திங்கள், 30 மே, 2011

அரசின் அலட்சியத்தால் புளியந்தோப்பில் ஏழைகளின் குடிசைகளை தின்று தீர்த்தது தீ


சென்னை புளியந்தோப்பில் பேசன் பிரிட்ஜ் அருகே புதிதாக வீட்டு வசதி வாரிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை மாற்று ஏற்பாடாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  கேசவ் பிள்ளை பார்க்கில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.  29 .05 .2011  அன்று மதியம் 1.30  மணியளவில் ஒரு குடிசையில் பற்றிய தீ அருகில் உள்ள அனைத்து குடிசைகளுக்கும் பரவி அனைத்து  குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. ஏழைகள் கஷ்டப்பட்டு சேர்த்து வைந்திருந்த சிறு தொகைகளும், உடைகளும் , சான்றிதழ்களும் பண்ட பாத்திரங்களும் ஒன்றுமே மிச்சம் இல்லாமல் எரிந்து சாம்பலாகி விட்டது.

ஞாயிறு, 29 மே, 2011

இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாறு ( பகுதி-1 )

                        -- (தோழர்.சிப்தாஸ் கோஷ் - நூல் தொகுப்பிலிருந்து)


கிழக்கிந்திய கம்பனி வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன்பும் அதன் பின்பும் சிராஜ் - உத்- தெளலாவின் வீழ்ச்சி வரையிலும் இந்திய மூலதனமானது தனது கைவினைப் பொருள் வணிகத்துடன் பெருமளவிற்கு வளர்ச்சியடைந்தது. இந்திய வணிகர்கள் நம் நாட்டில் மட்டுமின்றி கிழக்காசிய, தென் ஆப்ரிக்கா, கிரேட் பிரிட்டன் உட்பட பல்வேறு ஐரோப்பிய சந்தைகளில் லாபம் கொழிக்கும் வியாபரத்தை நடத்தி வந்தனர்.

சனி, 28 மே, 2011

அயல் நாடுகளில் நிலங்களை வாங்கி குவிக்கும் இந்திய முதலாளிகளும், இவர்களை தரகு முதலாளிகள் என்று திசைதிருப்பும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்


இந்திய முதலாளிகளின் மூலதனம் பணமாகவும் பொருளாகவும் உலகம் முழுவதும் பாய்ந்து சென்று கொண்டு உள்ளது. இந்திய முதலாளிகளின் வளர்ச்சியை கண்டு அனைத்து நாடுகளும் மிரண்டு போய் அவர்களுக்கு அடிபணியும் சூழ்நிலை நிலவும் இந்த நேரத்திலும் கூட இந்திய முதலாளிகளுக்கு சொந்த மூலதனமே கிடையாது , அவர்கள் அனைவரும்  அமெரிக்காவின் அடிமைகள் என்றும் , தரகு முதலாளிகள் என்றும்,  தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்து கொள்ளும் சில கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன.

வெள்ளி, 27 மே, 2011

சமச்சீராகுமா கல்வி


தமிழக அரசின் கல்வி   முதலாளிகளுக்கு  ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின்  அவல நிலையும்

கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.  தமிழகத்தில் அரசு பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும் ,  மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும்  இருக்கிறது.  அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கடும் போட்டி நிலவும்  வேலைச்சந்தையில்  போட்டியிடக்கூடிய  எந்த வலுவும்  தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது  என்பது தான் இன்றுள்ள நிலைமை.

  இந்த அனைத்து படத்திட்டங்களையும் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் , இடதுசாரி இயக்கங்களும் பல போராட்டங்களை நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து ஒரு வல்லுநர் குழு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளின்படி பாடத்திட்டங்கள் பதிப்பிக்கப்பட்டன.இந்த படத்திட்டதிற்கு மெட்ரிக் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதோடு அந்த பாடத்திட்டங்கள் அச்சுப்பிழை, மற்றும் தவறான தகவல்கள் நிறைந்ததாக வெளிவந்தது. சமச்சீர்கல்வி என்பது தங்கள் சாதனையாக காட்டிக்கொள்ள பெயரளவிற்கே அப்போது இருந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்டது.

 மேலும் படிக்க

வியாழன், 26 மே, 2011

சிறப்புடன் நடைபெற்ற CWP யின் மே தின அரங்க கூட்டம் - திருத்தங்கள்


சென்ற ஞாயிற்றுக்கிழமை  22.05.2011  அன்று  சிவகாசி வட்டத்திற்குட்பட்ட  திருத்தங்கள் , ரயில் நிலையம் அருகில் ,  ஐயப்பன்  மண்டபத்தில்  மே தின  அரங்க கூட்டம் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேட்யூனியன்ஸ்(COITU) ஆகியவற்றின்  சார்பாக தோழர்.வரதராஜ் தலைமையில்    நடைபெற்றது. தோழர்கள். தங்கராஜ் , செல்வராஜ் , பாரதி, ஆனந்த் ஜெயகுமார் , சத்தியமூர்த்தி , சிவகுமார், ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். உழைக்கும் மக்கள் கமிட்டியின் தலைவர் தோழர்.வரதராஜ் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சுமங்கலி திட்டம் மூலம் பெண்கள் எப்படி சுரண்டபடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி தலைமையுரை நிகழ்த்தினார்.

சனி, 21 மே, 2011

முதலாளித்துவ நிறுவனத்திற்கு ஆதரவாக பேசிய எம்எல்ஏவை அடித்து விரட்டிய ஆந்திரமாநில கிராம மக்கள்


ஆந்திரபிரதேசம்   விசாகபட்டினத்தை  சேர்ந்த சாரே கிராமத்தில்  முட்சிகா பூதேவி  நிறுவனம்  கனிமச்சுரங்கம் அமைக்க அரசிடம்  அனுமதி  கோரியிருந்தது . இந்த கிராமத்தில் பழகுடியான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கனிமச்சுரங்கம் வந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அக்கனிமச்சுரங்கம் அமைப்பதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து  வந்தனர். பல போராட்டங்களையும் நடத்திவந்தனர்.

செய் அல்லது செத்துமடி - கரூர் ஆட்சித்தலைவருக்கு விஷத்தை அனுப்பிய சமூக ஆர்வலர்


கரூர் மாவட்டத்தை சேர்ந்த சே.பெ. வாசுதேவன் 'புதிய தீர்ப்பு' என்ற மாத இதழை நடத்தி வருகிறார். இவர் கரூர் மாவட்ட மின்சார வாரிய நிர்வாகம் லஞ்ச ஊழலில் மூழ்கி போயுள்ளதை அம்பலப்படுத்துவதற்காக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ‘லஞ்சம் கொடுப்பதற்கா பிச்சை எடுக்கும் போராட்டத்தை’ கரூர் மின்சார வாரிய மேற்பார்வை  பொறியாளர்  அலுவலகம் முன்பு  21.02.2011  அன்று நடத்தி கைதானவர் . இவ்வாறு லஞ்சம் , ஊழல் ,அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மை ஆகியவற்றை நூதன போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தி வருபவர்.

வெள்ளி, 20 மே, 2011

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது... திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்!


ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், ராஜாவோடு ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கூட்டாளியுமான   கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.கனிமொழியை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.இதேபோல், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுகிறார்

வியாழன், 19 மே, 2011

மேற்கு வங்க இடது முன்னணி படு தோல்வி - பாடம் கற்பித்த மேற்கு வங்க உழைக்கும் மக்கள்

மே 13 ம் தேதி 5  மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் பல  ஊடகங்களில் நேரடியாக  ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அன்று அனைத்து                     தொலைக்காட்சிகளிலும் சிபிஐ, மற்றும் சிபிஎம் கட்சியை சேர்ந்த தோழர்கள் நேரடியான விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவருமே இந்தியாவில் நடைபெற்றுவரும் தேர்தல் ஜனநாயகத்தை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர் . மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வரத்துவங்கியதும் அவர்களின் சுருதி குறைய துவங்கியது. மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தோல்வியடைந்த செய்தியை ஊடகங்கள் உற்சாகமாக அறிவித்தன. ஏனெனில் அதில் அவர்களின் வர்க்க நலனும் அடங்கியிருக்கிறதல்லவா! உண்மையிலையே சிபிஎம்மோ சிபிஐயோ  உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல என்பது பாமர மக்களுக்கு கூட தெரியும் இருந்த போதும் முதலாளித்துவத்தை விழ்த்த காத்திருக்கும் ஆயிரம்கால்பூதம்  அல்லவா  கம்யூனிசம். கம்யூனிஸ்டுகள்  தோற்றனர் என்பதில் அவர்களுக்கு கண்டிப்பாக சந்தோசம் இருக்கவே செய்யும்  அதனால் தான் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்  தோல்வியடைந்ததை  முதலாளித்துவ ஊடங்கங்கள் பெருமையுடன் முழங்கின. இவ்வளவு பெரிய தோல்வியை  யாரும் எதிர்பார்க்கவில்லை ,  புத்ததேவ் உட்பட பல அமைச்சர்களும் தோழ்வியை தழுவினர். 34  ஆண்டு கால கம்யூனிச   கோட்டை தூள்தூளானது. மேற்கு வங்க மக்கள் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

செவ்வாய், 17 மே, 2011

கூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

மேதினத் தியாகிகளின் கனவை நனவாக்குவோம்

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாளுக்காக போராடி அதனை வென்றெடுத்த தினமே மேதினம். 8 மணி நேர வேலை என்பது ஏதோ போராடிய தொழிலாளரின் மனதில் அப்போது தன்னிச்சையாக உருவானதல்ல. மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதன் ஒரு மனிதனாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, மீதமுள்ள 8 மணி நேரம் சமூக ரீதியான வி­சயங்களில் ஈடுபாடு என்ற வரையறை வேண்டும் என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கை வைக்கப்பட்டது. 


அக்கோரிக்கையை முன்வைத்த போராட்டம் முதன்முதலில் இன்று குபேரபுரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல தொழில் நகரங்களில் 19 வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியது. அக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட உடன் அதில் பொதிந்துள்ள நியாயத்தை உணர்ந்து முதலாளி வர்க்கம் 8 மணிநேர வேலை நாளை அறிமுகம் செய்து விடவில்லை. மாறாக 1886 மே முதல் நாளன்று 8 மணி நேர வேலை நாள்

முகப்பு

புதிய பதிவுகள்