புதன், 16 பிப்ரவரி, 2011

மன்மோகன் சிங் தலைமையிலான ஊழல் அரசு பதவி விலக வேண்டும்

ஊழல் , மஹா ஊழல், மெகா  ஊழல் என்று இந்தியாவை ஆளும் மன்மோகன் அரசு எங்கெங்கு காணினும் ஊழல் மயமாக காட்சியளிக்கிறது. இந்திய   மக்கள்   விலைவாசி  உயர்வெனும்  கொடிய  நோயால் கடுமையாக பாதிக்கபட்டிருக்கும் போது அரசியல்வாதிகள், ஊழல் பணத்தில்  உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இப்போது தான் இந்த அரசியல் வாதிகளின் பின்நின்று அவர்களை ஊழலில்  தள்ளி அதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டி வந்த அம்பானி, பாவ்லா  , டாட்டகளின்  நிஜ முகங்கள் வெளியே  தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த கொள்ளை கூட்டத்தின் தலைவனான மன்மோகன் சிங்க்கு  இனிமேலும் பிரதமர் பதவில் இருக்க எந்த தார்மிக தகுதியும் இல்லை அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவரின் வேஷம் வெளுத்து போய் விட்டது. அவர் பதவி விலக மக்கள் போராட முன் வர வேண்டும். அடக்கு முறைகள்  நிறைந்த  எகிப்தில்  நடைபெற்ற ஜனநாயக போராட்டங்கள்  நமக்கு  முன்னோடியாக   இருக்கிறது. உழைக்கும்  மக்களே ஓன்று திரளுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்