செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஆட்டம் கண்ட கருத்து முதல்வாதம் : நாகர் கோவில் மார்க்சிய சிந்தனை மையம்

நாகர்கோவில் லைசியம் பள்ளியில் 28.08 .2011 அன்று நடைபெற்ற மார்க்சிய படிப்பு வட்டத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதம் விவாதிக்கப்பட்டது. தென்மாநிலங்களுக்கனா கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரமின் (CWP) பொதுசெயலாளர் தோழர் . அ.ஆனந்தன் அவர்கள் கருத்து முதல்வாதம் எவ்வாறு மாறத்   தன்மையை போதித்து கற்பனையான உலகத்தில்உழைக்கும்  மக்களை ஆழ்த்தி வைத்திருந்தது என்றும்  ஹெகல் போன்றவர்கள் வரலாற்றுரீதியாக வைத்த சில வழங்கல்களை  , மார்க்ஸ் எவ்வாறு முழுமைபெற்ற பொருள்முதல்வாதமாக ஆக்கினார் என்பதையும் , 17 , 18 நூற்றாண்டுகளில் நிகழ்த்த தொழிற் புரட்சியின் விளைவாக வர்க்கம் கூர்மைபெற்றதை கணக்கில் எடுத்துகொண்டு , கருத்து முதல்வாதம் உத்தேசமாக கூறியதை மார்க்ஸ் எவ்வாறு புள்ளி விவரங்களோடு மறுத்து உறுதியாக  தனது கருத்துகளை நிறுவினார் என்பதையும், மாற்றம் நிகழ்ந்தே தீரும் அதை யாரும் தடுக்க  முடியாது வர்க்கங்கள் கூர்மையடைந்து கொண்டே தான் செல்லும் என்பதை மார்க்ஸ் நிறுவியதை பல்வேறு நடைமுறை உதாரணகளோடு விரிவாக எடுத்துரைத்தார். 

நேபாளத்திற்கு புதிய பிரதமர் - மாற்றம் வருமா

நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வருவதில் நேபாளி  காங்கிரஸ் மற்றுமுள்ள முதலாளித்துவ கட்சிகள் தொடர்ந்து பல முட்டு கட்டைகளை போட்டுவருகிறன. நேபாள மாவோயிஸ்ட் கட்சி செம்மையான மக்களின் நேரடி பங்களிப்புள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க, கடுமையாக போராடிவருகிறது. இந்த நெருக்கடி சூழ்ந்த நிலையில்    நேபாளத்தின் புதிய பிரதமராக மாதேசி கட்சியின் உதவியோடு   ,நேபாள கம்யூனிஸ்ட் ( மாவோயிஸ்ட்)  கட்சியின் துணை தலைவர் டாக்டர் . பாபுராம் பட்டாரை , அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டாரை புது டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்


கட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து கொண்டுள்ளனர். தனக்கெனஅமைப்பேதுமின்றி ஒரு தனிமனித ராணுவமாகச் செயல்படும் அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்களின் ஆதரவினைஒருங்குதிரட்டுவதில் பெரிய வெற்றிஎதையும் பெற்றுவிடமுடியாது என்று கருதிய ஆட்சியாளர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்களையும் மிஞ்சும் விதத்தில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரது அறவழிப் போராட்டத்திற்கு விதித்தனர். தன்வயப்பட்டசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்கள் சக்தி எங்கேஎழுச்சியுடன் அவருக்குப்பின்பலமாக பொங்கி எழப்போகிறது என்ற மக்கள் குறித்த கணிப்பும் அவர்களுக்கு இந்த இயக்கம் குறித்த ஒரு மெத்தனப்போக்கை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் பொய்யயன நிரூபித்து இன்று அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நீறுபூத்த நெருப்பாக மாணவர் இளைஞர் மனங்களில்
கனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்
பரிணமித்துள்ளது.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இயக்கவியல் பொருள்முதல்வாதம் - நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் படிப்பு வட்டம்

மார்க்சியவாதிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , அடிப்படையான  மார்க்சிய நூல்களை படிக்கும் வட்டமாக, ஒற்றுமையின் மையமாக  வெற்றிகரமாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது மார்க்சிய சிந்தனை மையம். மாதந்தோறும் மார்க்சிய வகுப்புகளை நடத்து வருகின்றனர்.  28.08.2011 , ஞயிற்றுகிழமை காலை 10.30 மணிக்கு  நாகர்கோவில், லைசியம் பள்ளியில்   'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' விவாதம் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பராமின் (CWP ) தென்மாநிலங்களுக்கான பொது செயலாளர்   தோழர்.ஆனந்தன் அவர்களால் நடத்தப்படுகிறது. தோழர். போஸ் அவர்கள் இந்த விவாத அரங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்.

தொடர்பிற்கு :தோழர். மகிழ்ச்சி -94433 47801

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஊழல் கட்சிகளோடு கைகோர்த்து ஊழலுக்கு எதிரான போராட்டம் - சி.பி.எம், சி.பி.ஐ, இன் பாராளமன்ற வழிபாடு


அண்ணா ஹசாரே ஜான் லோக்பால் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் கடும் ஒடுக்குமுறைகளுக்கு நடுவே சாகும் வரை உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரின் இந்த போராட்டம் இந்தியாவின் இளைய தலைமுறையின் ஆன்மாவை தட்டியெழுப்பி போராட்ட களத்திற்கு  கொண்டு வந்துள்ளது. அவர் மாற்றம் வேண்டும், மக்கள் போராட்டமே மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி இளைஞர்களை போராட்டத்தில் களம் இறக்கி விடுகிறார். அவரின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  இந்த போராட்டத்தை  வலுவான மக்கள் இயக்கமாக மாற்றவேண்டிய கடமை  எந்த வொரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சிக்கும் உண்டு . ஆனால் சி.பி.எம். சி.பி.ஐ. யோ மைதானங்களில் சட்டம் இயற்றமுடியாது என்று அண்ணா ஹசரேவை விமர்சனம் செய்வதோடு இந்திய பராளமன்றத்தை உயர்த்தி பிடிக்
கிறது. 

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அண்ணா ஹசாரேவை கைது செய்ததன் மூலம்அம்பலமாகி போன மத்திய அரசின் பாசிச முகம்

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டும் என்று அடுக்கடுக்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி
 கொண்டே வருகிறது. ஆனாலும் அப்படி ஒரு மசோதா வருவதை ஆளும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை . பாராளமன்றத்தில் மிகவும் வீக்கான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது . இதனை முறியடிக்க கடைசிக்கட்டமாக சாகும் வரை உண்ணாவிரதத்தை அண்ணா ஹஜாரே அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வந்த வேளையில் மத்தியில்  ஆளும் காங்கிரஸ் அரசு அண்ணா ஹசாரேவை கைது  செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அங்கும் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார் அண்ணா . ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நெறிக்கும் செயலை ஆளும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஹசாரேவை கைது செய்ததன் மூலம் மதிய அரசு தனது கொடூரமான பாசிச முகத்தை அனைவருக்கும் காட்டியுள்ளது. ஆளும் மத்திய அரசின் ஜனநாயக விரோத  போக்குகளை கண்டிப்போம். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

சனி, 6 ஆகஸ்ட், 2011

தற்போதைய தொழிலாளர் இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை

 தொழிலாளர் தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியிருக்கும் உலகை மாற்ற முடியாது என்ற கம்யூனிச ஆசான் காரல் மார்க்சின் கூற்று முன்னெப்போதையும் விடத் தற்போது மிகவும் அர்த்தமுள்ள நிதர்சன உண்மையாக உள்ளது.  பாட்டாளிகள் சமூக மாற்றத்தை நோக்கிய புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கூறு என்றும் கம்யூனிஸ்டுகள் சரியான சமூக மாற்றத்தை நோக்கி தடம் புரளாமல் வழி நடத்துபவர்கள் என்பதை மிகத் தீர்க்கமாக தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பாட்டாளிகளும், கம்யூனிஸ்டுகளும் என்ற பகுதியில் மாமேதை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தார். மாமேதை லெனின் அவர்களோ பாட்டாளிகள் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னணிப் படையாகத் திகழ வேண்டும் என்பதை சொல்லும் செயலுமாக இரஷ்ய மண்ணில் சோ­லிச சமூக கட்டியமைத்ததின் மூலம் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு அவர்தம் வரலாற்றுக் கடமையை உணர்த்தினார்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

தோழர். சிப்தாஸ் கோஷ் - நினைவை போற்றுவோம், அவரின் வழிநடப்போம்

 
(தோழர். சிப்தாஸ் பிறந்தது 5 ,ஆகஸ்ட் - 1923  மறைந்தது 5 ஆகஸ்ட் 1976 )
 
தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்கள் தான் இந்தியாவின் சூழ்நிலையை கச்சிதமாக கவனத்தில் எடுத்து இந்தியாவில் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்சிய நெறிகளை வகுத்தளித்தவர். சி.பி.எம்., சி.பி.ஐ., சி.பி.எம்.(எம்.எல்)போன்ற பல்வேறு கட்சிகள் எவ்வாறு தத்துவ , மற்றும் நடைமுறை கோளாறுகளை இளைத்தன , இந்தியாவில் முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிச புரட்சியே சரியான தீர்வு என்று முன்வைத்து SUCIயை  வலிமையான  அமைப்பாக கட்டியமைத்தார்.

முகப்பு

புதிய பதிவுகள்