புதன், 9 பிப்ரவரி, 2011

யுனிடெக், ஸ்வான் நிறுவனங்களால் ரூ. 7105 கோடி இழப்பு: சிபிஐ


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யுனிடெக், ஸ்வான் நிறுவனங்களால் மத்திய அரசுக்கு ரூ. 7105 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.சிபிஐ பதிவு செய்துள்ள 5 பக்கங்கள் கொண்ட முதல் தகவல் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளும் சில தனியார் நிறுவனங்களும் கூட்டாக கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டு தவறான வழியில் லாபம் அடைந்துள்ளனர் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.22 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான அலைக்கற்றை உரிமத்தை ரூ. 1658 கோடிக்கு யுனிடெக் பெற்றதாகவும், பின்னர் அதில் 60 சதவீதப் பங்கை, தனது சேவையை தொடங்குவதற்கு முன்னதாகவே நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனத்துக்கு ரூ. 6100 கோடி ரூபாய்க்கு விற்று லாபமடைந்ததாகவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இதையடுத்து, சிபிஐ தனது கவனத்தை தற்போது யுனிடெக் நிறுவன உயர் அதிகாரிகள் மீது திருப்பியுள்ளது. ஸ்வான் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பால்வா ஏற்கெனவை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்