வியாழன், 22 டிசம்பர், 2011

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி - பட்டாசுத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டறிக்கை


 ஜூலை - ஆகஸ்ட் ,2005 மாற்றுக்கருத்து 

கடந்த 02 .07 .2005 அன்று சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோரா வெடி விபத்து குறித்து உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ் அவர்களும் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் தோழர்.தங்கராஜ் அவர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:

சோவியத் ரசியாவின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலின் பிறந்த தினம்

சோவியத் ரசியாவினை கட்டமைத்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஸ்டாலின் 132 வது பிறந்த தினம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 18  தேதி அனுசரிக்கப்பட்டது. ஊழல்வாதி புதின் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரசிய மண்ணில் ஸ்டாலின் பிறந்த தின ஊர்வலம் செஞ்சதுக்கத்தில்  கூடுதல் உற்சாகத்தோடு அனுசரிக்கப்பட்டது. இது  உலகம் முழுவதும் இருக்கும் பாட்டளிவர்க்கதிற்கு உற்சாகம் அளிக்ககூடிய செய்தியாகும். முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும்  இன்று வரை தோழர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஏனெனில் ஸ்டாலினால் முன்னேடுத்து செல்லப்பட்ட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றும் கூட முதலாளித்துவ அரசுகளுக்கு அச்சம் தருபவையாகவே இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் கொடிய நாசிசத்தின் பிடியில் இருந்து உலகமே தோழர் ஸ்டாலின் தலைமையிலான ரசியா செம்படையால் காப்பற்றப்பட்டது. சென்ற நூற்றாண்டின் பாட்டளிவர்க்கதின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலினை நினைவு கூர்வோம். 

புதன், 21 டிசம்பர், 2011

வரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்


தத்துவ ஞானிகள் பல வழிகளில் நிலவும் சூழ்நிலைகளோடு இந்த உலகை பொருத்திக் காட்டுவதை மட்டுமே செய்தனர்; ஆனால் கேள்வியே அதை மாற்ற வேண்டும் என்பது தான். 

                                                                                   -காரல் மார்க்ஸ்


வரலாற்றில் நாம் அனைவரும் நினைவு கூற வேண்டிய சில தினங்களை தொகுத்துள்ளோம்.வாசகர்கள் இதை மேலும் செழுமைப்படுத்தும் படி   கேட்டுக்கொள்கிறோம். 

திங்கள், 19 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணையை காக்க மதுரையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று பல்வேறு பொய் பிரச்சாரங்களை  கேரளா ஆளும் கட்சியான காங்கிரசும் , எதிர் கட்சிகளான   சி.பி.எம்., சி.பி,ஐ., பி.ஜே.பி.போன்ற கட்சிகளும் தீவிரமாக செய்து வருகின்றன. கேரளா மக்களிடையே பயத்தை உண்டாக்கி மக்களிடையே பிரிவினை வாதத்தை தொடர்ந்து தூண்டி விட்டு வருகின்றனர். கேரளா அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் இந்த பிரிவினைவாத போக்குகளை கண்டித்தும் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க  கோரியும், தமிழகமெங்கும் உண்ணாவிரதம், மறியல், ஊர்வலம் என்று  பல்வேறு வழிகளில் மக்கள் போராடி வருகின்றனர்.

சனி, 17 டிசம்பர், 2011

பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் - தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

  கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை.

கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.

புதன், 14 டிசம்பர், 2011

துணிந்து செல்: தன்னெழுச்சியாக திரண்டு நிற்கும் மக்கள் படை


சி.பி.எம்., சி.பி.ஐ, காங்கிரஸ் , பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் கேரளாவில் பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு முல்லை பெரியாறு அணையை இடித்தே ஆக வேண்டும் என்று பல்வேறான பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். எதிர் கட்சி தலைவர் அச்சுதானந்தன் பிரிவினைவாதத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருக்கிறார்.

திங்கள், 12 டிசம்பர், 2011

அச்சுதானந்தனின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் , முல்லை பெரியாறு அணையை காப்போம்


கம்யூனிஸ்டுகள் சர்வதேசியவாதிகளாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்ப்பட்டு எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால் கேரளா மாநில சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தனோ தமிழக மக்களின் வாழ்வாதாரமாகவும், வலுவோடும் உள்ள , முல்லை பெரியாறு அணையை தனது அரசியல் சுயலாபங்களுக்காக பொய் பிரசாரங்களை இடைவிடாது மேற்கொண்டு  கேரளா மக்களிடம்  பிராந்திய வாத வெறியை தூண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே இப்படி இருக்கும் போது அங்குள்ள மற்ற கட்சிகளான காங்கிரஸ் , பி.ஜே.பி., மற்றுமுள்ள உதிரி கட்சிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.

சனி, 10 டிசம்பர், 2011

கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நெஞ்சை உருக்கும் செவிலியர்களின் உயிர் தியாகம்


9 .12 .2011 , அன்று கொல்கத்தாவில் உள்ள AMRI தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட கோரமான  தீ விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உட்பட 90 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் அதிக உயிரழப்பிற்கு முக்கிய காரணம், இந்த மருத்துவமனை  நெருக்கமான பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததும், போதியளவு அவசர கால தீயணைப்பு கருவிகள் இல்லாததும்,தீ விபத்து ஏற்பட்டவுடன் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்காததும் தான்  என்று தெரியவந்துள்ளது.  

டிசம்பர் 11 - பாரதி பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ?

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

வெள்ளி, 9 டிசம்பர், 2011

ஊழல்வாதி புதினுக்கு எதிராக ரசியா மக்களின் எழுச்சி


பாட்டாளிவர்க்கத்தின் மாபெரும் தலைவர்கள்  தோழர்.லெனின், தோழர்.ஸ்டாலின் போன்றவர்கள் தலைமையில் வழி நடத்தப்பட்ட  சோவியத்  ரசியா, உலகம் முழுவதும் உள்ள பாட்டாளிவர்க்கத்தின் பாதுகாவலானாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து பல நாடுகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. பாசிச வெறி பிடித்த ஹிட்லரிடம் இருந்து இந்த உலகத்தை இரண்டாம் உலகப்போரின் போது காப்பாற்றியது. அந்த போரின் போது ஏற்பட்ட மொத்த இழப்பையும் ஒரு தாயின் பெருந்தன்மையோடு  தன்னுள் அது தங்கி கொண்டது. ஹிட்லரின் நாசிச படையை ரசியா மண்ணில் வீழ்த்தியது வெறும் ஆயுதங்கள் மட்டும் அல்ல, தோழர்.ஸ்டாலின் தலைமையில் அங்கு உயிர்ப்போடு பராமரிக்கப்பட்ட  அந்த மக்களின் மனவுறுதி தான் மிகப்பெரிய ஹிட்லரின் ராணுவத்தையே வீழ்த்தியது.தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் தொழில்நுட்பத்தை, மருத்துவ கருவிகளை, உலகம் முழுவதும் அன்று விடுதலை அடைந்த நாடுகளுக்கு வாரி வாரி வழங்கியது சோவியத் யூனியன்.

புதன், 7 டிசம்பர், 2011

கருத்து சுதந்திரத்திற்கு சமாதிகட்ட கிளம்பிவிட்டார் கபில் சிபல்

இங்கு பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு, சங்கம் அமைக்கும் உரிமை உண்டு, கூட்டம் போடும் உரிமை உண்டு  என உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று புகழப்படும் இந்தியாவைப்பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகள் (சி.பி.எம்., சி.பி.ஐ.உட்பட ) பெருமையாக புகழ்வதுண்டு. ஆனால் இங்கு ஒரு பொது கூட்டத்தையோ, ஒரு கருத்தரங்கத்தையோ நடத்தி பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் (காவல்துறையினர் கடைசி வரை அனுமதி தராமல்   அலையவிடுவார்கள்). பத்திரிக்கை நடத்தவேண்டுமெனில்  ஆயிரத்தியெட்டு விதிமுறைகளை கடந்து  பத்திரிக்கை கொண்டு வருவதற்குள் சொல்ல வந்த கருத்துகளே மறந்து போய் விடும்.அந்த அளவிற்கு விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

லண்டன் : மார்க்ஸ் வாழ்ந்த மண் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது

துன்பங்களில் உழன்டு கொண்டிருந்த தொழிலாளர்களின் துயர் துடைக்க உலகில் தோன்றிய தத்துவங்களில் உன்னதமான தத்துவத்தை தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த லண்டன் மாநகரத்தில், மார்க்ஸின் கனவை நனவாக்குவதை போல  தொழிலாளர்கள்  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இரண்டாம் உலக போருக்கு முன்பு முதலாளித்துவத்தின் தலைமை பீடமாக  இருந்த இங்கிலாந்தில்  சில மாதங்களுக்கு முன்பு தீ போல பரவிய வேலை இல்லாத இளைஞர்களின் போராட்டங்களை அதிகார  வர்க்கம் வெற்றிகரமாக அடக்கியது.அந்த போராட்டத்தின் உண்மை தன்மை வெளிவரமால் அது இனவெறி கலவரம் என்று சப்பை கட்டு கட்டின முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால் பற்றி எரிகின்ற வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணமுடியாத நெருக்கடியில் முத்லாளித்துவதுவம் சிக்கி கொண்டுள்ளது.

சுப்ரமணியபுரம்: 80களின் காலக் கண்ணாடி

எந்த ஒரு கலைப்படைப்பும் தன் காலகட்டத்திற்கும், அக்காலகட்டத்தின் சமூக வாழ்க்கைக்கும் உண்மையானதாக இருந்தால் அது கதையாக இருக்கும் போது அதை எழுதியவரோ அல்லது திரைப்படமாக இருந்தால் அதை எடுத்தவரோ கூட வெளிப்படையாக கூற முன்வராத பல விஷயங்களை படிப்பவர் அல்லது பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துவதாக அமையும்.

மேலும் படிக்க  

சனி, 3 டிசம்பர், 2011

எஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மைமாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்
தருணங்களும் காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை. சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான். 
மேலும் படிக்க

வெள்ளி, 2 டிசம்பர், 2011

எழுத்தாளர் கணேசலிங்கனுடனான நமது சந்திப்பு


மார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பார்வை கொண்டவரும் அவ்வழியில் செவ்வானம், சடங்கு, நீண்டபயணம் போன்ற தலைசிறந்த நவீனங்களை எழுதியவரும், குந்தவைக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், மான்விழிக்கு கடிதங்கள் போன்ற நூல்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை எல்லோரும் படிக்கும் விதத்தில் எளிய முறையில் எடுத்துச் சொன்னவரும், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக விளங்குபவருமான செ. கணேசலிங்கன் அவர்கள் 05-06-2008 அன்று மதுரைக்கு வந்திருந்தார்.

வியாழன், 1 டிசம்பர், 2011

ஸ்டாலினுக்குச் செல்லமான‌ "குட்டிச் சிட்டுக் குருவி" ஸ்வெட்லானா மரணம்; ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு தருணம்வரலாற்றில் மிக அதிகமாக வசைபாடப் பட்டவர்; தவறாக சித்தரிக்கப்படுபவர் ஸ்டாலின் ஒருவரே என்றால் அது மிகையல்ல. லெனின் ஸ்தாபித்துக் கொடுத்த சோவியத் நாட்டில் லெனினிசத்தை மிகச் சரியாகக் கடைபிடித்து சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் என்பதனால் ஸ்டாலின் மீது முதலாளித்துவ - ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கடுங்கோபம். எனவே அவர்கள் அடிப்படையற்ற அவதூறுகளால் ஸ்டாலின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் பொய்ச்சித்திரம் மங்கி மறைந்துவிடாமல் இருப்பதற்காக கிடைக்கும் தருணம் எதையும் பயன்படுத்த அவர்கள் தவறுவதேயில்லை. உலகளவில் முதலாளித்துவம் மூன்றாவது உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் கவனம் சோசலிசத்தீர்வை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது, ஸ்டாலினால் "குட்டிச் சிட்டுக் குருவி"(Little Sparrow) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது மகள் ஸ்வெட்லானாவின் மரணம்.

புதன், 30 நவம்பர், 2011

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

பேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால்  ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதிலும் மனித உரிமைகளை மீறுவதிலும் முன்னோடியாகவும் , அரசின் அடியாட்களாகவும்  உள்ள காவல் துறையினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது  என்று காவல் துறைக்கு ராணுவத்தில் உள்ளதை போலவே  சிறப்பு கேண்டின்களை திறக்க உத்தரவிட்டுள்ளார். அத்தோடு ரூபாய்.47 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று காவல் துறைக்கு அள்ளி கொடுக்கிறார், ஏனெனில் மக்கள்   அநீதிகெதிராக திரண்டெளுந்தால் அவர்களை அரசின் மீது  விசுவாசத்தோடு காவல் துறை அடித்து நொறுக்கும் அல்லவா?

செவ்வாய், 29 நவம்பர், 2011

பால் மற்றும் பேருந்து கட்டணத்தின் மீதானக் கடுமையான விலை உயர்வு சமூக மாற்றம் பேணும் சக்திகள் செய்ய வேண்டியது என்ன?

 தமிழக அரசு தற்போது ஆவின் பால் விலையையும், பேருந்து கட்டணத்தையும் மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய்.7ம், பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 80 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள குறிப்பாக ஏழை எளிய மற்றும் மத்தியதர மக்கள் தலையில் பேரிடியாகத் தற்போதைய தமிழக அரசின் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு இறங்கியுள்ளது. இது போதாதென்று மின் கட்டணமும் கூடிய விரைவில் உயர்த்தப்படும் என்ற தமிழக அரசின்  ‘இனிப்பான’’’ செய்தியை  எப்படிக் கைக்கொள்வதெனத் தெரியாது தமிழக மக்கள் விழிபிதுங்கிக் கொண்டுள்ளனர்.

திங்கள், 28 நவம்பர், 2011

இந்தியாவில் நிலப்பிரபுக்களை எந்த எலிப் பொந்துக்குள் தேடுவது? புதிய ஜனநாயகம் பேசும் புரட்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்களா?


பொய் எதிரிகளும் - நிழல் யுத்தங்களும்
                மார்க்சிஸத்தின் சமூக மாற்றக் கண்ணோட்டத்தின் அடிப்படையே சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை மாற்றும் வகையில் போராட்டத் திட்டங்களை வகுத்தெடுப்பது குறித்ததுதான். இன்று இந்திய சமூகத்தின் அடித்தளமாக நிலவுகின்ற பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாகும்.  
        இவ்வாறு நாம் குறிப்பிடுகையில் CPICPI(M)CPI(ML) போன்ற கட்சிகள் இந்தியாவில் நிலவுவது முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லைநாட்டின் பல இடங்களில் நிலபிரபுத்துவ உற்பத்தி முறையே நிலவுகிறது என்பதே தங்களது அரசியல் கணிப்பாகும் எனக்கூறலாம்.  அக்கணிப்பினை தவறானதென்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை  முன் வைக்க முடியுமென்றாலும் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இவர்கள் ஒரு கேள்விக்கு விடை கூற வேண்டி வரும்.  

ஞாயிறு, 27 நவம்பர், 2011

எது வளரும் முரண்பாடு -நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்


27 .11 .2011 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும்  இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால்  கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட  இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி இந்த மாதம் எடுக்கப்பட்டது.

பகத்சிங் படத்தை திரையிட ஐ.எப்.எப்.ஐ. மறுப்பு


பகத்சிங் பற்றிய 'இன்குலாப்' என்ற குறும்படத்தை சண்டிகரை சேர்ந்த கவ்ரவ் சாப்ரா இயக்கியிருந்தார். அந்த படம் 42 வது இன்டர்நேஷனல் பிலிம்  பெஸ்டிவல் ஆப் இந்திய (ஐ.எப்.எப்.ஐ)ல் திரையிட தெரிவு  செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் ஐ.எப்.எப்.ஐ.ல் திரையிட மறுக்கப்பட்டுவிட்டது. 

வெள்ளி, 25 நவம்பர், 2011

சரத் பவாருக்கு விழுந்த அறை ! ஒரு எச்சரிக்கை


24 .11 .2011 அன்று டில்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கத்திலிருந்து வெளியே வந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில் சிங்கம் போல் பாய்ந்து வந்த இளைஞர் ஹர்விந்தர் சிங் ஓங்கி ஒரு அறை விட்டார். அவரை காவல் துறையினர் சுற்றி பிடித்த போது அவர் கோபத்தோடு "ஊழல்வாதிகளுக்கு இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"என்று கூறினார். இந்த கோபம் ஹர்வீந்தர் சிங்க்கு மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள 90 % மக்களுக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது.

வியாழன், 24 நவம்பர், 2011

பிஸியோதெரபி மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும், அவர்களின் சமுதாயக் கடமையும்

  உடல் இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) இன்று உலக அளவில் ஒரு வளர்ச்சியடைந்த நவீன மருத்துவ முறையாகும். மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி வளர்ச்சியடைந்த இம்மருத்துவமுறை இன்று இந்தியாவிலும் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவமுறையாக உருவெடுத்துள்ளது.உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடுகளைப் போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி மருத்துவம் வளர்ந்துள்ளது. வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதாகவும்; வலுவிழந்த தசை, தசைநார், நரம்புகளை உடலியக்க அணுகுமுறையில் வலுப்படுத்துவதாகவும்; இதய சம்பந்தமான நோய்களின் உடலியக்க பயிற்சிகளின் மூலம் சரி செய்வதாகவும்; மூளை வளர்ச்சி கோளாறுகள் மேலும் பெண்களுக்கு பொதுவாகவும் குறிப்பாக கர்ப்ப காலங்களில் ஏற்படும் உடலியக்க கோளாறுகளை சரி செய்வதாகவும்; எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உட்பட அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் மிகவும் தேவைப்படக்கூடிய ஒரு உடன் மருத்துவமாகவும்; நூறு சதவீதம் உடலியக்க நோய்களுக்கான பிரிக்க முடியாத மருத்துவமுறையாக பிஸியோதெரபி மருத்துவம் இன்று வளர்ச்சியடைந்துள்ளது.
மேலும் படிக்க

செவ்வாய், 22 நவம்பர், 2011

ஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்

                                 முதற்பதிப்பு:டிசம்பர் 2003
கோயில்களில் பறவைகளையும் விலங்குகளையும் பலி கொடுப்பதை தடை செய்யும் வகையில் 1950 முதல் இருந்து வரும் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு சமீபத்தில் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது.  இந்த ஆணை பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே பல்வேறு விதமான பிரதிபலிப்புகளை  வெளிக்கொணர்ந்துள்ளது.  பல கட்சிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பான நிலைபாடுகளை இந்த விஷயத்தில் எடுத்துள்ளன.  எனவே தமிழக அரசின் இந்த ஆணை இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ளதன் பின்னணி என்ன? இது போன்ற ஆணைகள் மற்றும் சட்டங்கள் குறித்து உணர்வு பெற்ற உழைக்கும்  வர்க்கத்தின் நிலை எதுவாக இருக்க வேண்டும்பல்வேறு கட்சியினர் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நிலையினை எடுக்கும் நிலைக்கு ஏன் இந்த விஷயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்? என்ற கேள்விகளை அலசி ஆராய்வது இந்தப் பிரசுரத்தின் நோக்கமாகும்.

திங்கள், 21 நவம்பர், 2011

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) - நவம்பர் தினப்பொதுக்கூட்டம்கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) அமைப்பின் நவம்பர் தினப்பொதுக்கூடம் 20.11.2011 அன்று மாலை 6 மணிக்கு தொடக்கி இரவு 9 மணி வரை தேனி, பகவதி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.  தோழர்  ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியை சேர்ந்த தோழர் வரதராஜ் , மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் ,தோழர்.சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)இன் தென்னிந்தியாவிற்கான பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  மிகவும் நேர்த்தியோடும் ஒழுங்கோடும் நவம்பர் தினப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.  தேனி பகுதி வாழ் உழைக்கும் மக்களுக்கு இந்த கூட்டம் ஒரு புது எழுச்சியை கொடுக்கும் விதமாக சிறப்புற நடைபெற்றது. 

தமிழக அரசு பால் , மின்சார , பஸ் கட்டணங்களை குறைக்கும் வரை தொடர் போராட்டங்களை நடந்துவோம்


தமிழக அரசு , ஆவின் , தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் , மற்றும் தமிழ்நாடு 
மின்சார வாரியங்களில் கீழ் மட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை வரைமுறை இல்லாமல்  நடைபெற்று வரும் ஊழலை ஒழித்தாலே இந்த அரசு நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கும். ஆனால் ஊழலில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை பங்கு வகிப்பதால் ,அந்த பங்குக்கு எந்தவிதமான தடையும் ஏற்படாமல் கட்டண உயர்வை சாதாரண ஏழை மக்கள் தலையில் சிறிதும் ஈவிரக்கமின்றி சுமத்தியுள்ளது ஆணவபோக்கு கொண்ட தமிழக அரசு. 

சனி, 19 நவம்பர், 2011

அமெரிக்க அரசின் கொடூர ஒடுக்குமுறையைத் தாண்டியும் தொடர்கிறது வால் ஸ்ட்ரீட் முற்றுகை

அமெரிக்க அரசின் முதலாளித்துவ கொள்ளைக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் அதுவாகவே நீர்த்து போகும் என்று கனவு கண்டது அமெரிக்க அரசு , ஆனால் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்திற்கு நாளுக்கு நாள் அமெரிக்கவில்  மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. போராட்டம் தீவிரமடைந்து அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைக்கிறது. போராட்டக்காரர்களை காவல் துறையினர் , பலவகையிலும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர். பூங்காகளில் தங்கியிருந்த மக்கள்  வலுகட்டாயமாக காவல் துறையினரால்  வெளியேற்றப்படுகின்றனர்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

இடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்

   (மாற்றுக்கருத்து  15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)
இடதுசாரி ஞானஸ்நானம் வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே  வரித்துக் கொண்டு, சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள் என்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில் இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன.  அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது, அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல.  தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும் சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும் கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில் வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப்பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வி­யங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.

விலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள பஸ்,பால், மின்சார கட்டண உயர்வு !

ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு , மற்றுமுள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் உழைக்கும் மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையில் தமிழக அரசு எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல பஸ் , பால் மற்றும் மின்சார கட்டணங்களை சாதாரண மக்கள் தாங்கிக்  கொள்ள முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளது . சட்டமன்ற தேர்தல் வெற்றி, உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்று அடுத்தடுத்த வெற்றிகளை மக்கள் இந்த ஆளும் அரசுக்கு தந்ததற்கு பரிசாக இந்த அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வை பேருடியாக சாதாரண மக்கள் மீது இறங்கியிருக்கிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம் - ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?தமிழகத்தில் ஒரு கலாசாரம்  நிலவுகிறது. இங்கு அ.தி.மு.க.அல்லது தி.மு.க இரண்டில் எதாவது ஒரு கட்சி  ஆட்சிக்கு வருகின்றது. இதில்  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய ஆட்சியில் போட்ட அனைத்து திட்டங்களையும் அடியோடு  மாற்றுகின்றன. தி.மு.க. ஆட்சியில் அவர்கள் அடித்த கொள்ளை போக எதாவது உருப்படியாக செய்த காரியம் எதுவென்றால்  அண்ணா நூற்றாண்டு நூலகம் கொண்டு வந்தது தான். இன்றுள்ள நவீன உலகத்திற்கு ஏற்றவாறு வீடியோ லைப்ரரி,குழந்தைகள் பிரிவு போட்டி தேர்வு பிரிவுகண் பார்வை அற்றவர்களுக்கான பிரிவு என பல நவீன வசதிகளோடு இந்த நூலகம் அமைந்துள்ளது.சென்னையில் பழமையான நூலகமான கன்னிமாராவை விட பல மடங்கு நவீன வசதிகளை கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம்கட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஞாயிறு, 13 நவம்பர், 2011

தியாகி பகவதி சரண் வோரா

தியாகி பகவதி சரண் வோராவும், அவரது மனைவி துர்க்கா தேவியும் HSRA புரட்சிகரக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள். பகவதி சரண் வோராவின் பெயரிலையே கட்சியின் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வலிமை மிக்க எழுத்துக்கு சொந்தக்காரர்.காந்தியடிகள் புரட்சியாளர்களைக் கண்டித்து எழுதிய "வெடிகுண்டின் வழிபாடு " எனும் கட்டுரைக்கு வோரா எழுதிய தத்துவார்த்த மருப்புரையான 'வெடிகுண்டின் தத்துவம்' எனும் கட்டுரை அவரது எழுத்து வன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. 1930 ம் ஆண்டு மே மாதம் 28 ம் நாள், தங்கள் தயாரித்திருந்த வெடிகுண்டை சோதனை செய்து பார்க்கும் பொது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமுற்று சிறிது நேரத்தில் உயிரழந்தார் பகவதி சரண் வோரா.சிறைக்கு வெளியில் இருந்து தோழர்களில் அதிகபட்ச தத்துவார்த்த தெளிவு பெற்றிருந்த தியாகி பகவதி சரணின் துயரம் மிக்க உயிரிழப்பு HSRA க்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு என்றே கூற வேண்டும். 


குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக விளையாட்டை ஆக்கிவிட்ட முதலாளித்துவம்

               2007 ,மே மாற்றுக்கருத்து இதழில்  வெளியான கட்டுரை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 ஆட்டத்தில் பங்கேற்க இயலாமல் அடுத்தடுத்து வங்கதேச இலங்கை அணிகளிடம் தோற்று இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அது விளையாட்டு ரசிகர்களிடையே நமது அணி வீரர்களுக்கு எதிரான கோபத்தை தூண்டி விட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மகேந்திரசிங் தோனி போன்ற வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்ட இடம் வழங்கியது. அந்த இடத்தில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த வீடு இந்த முறை அவர் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்த ரசிகர்களால் இடிக்கப்படும் காட்சி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

செவ்வாய், 8 நவம்பர், 2011

முதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்


சோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர் நூல் ஒன்றினை எழுதினார். அதற்கு அவர் வரலாற்றின் இறுதிநிலை என்று பெயரிட்டார். அதில் அவர் மனிதகுல வரலாற்றின் இறுதிநிலை முதலாளித்துவ ஜனநாயகமே என்று நிறுவ முயன்றார். 
வரலாறு தனி மனிதரால் உருவாக்கப்படுவதில்லை. அது மகத்தான மக்கள் எழுச்சிகளால் உருவாக்கப்படுகிறது; மகத்தான மக்கள் எழுச்சிகளே அடிமை மற்றும் நிலவுடமை சமூக அமைப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தன; அதைப்போல் முதலாளித்துவ சமூக அமைப்பையும் மகத்தான பாட்டாளி வர்க்க எழுச்சி முடிவுக்கு கொண்டுவரும் என்று மாமேதை மார்க்ஸ் கூறினார்.

எஸ்.யு.சி.ஐ - யும் எக்ஸ்பர்ட் கமிட்டியும்


மே, 2007 மாற்றுக்கருத்து இதழில்  வெளியான கட்டுரை
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைக் கூட்டுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கத் தவறும் கேரள அரசின் செயல் குறித்து அறிக்கை ஒன்றை எஸ்.யு.சி-ஐ கட்சி வெளியிட்டுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச தரம் வாய்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அணையின் உயரத்தைக் கூட்டுவது அல்லது வேறு அணை கட்டுவது போன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.உண்மையில் மத்திய நதிநீர் கமிஷன் அமைத்த நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தைக் கூட்டலாம் என்ற தீர்ப்பினை வழங்கியுள்ளது. அந்த நிபுணர் குழு பூகம்ப அபாயம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என்ற வாதத்தை எஸ்.யூ.சி.ஐ. முன் வைக்கிறது.

கிரேக்கத்தில் கடும் நெருக்கடி - பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார்

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே கிரேக்க அரசு கடும் கடன் நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது.  அங்குள்ள உழைக்கும் மக்கள் அடுத்த நாளுக்கான உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு ஆளும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக கடுமையான தொடர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐஎம்எப் தரும் கடனை மட்டும் வைத்து அந்த அரசு நீடித்திருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நெருக்கடி நிலையில் பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார். இது தொடர்ச்சியான கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம் பெரும் வகையில் தேசிய ஐக்கிய அரசு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அமையவுள்ள  எந்த முதலாளித்துவ அரசும் அந்த மக்களுக்கு ஏமாற்றமாகவும் அமையுமேயல்லாமல் முற்றியுள்ள நெருக்கடிக்கு எந்த தீர்வையும் தராது. கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டம் ஒரு வலுவான சோஷலிச அரசை நிறுவும் வரை தொடரும் என்பது திண்ணம். 

சனி, 5 நவம்பர், 2011

வரலாறு திரும்புகிறது - நவம்பர் 7 புரட்சி தினம்ஆண்டாண்டு காலமாக பெரும்பகுதி   மக்கள்  உழைக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து அந்த உழைக்கும் மக்களை சுரண்டி வந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சி நாள் நவம்பர் 7 ,1917.   ஸ்பாட்டகஸ் மனதில் பற்றிய தீப்பொறி , பிரான்சில் பாரி கம்யூனாய் கனன்ற உழைக்கும் மக்கள் எழுச்சி ,ரஷியாவில் அகம்பாவத்தின் உச்சியில் கோலோச்சி வந்த சுரண்டல்காரர்களின் தலைவன் கொடுங்கோலன்  ஸார் அரசன் மீது பெரு நெருப்பாய் இறங்கியது.

வியாழன், 3 நவம்பர், 2011

ஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்

2007 மே மாத வெளியீடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை.  அங்கு செயல்படும் முக்கிய கட்சிகள் அனைத்துமே தனித் தனியாகவே போட்டியிட்டன.  அதற்குப் பதிலாக கட்சிகள் ஜாதிகளின் ஆதரவை வித்தியாசமான வழிகளில் பெறமுயன்றன.  வழக்கமாக உயர் ஜாதியினர் என்று கூறப்படும் பிராமணர்களின் ஆதரவு  ஹிந்துத்வா கட்சியான பி.ஜே.பிக்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருந்திருக்கும்.  யாதவர்கள் போன்ற பிற்பட்ட வகுப்பினரின் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகள் சமாஜ்வாதிக் கட்சிக்கு கிடைக்கும் என்பதே பலரது கணிப்பாகவும் இருந்திருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உ.பி. மாநிலம் பிளவுபடாமல் இருந்தவரை ச.ஈ. திவாரி போன்ற பிராமண வகுப்பûச் சார்ந்த தலைவர்களினால் காங்கிரஸிற்கு பிராமணர்களின் வாக்குகள் கிடைத்து வந்தன; முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் விடுதலைக்குப் பின் நடைபெற்ற பல தேர்தல்களில் காங்கிரஸþக்கே கிடைத்து வந்தது.  பி.எஸ்.பி போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிக்கட்சி தொடங்கப்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கி காங்கிரûஸ விட்டு நகரத் தொடங்கியது.  பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் மத்திய அரசில் காங்கிரஸ் இருந்ததாலும், அது உரிய நடவடிக்கை எடுக்காமல் மசூதி இடிக்கப்பட்ட அனுமதித்தாலும் முஸ்லீம் வாக்கு வங்கியும் காங்கிரஸþக்கு இல்லாமல் போய்விட்டது.  இந்நிலையில் ஜாதியைப் பற்றி அதிகம் பேசாமல் காங்கிரஸ் ராகுல் காந்தியின் இளமையையும், சுறுசுறுப்பையும் வைத்தே தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.  ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட பி.எஸ்.பி. கட்சி மிக மிக வித்தியாசமான விதத்தில் தனது பிற ஜாதிகளுடனான கூட்டணியை அமைத்தது.  அம்மாநிலத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் அதிசயத்தை அரங்கேற்றியுள்ளது.

மேலும் படிக்க 

சி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்


2007 மே மாத வெளியீடு
உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.

  “உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச் சண்டாளர்களின் ஆட்சியிலே.”

- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமுறை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள்.  இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள்.  அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.

மேலும் படிக்க 


செவ்வாய், 1 நவம்பர், 2011

தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு ?


வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழைப்பிடித்தாலே நகரமே  வெள்ளக்காடாக மாறிவிடுகிறது .வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகு பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிகால்களும், பாதாளா சாக்கடையும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்து விடுகிறது. பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை,அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள் , அரசியல் வாதிகள் ,மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது.  நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.  

வெள்ளி, 28 அக்டோபர், 2011

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்

             தமிழாக்கம்: மு.சிவலிங்கம் [கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]

பாட்டாளிவர்க்கத்திடமிருந்து உருப்பெற்ற தத்துவம் - நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்

23 .10 .2011, ஞாயிற்று கிழமை அன்று நாகர்கோவில் , தக்கலை -  லைசியம் பள்ளி வளாகத்தில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பாக மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. தோழர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த படிப்பு வட்டத்தில் சென்ற வகுப்பில் எடுக்கப்பட்ட 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்' தொடர்ச்சி தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் நடத்தப்பட்டது. சிந்தனை என்பது சமூகத்தில் இருந்து கிடைப்பது , தொழிலாளி வர்க்கம் உருவாகும் வரை தத்துவம் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்தது .

வெள்ளி, 21 அக்டோபர், 2011

சோசலிஷம் எதற்காக? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


தமிழாக்கம்: சிவலிங்கம்.மு
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.

வியாழன், 20 அக்டோபர், 2011

மார்க்சிசம் - லெனினிசமே இக்காலக்கட்டத்தின் விஞ்ஞான பூர்வமான , அதி உன்னதமான சித்தாந்தம் ஆகும்.


               -      தோழர். சிப்தாஸ் கோஷ்

மார்க்சிசம் - லெனினிசம் மட்டுமே ஒரே புரட்சிகரக் கருத்தியல். இக்காலக்கட்டத்தின் மிகவும் விஞ்ஞான பூர்வமான அதி உன்னத சித்தாந்தம் , அதனால் மட்டுமே முடமாகிப்போன  இந்த முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து மனிதனை விடுவித்து, மனிதனை மனிதன் சுரண்டுகிற அனைத்து வித சுரண்டல்களிருந்தும் விடுதலை பெற்ற , வர்க்க பேதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாமறிவோம். மேலும் ஒரு புரட்சிகரக் கருத்தியல், எப்போதுமே ஒரு உயர்ந்த கலாச்சார மற்றும் அறநெறித் தரத்தை உருவாக்குகிறது என்பதையும் நாமறிவோம். எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டு மக்கள் தேவையான குறைந்தபட்ச கலாச்சார , அறநெறித் தரத்தை அடையாவிட்டால் புரட்சியை கட்டியமைப்பதற்கு சாத்தியம் இல்லை. 

திங்கள், 17 அக்டோபர், 2011

'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' - போராட்டம் பல நாடுகளுக்கு பரவுகிறது , ஆட்டம் காணுகின்றன முதலாளித்தவ அரசுகள்


லண்டன் , ரோம் ,ஜெர்மனி, ஸ்பெயின்,போர்ச்சுகல் உட்பட 82 நாடுகளிலுள்ள 1500  நகரங்களில் போராட்டம் வெடித்தது

எந்த முதலாளித்துவம் உலக அளவில் வலுவான சக்தி என்று டாம்பிகத்தொடு வளம் வந்ததோ, அதே முதலாளித்துவம் தான் வறுமையையும், வேலை இல்ல திண்டாட்டத்தையும், உண்டாக்கி உழைக்கும் மக்களை இன்று தெருவில் நிருத்தியிருக்கிறது. எந்த முதலாளித்தும் தொழிலாளர்களை நிருவனப்படுத்தியதோ, எந்த முதலாளித்துவம் தொழிலாளர்களை சுரண்டியதோ , அந்நிய நாடுகளை சொந்த நலன்களுக்காக ஆக்கிரமித்ததோ , குறைவான கூலி கொடுத்து மக்களை அரை பட்டினியோடு வாழ நிர்பந்திததோ,  மக்களை அநியாயமாக கொன்று  குவித்ததோ,இயற்கை வளங்களை அதீதமாக சுரண்டி கொளுத்ததோ , சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் (கலாச்சார சீர்கேடுகள் உட்பட )  காரணமாக உள்ளதோ அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அக்டோபர் 23 : நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'


கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவாக இயங்கினாலும் அனைவரும் மார்க்சிய சித்தாந்த வழியில்  நடப்பவர்களே, அதனால் கம்யூ னிஸ்டுகள் ஓன்று பட தடை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக பல்வேறு கம்யூனிஸ்டு  கட்சிகளை சேர்ந்தவர்கள்  இணைந்து நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பாக மார்க்சிய படிப்பு வட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சனி, 15 அக்டோபர், 2011

உலகின் உன்னத வர்க்கம் பாட்டாளி வர்க்கமேமனித வரலாற்றில் இதுவரை தோன்றிய வர்க்கங்கள் யாவிலும் மிக உன்னதமான வர்க்கம் பாட்டாளி வர்க்கமேயாகும் என்று மார்க்ஸ்  கூறினார். முதலாளித்துவ வர்க்கம் இக்கூற்றை ஏற்காது. சுரண்டல் , அடக்குமுறை கொண்ட வர்க்கம் , ஏமாற்றும் பொய்யும் வஞ்சகமும் சூதும் கொண்ட வர்க்கம் அது . விஞ்ஞான ரீதியான ஆய்வை அவ்வர்க்கம் கொண்டிருக்கவில்லை. தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஒன்றே அதன் குறிக்கோள். 

விழித்தெளுந்த அமெரிக்க பாட்டாளிகள் - ஆட்டம் காணும் அமெரிக்க முதலாளித்துவ அரசு

அமெரிக்க  முதலாளிகளின் லாப வெறிக்காக உலகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வரவேண்டும்,எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் , ஈராக் , போன்ற நாடுகளை கைப்பற்றுவதும் அங்குள்ள போராளி குழுக்களை ஒடுக்குகிறோம் என்று அந்த நாட்டு அப்பாவி மக்களை மீது  குண்டு போட்டு கொள்வதும்,  அந்நிய நாடுகள் மீது பலவந்தமாக ஒப்பந்தங்களை திணிப்பதும், அமெரிக்க  பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல அங்குள்ள முதலாளிகளின் நலனுக்கே என்பதை உணர்ந்து கொண்ட உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் மட்டும் அல்ல அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள், முற்றுகை என்று அமெரிக்க அரசை  ஆட்டம் காண வைத்து கொண்டுள்ளது . "ஒரு சதவிகிதமே உள்ள  முதலாளிகளுக்கான அமெரிக்காவே ,அவர்களின் வர்த்தக நலன்களுக்காக 99  சதவிகித மக்களை வஞ்சிக்காதே" என்பதே அங்கு முக்கிய கோசமாக உள்ளது.

புதன், 12 அக்டோபர், 2011

வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டார்

பிரபல உச்ச நீதிமன்ற மூத்த  வழக்கறிஞரும் , பல்வேறு பொது நல வழக்குகளை நடத்தி வருபவரும், சமூக இயக்கங்களில் பங்காற்றி வருபவருமான பிரசாந்த் பூசன் அவர்கள் இன்று (12 .10 .2011 ) உச்ச நீதிமன்றத்தில் உள்ள அவரது வழக்கறிஞர் அறையிலையே ஸ்ரீ ராம சேனா என்ற இந்து மத வெறிவாத அமைப்பை சேர்ந்த மதவெறியர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் உள்ள  Armed Forces Special Powers Act  நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார் . அவர் தெரிவித்த கருத்துகளுக்காக இந்து மத வெறிவாத அமைப்புகள் அவர் மீது பாசிச தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.  ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க கூட உரிமை இல்லாத ஆபத்தான  சூழ்நிலையையே இந்த ஆளும் முதலாளித்துவ அரசு பராமரித்து வருகிறது. மிகவும் பிரபலமான உச்ச நீதிமன்ற வழக்கறிங்கர் மீது  உச்ச நீதிமன்றத்தில் வைத்தே தாக்குதலை அரங்கேற்றி உள்ள இந்து  மத  வெறிவாத அமைப்பை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்


ஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆட்சிமாற்றங்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் கூட பெரும்பாலும் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. அடுத்த ஆட்சிமாற்றம் நடந்த பின்னரே அவை நடத்தப்படுகின்றன. 

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு

அமெரிக்க கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க அமெரிக்க வல்லரசு வன்முறையைக் கையாளத்துவங்கிவிட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட சின்னஞ் சிறுமியைக் கூட எதிரியாகக் கருதி கைது செய்யும் அளவிற்கு அமெரிக்க வல்லரசு இப்போராடத்தைக் கண்டு உள்ளூரப் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளது. லெபனானில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனநாயக உரிமை, மனித உரிமை பற்றிப் பேசிய அதே அமெரிக்க வல்லரசு இன்று தனது சொந்த மக்கள் மீதே மிகப்பெரும் வன்முறைத் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் முன்னறிவிக்கின்றன.

அம்பலமாகும் அமெரிக்காவின் போலிஜனநாயகம்

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது, முதலாளிகளுக்கு ஜனநாயகம்; உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம் என்ற உண்மையை அமெரிக்க அரசு மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டுள்ளது. அமைதியான முறையில் ஆயுதம் இன்றி வீதியில் கூடிய அமெரிக்க இளைஞர்களை அமெரிக்க போலீசார் வெறிகொண்டு தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் அமெரிக்காவின் ஜனநாயக முகத்திரையை உலகத்தின் முன்னால் கிழித்தெறிகின்றன.

டுனீசியாவில் பற்றிய தீ அமெரிக்காவிலும் எரிகிறது

டுனீசியாவில் பற்றிய போராட்டத்தீ அரபுநாடுகளில் பரவி, ஐரோப்பாக் கண்டத்தைத் தீண்டியபின் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தலைநகர் நியூயார்க்கில் எரிந்து கொண்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 17 அன்று வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு எதிராக அதன் வீதிகளை நிரப்பத் தொடங்கினர் அமெரிக்க

வியாழன், 6 அக்டோபர், 2011

தொழிலாளி வர்க்கமே வெற்றி 'வாகை சூட வா'

இன்று மலையளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உருவாவதற்கு காரணமான செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை யாரவது எண்ணி பார்த்ததுண்டா , வெறும் மண்ணை தங்கள் ஓய்வறியாத உழைப்பின் மூலம் செங்கல்லாக மாற்றும் தொழிலாளர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை காலமெல்லாம் அடிமைகளாக சுரண்டி கொழுக்கும் முதலாளிகள் , தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை கூட அறியாமல் வைத்திருக்கும் கொடுமையையும், கல்வி மூலம் அவர்கள் வாழ்வில் சிறு வெளிசத்தை நம்பிக்கையை ஊட்டுப்படுவதையும் 'களவாணி'பட இயக்குனர் சற்குணம் அவர்களின் இரண்டாவது படைப்பாக வெளிவந்துள்ள 'வாகை சூட வா' நம் முன் காட்சி படுத்துகிறது.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஓ அமெரிக்கா ! - உனக்கும் வருது பார் நெருக்கடி


உலக பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்தி சென்று கொண்டிருந்த ரஷ்ய  கூட்டமைப்பு உடைந்து சிதறிய போது முதலாளித்துவ நாடுகள் கொக்கரித்தன. குறிப்பாக உழைக்கும் வர்க்கமாக இருந்த போதும் அமெரிக்க முதலாளிகள் உலகம் முழுவதும் அடித்த கொள்ளையில் அவர்களுக்கு வாழ்க்கை சம்பளம் எனும் சலுகையில் மிதந்த அமெரிக்காவின் தொழிலாளி வர்க்கமும் பட்டாசு வெடித்து கொண்டாடியது. இன்று நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. அமெரிக்க அரசு கடன் சுமையால் தத்தளிக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் ரத்து செய்ய அமெரிக்க அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தில் வீடுகளை பறிகொடுத்து விட்டு தெருவில் டென்ட் அடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க உழைக்கும் வர்க்கம் இப்போது விழித்து  கொண்டு விட்டது.

சனி, 1 அக்டோபர், 2011

வாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்


வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே  சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

குஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரதமும் இந்திய மக்களின் நினைவுத்திறனும்

இந்திய நாட்டின் அமைதி வேண்டியும், மத நல்லிணக்கத்துக்காகவும் மூன்று நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதல்வர் திருவாளர் நரேந்திர மோடி அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று துவக்கியுள்ளார். குஜராத் கலவரம் சம்பந்தமான வழக்குகள் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனே மேற்குறிப்பிட்ட ‘’உன்னத’’ நோக்கிற்காக இந்த உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கியுள்ளார். அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் அல்லது மத்திய ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கடசிகளும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து மோடியின் இந்த உண்ணாவிரதத்தை உளமாற வாழ்த்தி வரவேற்றுள்ளுனர். காங்கிரஸ் கட்சியோ நரேந்திர மோடியின் இந்த அதிர்ச்சிகரமான அதிரடி நடவடிக்கையைக் கண்டு சிறிது சலசலப்புடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா தலைமையில் ஒரு போட்டி உண்ணாவிரதத்தை அறிவித்து நடத்திக் கொண்டுள்ளது.

கம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசியெறியப் பட்டிருக்கும் எள்ளும் கடுகும்

[கம்யூனிச இயக்கத்தின் இன்றைய தேக்கநிலையைக் கடந்து சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்க விரும்பும் - கட்சி அரசியலின் எல்லை தாண்டி கம்யூனிச அரசியல் வழியில் சிந்திக்க முடிந்த - உண்மையான கம்யூனிசத் தோழர்களின் சிந்தனைக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும்]

நூற்று அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் சொன்னார்: கம்யூனிச பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று. அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கம்யூனிச பூதத்திடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முதலாளித்துவப் பேயோட்டிகள் பலர் தோன்றி தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் பயன்படுத்தி அதை விரட்ட முயற்சித்துக் கொண்டுள்ளனர்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே!


இன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள்  அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில்  நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1  லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது. 

புதன், 14 செப்டம்பர், 2011

சனி, 10 செப்டம்பர், 2011

ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்

உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள்  என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால்  கூட ஜெயிலிலும்  சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்விசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன.  புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.  ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது.  தனக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார்.  ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை.  இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.  
சுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார்.  ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும்.  இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.  

அக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார். 
............................................................................................................................................

வியாழன், 8 செப்டம்பர், 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுரை , திருநெல்வேலி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.
108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும்  , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று   அரசிடம்   கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும்  நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும்  கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25  க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5  மணி  உண்ணாவிரதம் நடைபெற்றது.

முகப்பு

புதிய பதிவுகள்