம் நாள் செல்லூர் கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. உள்அரங்கில் நடைபெற்ற மாநாட்டினை தோழர் எஸ்.சங்கர் சிங்கும் தோழர் அ.ஆனந்தனும் தலைமையேற்று நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கொடியினைத் தோழர் சங்கர் சிங் ஏற்றினார். அதன்பின் சி.டபிள்யு.பி.யின் அகில இந்திய அமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள சூழ்நிலையை விளக்கும் அறிக்கை மீதான விவாதம் நவம்பர் 19ம் நாள் நடைபெற்றது.
நவம்பர் 20 அன்று சர்வதேசிய, தேசிய சூழ்நிலைகளை விளக்கும் ஆவணம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அது இரு கூட்டத் தொடர்களில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சியின் அமைப்புச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப் பட்ட பின்னர் புதிய மத்தியக் குழு ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
மேலும் படிக்க
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 
http://maatrukkaruthu.blogspot.com/2011/02/blog-post_6559.html

மார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்



மாமேதை லெனின் கூறினார்: நடைமுறை இல்லாத தத்துவம் வறட்டுத் தத்துவம்; தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டு நடைமுறை என்று. தத்துவத்தை அது பகட்டாகத் தங்கியிருந்த தந்த மாளிகையிலிருந்து விடுவித்து இதுவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உலகத்தை நடைமுறைகளோடு பொருத்திக் காட்ட மட்டுமே செய்தன; ஆனால் தேவை என்னவென்றால் அதனை மாற்றுவதே எனக் கூறிய மாமேதை மார்க்ஸின் கருத்தை ரஷ்யப் புரட்சியின் மூலம் நிரூபித்ததோடு தத்துவம் நடைமுறை ஆகிய இரு அம்சங்களின் உருவகங்களாகவும் விளங்கியவர்களே மாமேதைகள் லெனினும், ஸ்டாலினும் ஆவர்.
புகழ்ச்சியும் இகழ்ச்சியும்
யாராவது ஒருவர் வரலாற்றிலேயே அவர் வாழ்ந்த காலத்தில் வானளாவப் புகழவும் அவரது மறைவுக்குப் பின் கடுமையாக இகழவும் பட்டார் என்றால் அவர் மாமேதை ஸ்டாலினாகத்தான் இருப்பார். இவ்வாறு நாம் கூறுகையில், ஆம் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் யாரால் அவரை விமர்சித்திருக்கவும் இகழ்ந்திருக்கவும் முடியும்? அத்தகைய கொடுங்கோலராயிற்றே அவர் என்று சிலர் கூறக் கூடும். ஏனெனில் அத்தகைய பொய்ப் பிரச்சாரம், பொய் வரலாறு அவர் குறித்து எழுதவும், கற்பிக்கவும் பட்டுள்ளது.
மேலும் படிக்க 
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

ஒரு பொதுத்துறை நிறுவனம் கொள்ளை போவதைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் அரசியல் சந்தர்ப்பவாதம்



ஒரு நாட்டின் தொழில்கள் தேசியமயமாக்கப் படுவதற்கும், சமூக மயமாக்கப்படுவதற்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன. உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது சில தொழில்கள் தேசிய மயமாக்கப் பட்டவையாகவே உள்ளன. அவ்வாறு சில தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டு அரசுத் துறையில் இருப்பது அரசாங்கங்களுக்கு அவசியமாகவும் உள்ளது.
அதாவது தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்து பாரபட்சமின்றி அனைத்து முதலாளித்துவத் தொழில்களின் வளர்ச்சிக்கும் தேவையான ஆதார வசதிகளைக் குறைந்த செலவில் செய்து தருவது முதலாளித்துவ அரசுகளுக்கு அவசியமாக உள்ளது. அதைத் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனங்கள் செய்கின்றன.
ஆனால் இவ்வாறு முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் தேசிய மயத்தையும் அரசுத்துறையில் இருக்கும் தொழில்களையும் சோசலிசத்தின் சுவடுகள் என்று கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் கூட நமது நாட்டில் தவறாகக் கருதுகின்றன. இங்கு மட்டுமல்ல அப்போக்கு வெவ்வேறுபட்ட அளவுகளில் உலகின் பல நாடுகளிலும் நிலவுகிறது.
மேலும் படிக்க மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு  

கல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மாற்றப் படாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு இல்லை




மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
ஒரு பிரச்னை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு வராத நிலையில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குனரகம் எப்படி இந்த அறிவிப்பினைச் செய்தது என்பதே ஒரு ஆச்சரியமான வி­யம். அநேகமாக சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் நிலவுவதும் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான கண்ணோட்டம் பேராயருக்குத் தெரிந்த வெறெந்தக் கைவந்த கலையும் இடைத் தலையீடு செய்யாதிருந்திருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

மேலும் படிக்க
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு  
http://maatrukkaruthu.blogspot.com/2011/02/blog-post_9690.html

ஐபிஎல் ஆட்டமும், பீபிஎல் மக்கள் திண்டாட்டமும்


இந்திய திருநாட்டின் முகமூடி கொள்ளையார்கள் இரு வகையாக உள்ளனர் (இதை எழுதும் முகமூடி இல்லை) ஒன்று அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் அதை பயன்படுத்தி மக்கள் சேவை புரியாமல் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டாவது மக்களுடைய  உணர்வுகள் மற்றும் உழைப்பை சுரண்டும் வியாபாரிகள்.

மனிதனாக பிறந்த அனைவரும் உணர்வுள்ளவர்கள். நாம் எதில் அதிகம் ஆர்வம் கொள்கிறோமோ அது சார்ந்த பொருளாகட்டும், செயலாகட்டும் அதில் நம் உழைப்பை செலுத்துகிறோம் அல்லது நம் நேரத்தை செலவிடுகிறோம். அந்த வகையில் இன்றைக்கு இந்தியாவை கொள்ளை கொள்ள வரும் 4 மாதங்களில் அரசியல் வியாபாரிகளும், ஐபிஎல் வியாபாரிகளும் வரிசை கட்டி நிற்கின்றனர். அரசியல் வியாபாரிகளை பற்றி பிறகு பேசலாம்.

இந்திய மக்களின் உழைப்பை சுரண்ட தொடங்கி இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றைக்கு படிக்கும் மாணவர்களின் தேர்வு தயாரிப்பை முடிந்தவரை கெடுத்து கொண்டு உள்ளது.  மனித உணர்வுகள் எளிதாக வசப்பட கூடியவை என்று இந்த போட்டியினை நடத்தும் அமைப்புகள் உணர்ந்தது மட்டுமில்லாமல் இதன் மூலம் பெறக்கூடிய பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வெகு சிலரின் சட்டையை நிரப்ப போகிறது என்பதே உண்மை. இப்படி மக்களின் உணர்வுகளை கொண்டு ஒரு சந்ததியையே கெடுத்த கெடுக்கும் மனபாங்கு முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே அதிகமாக தென்படுகிறது. அதுவும் இந்த விளையாட்டுக்கள் அனைத்தும் சூதாட்ட முறையில் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய ஒரு விதமான திருட்டை இன்றைக்கு ஆள்வோர்கள் அதிகம் ஆதரிகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெட்கம் கெட்ட முறையில் ஆள்வோர்களே இந்த போட்டிகளை நடத்துகின்றனர். கோடை விடுமுறையை குறிவைத்து இதன் பிறகு  ஐபிஎல் என்கிற சூதாட்டத்தை மையமாக கொண்டு  நடைபெறும் போட்டிகள் இந்திய மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கபட்ட பணத்தை வெள்ளையில் (கணக்கில்) மாற்றி கொள்ள மட்டுமே உதவுகிறது.

 
நாட்டில் வறுமைகோட்டிற்க்கு கீழே உள்ள மக்களை (பிலோ பாவர்ட்டி லைன் - ஃபீபிஎல்) காக்க வேண்டிய ஆள்வோர்கள் மற்றும் முக்கிய துறை மந்திரியான விவசாய மந்திரி ஆகியோர் இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றனர். வெட்கம் இல்லாமல் விவசாய அமைச்சர் இந்த விளையாட்டு போட்டியின் தலைமை அமைப்புக்க தலைவராகிறார். திருடனிடம் சென்று திருட்டுக்கு நியாயம் கேட்பது போல உள்ளது.


 
உணவு தானியங்கள் அனைத்தும் வீணாகிவருவதை கண்டு பொறுக்காமல் இந்த அரசை பார்த்து கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றத்தை வார்த்தைகளால் தாக்கிய பிரதமர், சும்மா கிடந்து வீணாகி போனாலும் பரவாயில்லை இந்த தானியங்களை ஃபீபில் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க மாட்டோம் என்று சொல்லுகிறார். பசியோடு இருப்பவனுக்கு முன்னால் உணவை சாக்கடையில் கொட்டும் இந்த கயவர்கள் இந்த நாட்டின் தேச துரோகிகள். இவர்களா இந்த தேசத்தை நெறிபடுத்த போகிறார்கள்? இவர்களிடம் நாம் பீபிஎல் மக்களின் திண்டாட்டத்தை போக்க சொல்ல முடியாது அவர்கள் செய்யவும் போவது இல்லை. ஏன் என்றால் இவர்கள் முதலாளித்துவத்தின் அப்பட்டமான ஏஜெண்டுகள்.

எகிப்து , லிபியாவில் சரிய தொடங்கும் ஏகாதிபத்தியம்


கடந்த இரு மாதங்களாக உலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் உலகம் ஒரு புதிய மாற்றத்திற்க்கான முயற்சியை தொடங்க இருப்பதை காட்டுகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் தங்கள் அரசியல், சமூக, பொருளாதார நிலையினை மீள் பரீசிலனை செய்யக்கூடிய நிலைக்கு இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

வெறும் 25 லட்சம் மக்களை கொண்ட துனிசீய நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சி, உலகில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதமான பரிமாணங்களில் பயணிக்க தொடங்கியுள்ளது. 32 ஆண்டுகளாக எகிப்த்தை  ஆண்டு வந்த ஹோஸ்னி முபாரக் முப்பது நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் தன் பதவியை விட்டுதர வேண்டியுள்ளது என்பது, மக்கள் புரட்சியின் வீரியம் எந்த அளவு அதிகமானது என்பதை காட்டுகிறது. இதே போலதான் இன்றைக்கு 42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்டு வரும் கடாபியின் அரசாங்கமும் பரிதவித்து வருகிறது. இந்த மக்கள் எதிர்ப்பு என்பது எதை காட்டுகிறது? இந்த மக்கள் ஏன் இன்றைக்கு வீதிக்கு வந்து போராடுகிறார்கள்? இவ்வளவு ஆண்டு காலமாக ஆண்டு வந்தோர் ஏன் சில நாட்களில் இன்றைக்கு நாட்டை விட்டு ஓடி ஒளிந்துவிட்டனர்? இதற்கெல்லாம் என்ன பதில்.

இன்றைக்கு முதலாளித்துவத்தை பின்பற்றி வரும் நாட்டின் செல்வ வளங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளிலோ அல்லது ஒரு தலைமுறையிலோ முதலாளித்துவத்தால்  சுரண்டப்பட முடியாது என்பதால், முடிந்த வரை தன் எண்ண ஒட்டங்களுக்கு ஏற்ற ஒரு பொம்மை அரசை அனைத்து இயற்கை வள நாடுகளிலும் நிறுவுவதே முதலாளித்துவத்தை பின்பற்றும் அமெரிக்க பேரரசின் மறைமுக திட்டமாகும். (இந்தியாவை பற்றி பிறகு அலசலாம்) இன்றைக்கு எகிப்து, லிபிய மக்களுக்காக குரல் கொடுக்கும் இதே அமெரிக்கவிற்கு எகிப்து மற்றும் லிபியாவின் பொருளாதார நிலை குறித்து இதற்கு முன்பு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. முதலாளித்துவத்தின் முக்கிய அம்சமே தேவைக்கு அதிகமான நுகர்வை திணிப்பதுதான்
தேவைக்கு அதிகமான நுகர்வை ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களின் மீது திணிக்கும்போது அங்கு சில விளைவுகள் ஏற்படும். முக்கியமானதாக நுகர்வினால் ஏற்படும் தேவைகள் பல்கி பெருகும், அதன் பொருட்டு அந்த தேவையின் பொருட்டு ஏற்படும் போட்டி என்பது நியாயமான வர்த்தக நெறிகளை முறிக்கும், லாபம் ஒன்றே குறிக்கோள் என்கிற நிலையினை இந்த போட்டி ஏற்படுத்தும். இதன் மூலம் வர்த்தக சமன்பாடு என்பது இல்லாமல் போய்விடும். இதுதான் முதலாளித்துவம் ஏற்படுத்தும் மிக முக்கிய விளைவாகும்
தேவைக்கு அதிகமான நுகர்வை திணிக்கும் போது ஏற்பட கூடிய விளைவால் அந்த நாட்டின் இயற்கை வளங்களை அழிக்க அங்கு உள்ள அரசாங்கங்கள் தொடங்கும். அப்படிதான் 30 முதல் 40 ஆண்டு காலமாக முதலாளித்துவம் எகிப்த்தையும், லிபியாவையும் மேற்க்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் நாடுகளாக மாற்றி அங்கு தனிமனித நுகர்வை பல மடங்கு அதிகபடுத்தியது. ஒரு நாட்டில் நல்ல மாற்றமோ தீய மாற்றமோ கலாச்சாரத்தில் கொண்டுவந்து விட்டால் எளிதாக அந்த மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். அதைதான் முதலாளித்துவம் எகிப்த்திலும், லிபியாவிலும் இன்னபிற நாடுகளிலும் செய்தது. இயற்கை வளத்தை அழிக்க தொடங்கும் (நேரிடையாக அழிக்காமல், முதலாளித்துவ மற்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இயற்கை வளத்தை நுகர்வுக்கு மாற்றும் தொழில்கள் தொடங்கப்படும்) போது அதன் மீதான தாக்கம் இரண்டு வகையாக வெளிப்படும்.
முதலாவதாக, இப்படி இயற்கை வளத்தை எடுத்து அதன் மூலமான தொழில்கள்  தொடங்கும் போது வெளிப்படும் இறுதி உற்பத்தி பொருள்கள் ஒன்று முதலாளித்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் பொருட்டு ஏற்கனவே திணிக்கப்பட்ட நுகர்வினால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மேலும் அதிகமாகும் அதன் பொருட்டு விலைகள் உயரும்.
இரண்டாவதாக ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பிட்ட அளவே இயற்கை வளத்தை கொண்டுள்ளது. இப்படி மொத்தமாக இயற்கை வளம் அழிக்கப்படும் போது, ஒரு கட்டத்திற்க்கு பிறகு இயற்கை வளம் என்பது இல்லாமல் போவதால் அடிப்படை தேவைக்கான நுகர்வு பொருள்கள் கிடைக்காமல் சென்று விடுகிறது. இது மறைமுகமாக வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அவை என்னவென்றால், அத்தியவிசய பொருள்கள் மீதான விலையேற்றம், வேலை இழப்பு, இயற்கை பயன்பாட்டு தொழிலான விவசாயம் அழிதல் ஆகியன ஆகும்
இப்படி இரு வகையான தீய விளைவால், ஒரு கட்டத்திற்க்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு செல்ல மக்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவார்கள். அப்படி செல்ல நினைக்கும்  போது இழந்துவிட்ட இயற்கையை மனிதன் உருவாக்க முடியாது. உதாரணமாக, விளைநிலங்கள் அனைத்தும் இன்றைக்கு மனை நிலங்களாகவும், பொருளாதார மண்டலங்களாகவும் மாறி வருகிறது. இதே நிலை நீடித்தால் மக்கள் ஒரு 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு பிறகு மக்களுக்கு உணவு தானியங்களும், காய்கறிகளும் கிடைக்காமல் செல்லும் போது திரும்பவும் விவசாயத்தின் மீதான பக்கம் வேறுவழியில்லாமல் திரும்புவர். ஆனால் அன்றைக்கு விவசாயம் செய்ய நிலம் என்பது இருக்காது.
மேற் சொன்ன உதாரணம்தான் இன்றைக்கு துனிசியாவிலும், எகிப்திலும், லிபியாவிலும் நடந்துள்ளது. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் அமெரிக்காவால் வளர்க்கப்பட்டு போலி புரட்சி நாயகர்களால் இத்துனை ஆண்டுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது. இந்த நாட்டில் இருந்து வெளிசென்ற இயற்கை வள மாற்று பொருள்கள் அனைத்தும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவிற்க்கும், இங்கிலாந்திற்க்கும் தான் அதிகமாக சென்று இருக்கும். துரதிருஷ்டவசமாக இவை அனைத்தும் இன்றைக்கு வரலாற்றில் வர்த்தக எண்களாக (Statistical Records) மாறி இருக்கும்.

எந்த முதலாளித்துவம் போலி புரட்சியாளர்களான முபாரக்கையும், கடாபியையும் வளர்த்துவிட்டதோ அதே முதலாளித்துவம் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன்னால் வளர்த்தப்பட்டவர்களை வரலாற்றில் மக்கள் விரோதிகளாக சித்தரித்து தப்பித்து கொள்ளும். அந்த கலையில் சிறந்ததுதான் அமெரிக்கா.
 

முகப்பு

புதிய பதிவுகள்