வியாழன், 30 ஜூன், 2011

நாகர்கோவில் - 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நிர்வாகத்தை அரசே ஏற்கக்கோரி ஆட்சியரிடம் மனு.

..ம்ம்என்றால்பணியிடமாற்றம்ஏன் என்றால்   பணிநீக்கம்   என்று  பலருக்கும்   அவசர காலத்தில் உதவி செய்து  உயிர் கொடுக்கும்    108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர்கள் 12  மணிநேரத்திற்கு  மேல்  வேலை  , குறைந்த ஊதியம் , சொந்த  மாவட்டத்தில்  பணியில்  அமர்த்தாது , மற்றும்  பணிபளுவின் கொடுமை  தாளாமல்  இன்று 30 .06 .2011 ,    தங்களுக்கு மேலதிகாரிகளால் இழைக்கப்படும் துன்பங்களை நீக்கக்கோரியும்பணிநிரந்தரம், ,மருத்துவ காப்பீடுசம்பள உயர்வு ,மற்றும்   தொழிலாளர் நலச்சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தை அளித்து கொள்ளை லாபம் அடித்து வரும்  ஜி வி கே -  விடம் இருந்து .எம்.ஆர். 108  ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை அரசே ஏற்று  நடத்த கோரியும்,  மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் 108  ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறுதி அளித்தார்.புதன், 29 ஜூன், 2011

கிரீஸில் மக்கள் போராட்டம் வலுக்கிறதுகிரீஸ் நாட்டில் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளால் மக்களின் வாழ்நிலையில் பெரும் பாதிப்புகள் உண்டாகி நாடே திவாலாகி போய்விட்டது. சர்வதேச நிதி நிறுவனமும் ஐரோப்பிய யூனியனும் கிரீஸை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து கடுமையான சிக்கன நடவடிக்கையை அந்த நாட்டின் மக்கள் தலையில் சுமத்தி உள்ளன.   வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. வேலையில் இருப்பவர்களின் சம்பளமும் பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. சரியான தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள் இல்லாத போதும் மக்கள் தன்னிச்சையாக பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிராக தினம் தோறும் பலவிதமான  போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமாக போராட்டங்களில் பங்கு கொள்கிறார்கள். மக்களிடையே போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

திங்கள், 27 ஜூன், 2011

காக்கோரி தியாகிகள்


ஒரு ஆயுத எழுச்சிக்கான தயாரிப்பு வேலைகளுக்கு ஆகும் செலவுகளை 
ஈடுகட்டுவதற்காக இந்திய மக்களை கொள்ளையடித்து ஆங்கில  அரசாங்கம் சேர்த்து வைத்துள்ள, அரசு கஜானாவை நாம்  கொள்ளையடிப்பது என்று ராம்பிரசாத் பிஸ்மில் தலைமையில் HRA   முடிவு  செய்தது 1925 ஆகஸ்ட் 9ம் நாள் மாலையில் அரசு கஜானாவுடன் சாகியான் பூரியிலிருந்து, லக்னோ சென்று கொண்டிருந்த ரயில் , காக்கோரி ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்திய புரட்சியாளர்கள், ரயிலில் வந்த கஜானாவை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். ஆங்கில அரசாங்கம் அதிர்ச்சியடைந்தது. ராம் பிரசாத் பிஸ்மில் , ராஜிந்தர் லஹிரி , தாக்கூர் ரோஷன் சிங் , சசிந்தர பக்க்ஷி ,சந்தரசேகர் ஆசாத், அஸ்பக் உலாகான் உள்ளிட்ட இருப்பத்தைந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சந்தரசேகர்  ஆசாத்தை தவிர மற்ற அனைவரும் கைது செயப்பட்டனர்.

சனி, 25 ஜூன், 2011

சாதாரண மக்களா? - பெரும் முதலாளிகளா ? உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல் , டீசல் விலைஏற்கனவே பெட்ரோலின் விலை  ஏறியுள்ளதையே தாங்க முடியாமல்  தவிக்கும் சாதாரண மக்களுக்கு மத்தியில் ஆளும் மன்மோகனின் முதலாளித்துவ அரசு போனஸ் பரிசாக டீசலை  லிட்டருக்கு ரூ.3-ம், மண்ணெண்ணெய் (கெரசின்) விலை லிட்டருக்கு ரூ.2-ம், சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50-மாக  விலையை உயர்த்தியுள்ளது. 

வெள்ளி, 24 ஜூன், 2011

அரசு பள்ளி மாணவன் தற்கொலையும் , ஆசிரியர்களின் ஆணவப்போக்கும்


 சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி  அரசு மேல்நிலை பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் தாசநாயக்கன் பட்டி காலனியை சேர்ந்த சேகர் - அமலா தம்பதியின் கடைசி மகனான   சீனிவாசன்  தன்னுடைய வகுப்பில் கணிதப்பாடம் நடத்தும் ஆசிரியரிடம் அவர் பாடம் எடுப்பது மாணவர்களுக்கு சுத்தமாக  புரியவில்லை என்றும்  புரியும்படி வகுப்பு எடுக்குமாறும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கணித ஆசிரியரோ மாணவர்கள் சொல்வதை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், கணிதப்பாடத்தை கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு சென்றுவிடுவார்.

வியாழன், 23 ஜூன், 2011

அனைத்திந்திய மத்திய தொழிற் சங்கங்கள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்


முதலாளித்துவ நிறுவனங்களின் முறைகேடுகளினால் ஏற்பட்ட நஷ்டத்தை சாதாரண மக்கள் மீது பெட்ரோலியப் பொருள்களின் விலையுயர்வாக சுமத்தும் மத்திய அரசின்   போக்கை கண்டித்து பெட்ரோலியப் பொருள்களின் விலைவாசிக்கெதிரான  அனைத்திந்திய மத்திய தொழிற் சங்கங்கள் நடத்திய  கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில்  மெமோரியல் ஹாலில் 23 .06 .2011 அன்று மணிக்கு  நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பெட்ரோலியப் பொருள்களின் விலையுயர்வை திரும்ப பெற கோரியும் மத்திய தொழிற் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. COITU, INTUC, BMS, AITUC, HMS, CITU, AIUTUC, AICCTU, UTUC, SRMU, வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, துறைமுகம், பொதுத்துறை, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய தொழிற் சங்கங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன. பெட்ரோலிய பொருள்களின் விலைவாசிக்கெதிரான  அனைத்திந்திய தொழிற் சங்கங்களின் கூட்டுப் போராட்டம் இத்தோடு நின்று விடாமல் அனைத்து தொழிலாளர்களையும் அணி திரட்டி வெற்றி பெரும் வரை தொடர்ந்து போராடுவோம். வெல்வோம்! 

புதன், 22 ஜூன், 2011

பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலையானது   இந்த  ஆட்சியில் 9 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கைகளில் எரிபோருள் நிறுவனங்களை கைப்பற்றி வைத்து கொண்டு, தங்களின் அதீத லாப நோக்கத்திற்காக வாரம் ஒரு விலையேற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஆந்திரா, மும்பை , குஜராத் பகுதிகளில் கிடைக்கும் எரிவாயுக்களை அரசையும் ,அதிகாரிகளையும் துணைக்கு வைத்து கொண்டு அதிக லாபம் கருதி  ஏற்றுமதி செய்கின்றன. இதனால் இந்திய அரசு பெரும் வருமான இழப்பை சந்திப்பதோடு அதிக விலைக்கு எரிவாயுக்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த எரிபொருள்களின் விலையுயர்வால் பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் மட்டுமல்ல.சாதாரண உணவு பொருள்களில் இருந்து அனைத்து பொருள்களின் விலையும் ஏறிவிடுகிறது.குறிப்பாக காய்கறிகளின் விலை விண்ணை தொட்டு விடுகிறது.

திங்கள், 20 ஜூன், 2011

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - இன்றைய அத்தியாவசிய தேவை - நாகர் கோவில் கூட்டம்


நாகர் கோவிலில் மார்க்சிய சிந்தனை மையம் சார்ப்பில்  4வது மார்க்சிய படிப்பு வட்டம் சிறப்பாக நடைபெற்றது. 50 க்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . கடந்த மூன்று கூட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியறிக்கையின் 4 பாகங்கள் வாசிக்கப்பட்டன. 

மூத்த எழுத்தாளர் தோழர்.பொன்னீலன் அவர்கள் முந்தைய கூட்டங்களில்  வாசிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியறிக்கையின் அனைத்து பாகங்களையும் தொகுப்பாக எடுத்துரைத்தார்.  அத்தோடு தற்போது நடைபெற்று வரும் சுரண்டல் சமூக அமைப்புமுறையை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அன்றே தெளிவாக எடுத்துரைத்ததாகவும், ஏங்கல்ஸ்,   லெனின் , ஸ்டாலின் , மாவோ போன்றோர் அதை மேலும் செழுமைப்படுத்தினர் என்றும் எடுத்துரைத்தார்.

சனி, 18 ஜூன், 2011

மார்க்சிய சிந்தனை மையத்தின் 4 வது படிப்பு வட்டம்,நாகர்கோவில்


கட்சி வேறுபாடுகளை மறந்து மார்க்சிய செவ்விலக்கியங்களை படிப்பதன் மூலம் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் தேக்க நிலைமையை சரி செய்து கொள்ளும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் மார்க்சிய சிந்தனை மையம்.

வெள்ளி, 17 ஜூன், 2011

சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்

1947 இல் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்ற சுதந்திரம் இந்திய முதலாளிகளின் கைகளில் சென்று விட்டாலும் அந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து தாய்நாட்டின் அடிமைத்தளையை அறுத்தெறிய களம் இறங்கினர். இந்தியாவின் வடக்கே பகத்சிங் , ராஜகுரு ,சுகதேவ் ,சந்தரசேகர் ஆசாத் போன்ற ஈடு இணையற்ற சுதந்திர போராட்ட வீரர்களை போலவே தெற்கில் பாரதியார், வ.உ.சிதம்பரனார், வா.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா  போன்றவர்கள் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். இவர்களுள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆஷ்துரை என்ற கொடுங்கோலனை சுட்டுக்கொன்றதன் மூலம் தமிழக மக்கள்  மத்தியில் என்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் தியாகி வாஞ்சிநாதன்.

வியாழன், 16 ஜூன், 2011

தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள்: புரட்சித் திட்டத்தில் நேச சக்தி; நடைமுறைத் திட்டத்தில் எதிரி சக்தி

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ),  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்), ம.க.இ.க.-வின் அரசியல் கட்சியான மாநில அமைப்புக் குழு உட்பட அனைத்து எம்.எல். அமைப்புகளுக்கும் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவை அனைத்திற்கும் இடையே ஒரேயொரு ஒற்றுமை உண்டு. அது என்னவென்றால் இக்கட்சிகள் அனைத்தின்

புதன், 15 ஜூன், 2011

சமச்சீர் பாடத்திட்டம்: ஒரு சின்ன யோசனை


சமச்சீர் பாடத்திட்டத்தின் மூலம் படிப்படியாக சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்துவிடலாம் என்று சில இடதுசாரிகள் சொல்கிறார்கள். ஆனால் சமச்சீர் அற்ற ஒரு சமூகத்தில், சமூகத்தை சமச்சீர் ஆக்காமல் கல்வியில்மட்டும் சமச்சீரைக் கொண்டுவந்துவிட முடியும் என்பது ஓர் ஏமாற்று வேலை என்று உண்மையான இடதுசாரிகளுக்குத் தெரியும். இது ஒருபக்கம் இருக்கட்டும்.

மாருதி தொழிற்சாலையில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் - மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிக்கும் நிறுவனமான மாருதி நிறுவனம் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில்  2000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்கிறார்கள். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களால்  'மாருதி சுசிகி தொழிலாளர் சங்கம்' புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரினர். அதை நிர்வாகம் மறுத்து வந்ததோடு 11 தொழிலாளர்களை அதிரடியாக வேலையை விட்டு நீக்கி விட்டது. அதை கண்டித்தும் புதிய தொழிற் சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும்   தொழிலாளர்கள்  ஜூன் 4 , 2011 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு குர்கவுனில் உள்ள ஹீரோ ஹோண்ட , கெச்எம் எஸ்ஐ , ரிகோ ஆட்டோ ஆகிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மிகப்பெரிய போராட்டமாக இது பரவி வருகிறது. அந்த போராட்டம் வெற்றி பெற அந்த  தொழிலாளர்களுக்கு இயக்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.

செவ்வாய், 14 ஜூன், 2011

சமூக மாற்றம் நோக்கிச் சரியான பாதையில் மார்க்சியச் சிந்தனை மையமும் அதன் 3 ஆம் நாகர்கோவில் கூட்டமும்

 கடந்த மே 22ஆம் தேதி நாகர்கோவில் மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற மார்க்சிய சிந்தனை மையத்தின்  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மீதான விளக்க இரண்டாவது அரங்க  கூட்டத்தில் ஒரு பங்கேற்பகாளனாக நான் கலந்து கொண்டேன். தமிழகத்தில் குறிப்பாக தமிழக இடது சாரி அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரான தோழர் பொன்னீலன் அவர்களால் நடுவண் ஏற்று நடத்தப்பட்ட கூட்டம் அது. அக்கூட்டம் நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் போஸ், பிரசாத் மற்றும் தோழர் மகிழ்ச்சி அவர்களின் கூட்டுச் செயல்பாட்டினால் உருப்பெற்று தொய்வுறாத சமூக மாற்றச் சிந்தனையுடைய பல இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த இடது சாரித் தோழர்களின் சீரிய பங்கேற்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தோழர். சங்கர சுப்புவின் மகன் மரணம்

தோழர் சங்கர சுப்பு மனித உரிமைகள் மீறல் தொடர்ப்பான பல வழக்குகளை திறமையுடன் நடத்தியவர் ஆவர்.சமூக  அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வருபவர். தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் கடந்த 7ம் தேதி முதல் காணாமல் போனார்.  இவர் எப்படியும் உயிரோடு கிடைத்து விடுவார் என்று  அனைத்து தோழர்களும் நம்பிக்கையோடு இருந்தனர்.  இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஏரியில், தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் அவர்களின் சடலம், கைப்பற்றப் பட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.  அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.தமிழக அரசு உடனடியாக  உரிய விசாரணைகள் நடத்தி அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் . மகனை இழந்து வாடும் தோழர். சங்கர் சுப்புவிற்கும் அவரது குடும்பத்திற்கும்  இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

திங்கள், 13 ஜூன், 2011

ஒரிசா மக்களின் தீரம் மிக்க போராட்டம்


பாஸ்கோ தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் நடந்த ஒரிசா அரசின் அத்து மீறல்களுக்கு எதிராக ஒரிசா மக்களின் தீரம் மிக்க போராட்டம் வலுபெற இயக்கத்தின் வாழ்த்துகள்

சனி, 11 ஜூன், 2011

எம் எப் ஹுசேனின் மறைவும் ,இந்திய அரசு அவருக்கு தந்த மரியாதையும்அறிவியல்  தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் சிற்பக்கலை, நாடகங்கள், தெருகூத்துகள் ஆகிய அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து  போய்  விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொழிநுட்ப ரீதியாக அனைத்தையும் இணைக்கும்,   கலையாக சினிமா மட்டுமே இன்று விஞ்சி நிற்கிறது. அந்த சினிமாவும் வணிகரீதியாக என்ற போர்வையில் எந்த விதமான கலையுணர்ச்சியும் இல்லாதவர்களின் கைகளில் மாட்டிக்கொண்டுள்ளது.

புதன், 8 ஜூன், 2011

நாகர்கோவிலில் 'மார்க்சிய படிப்பு வட்டத்தின்' இரண்டாவது கூட்டம் - மதுரை, ஊட்டியிலும் நடத்த முடிவு

         
       
 கடந்த 29.05.2011   நாகர்கோவிலில் மூத்த எழுத்தாளர். பொன்னீலன் தலைமையில் 'மார்க்சிய படிப்பு வட்டம்' சார்ப்பாக இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஏற்கனவே  வாசித்த  பகுதிகளை  நினைவு படுத்திய எழுத்தாளர். பொன்னீலன்  மீதம் உள்ளவற்றையும் தமது செறிவான உரையில்  நிகழ்காலத்து  ஒப்புமைகளோடு ஒப்பிட்டு அந்த கூட்டத்தை செம்மையாக   நடத்தினார். தோழர்.ஆனந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். சிபிஎம்,  சிபிஐ, சிபிஐ(எம்.எல்), CWP மற்றும் பல கட்சிகளை   சேர்ந்த  தோழர்கள்  இந்த  கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  கூட்டம் கம்யூனிஸ்டுகளின்  ஒற்றுமைக்கு  உதாரணமாக கண்ணியமாக  நடைபெற்றது. மேலும் இது போன்ற மார்க்சிய படிப்பு வட்டத்தை மதுரை , ஊட்டி  போன்ற பகுதிகளிலும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மார்க்சிய படிப்பு வட்டத்திற்கு முன்முயற்சி எடுத்தவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த தோழர்கள். மகிழ்ச்சி, போஸ், பிரசாத் ஆகியோர்கள் ஆவர்.

முகப்பு

புதிய பதிவுகள்