புதன், 9 ஏப்ரல், 2014

ஜெயலலிதா சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து நெட்டித் தள்ளிவிட்டதன் பலன் நேற்று மதுரை நீதிமன்றத்தில் தெரிந்தது: DYFI - மாநிலச் செயலாளர் வேல்முருகன் குற்றவழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார்

2006 ஆம் ஆண்டு எனது தொகுப்பிலும் தமிழிலும் வெளிவந்த “கேளாதசெவிகள் கேட்கட்டும்...” தியாகி பகத்சிங் கடிதங்கள் கட்டுரைகள் நூலை  அச்சுப் பிழைகளுடன் காப்பியடித்து விடுதலைப் பாதையில் பகத்சிங் என்ற பெயரில்  சிபிஎம் கட்சியின் DYFI -யும் பாரதி புத்தகாலயமும் 2007இல் வெளியிட்டனர்.

இவர்களுமா என்று அதிர்ந்து போன நாம் ஏன் இப்படிச்செய்தீர்கள் என்று மறைந்த தோழர் விடியல் சிவா போன்ற மூத்த இடது பதிப்பகத்தார்கள் மூலம் கேட்டபோது உன்னால் முடிந்ததைச் செய்து பார் என்று ஆணவத்துடன் பதில்சொன்னார்கள். நாமும் இவர்கள் மீது குற்றவழக்குப் பதிவுசெய்ய எவ்வளவோ முயன்றும் மதுரை கே, புதூர் காவல் நிலையத்தில் புகாரை வாங்கவே மறுத்துவிட்டனர். காரணம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக-வுடன் சிபிஎம் கட்சி கூட்டணியில் இருந்ததால் காவல்துறை அவர்களுக்கும் வாலாட்டியது.

சனி, 15 பிப்ரவரி, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா: காங்கிரஸ் - பிஜேபி - ஆளும் முதலாளி வர்க்கங்களின் முகத்திரைகள் கிழிந்தன

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா: காங்கிரஸ் - பிஜேபி - ஆளும் முதலாளி வர்க்கங்களின் முகத்திரைகள் கிழிந்தன.

வெள்ளி, 31 ஜனவரி, 2014

அரசியல் புரட்சியின் முன்னோடியாகும் கலாச்சாரப் புரட்சி

பாஸிசத் தன்மைவாய்ந்த தனிநபர்வாத , லும்பன் கலாச்சாரப் போக்குகளுக்கெதிரான போரட்டத்தை சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் கலாச்சாரப் போராட்டங்களோடு இணைக்க வேண்டும் 
இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவையே. நுணுகிப் பார்த்தால் அவை இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பதற்கு சரியான காரணம் எதுவுமே இல்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்திலும் இந்திய அரசு அதிகாரம் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கையில் உள்ளது என்ற வரையறையில் அடிப்படையான வேறுபாடு என்பது எதுவும் கிடையாது.
குழு முரண்பாடே பிளவுக்குக் காரணம் 
இந்த அனைத்துக் கட்சிகளுமே பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் உள்ளது என்று நம்பக்கூடியவை. மேலும் இக்கட்சிகள் அனைத்தின் திட்டத்திலுமே நிலச் சீர்திருத்தம் ஒரு மிகமுக்கிய கோரிக்கையாகவும் அது நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரு அடிப்படையான தீர்வாகவும் முன்வைக்கப்படுகிறது.
இந்த அடிப்படையான ஒற்றுமையை மனதிற்கொண்டு பார்த்தால் இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியானதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும். ஆனாலும் அவை இத்தனை பிரிவுகளாகப் பிரிந்துள்ளது ஒரே ஒரு காரணத்தால் தான். அதாவது அவற்றின் பிளவு அடிப்படை அரசியல் வழியிலோ அதுபோன்ற கோட்பாடு ரீதியான விசயங்களிலோ நடைபெறவில்லை. குழு முரண்பாட்டின் காரணத்தால்தான் இந்தப் பிளவு நிகழ்ந்துள்ளது.
இக்கட்சிகள் அனைத்தின் வழிமுறையிலும் தேசிய முதலாளிகள் ஏதாவது ஒரு வகையில் நேச சக்திகளாக முன் வைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நடைமுறையில் நடத்தும் போராட்டங்கள் எதிலும் அந்த தேசிய முதலாளிகளாகிய நேசசக்தி ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. 

செவ்வாய், 28 ஜனவரி, 2014

தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்

தற்கொலை செய்துகொள்வதை ஒரு போராட்ட வடிவமாகப் பார்க்கும் - பரப்பும் தமிழ் கூறும் நல்லுகின் இன்றய சூழலில் ​ பகத்சிங்கின் இக்கடிதம் நிச்சயம் நமக்கு ஒரு வழிகாட்டும்.


விசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன.  புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.  ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது.  தனக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார்.  ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை.  இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.  

சுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார்.  ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும்.  இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.  

 அக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார். 

முகப்பு

புதிய பதிவுகள்