சனி, 11 டிசம்பர், 2010

பாரதியின் பிறந்த தினத்தை (டிசம்பர் 11 ) முன்னிட்டு லஞ்சம் ஊழலுக்கு எதிராக ஓன்று திரள்வோம்


சுப்ரமணிய பாரதி என்றாலே அனைவருக்கும் ஒரு கம்பீரம் தான் ஞபகத்திற்கு வரும். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களை தேசிய ஒருமைப்பாடு கொண்டு வீரம் பொங்க எழ செய்த பெருமை வங்கத்தை சார்ந்த ராபின்தரநாத் தாகூருக்கும் , நமது தமிழகத்தை தலை நிமிர செய்த பெருமை தேசிய கவி பாரதிக்கும் சேரும். பாரதி இந்தியர்கள் அனைவரையும் ஓன்றுபட்டு சாதி மத வேறுபாடுகள் களைந்து ஓரணியில் நிற்க செய்ய தமது பாடல்கள் மூலம் இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டார். பெண்ணடிமையை சாடினார் , பெண்கல்வியை போற்றினார் மரபு கவிதைகளை எளிமைபடுத்தி அனைத்து மக்களுக்குமானதாக தனது பாடல்கள் மூலம் ஒரு கவிதை புரட்சி நிகழ்த்தினார். அவரை பின்பற்றி பாரதி தாசன் போன்ற கவிஞர்கள் சமூக அக்கறை கொண்ட பாடல்களை இயற்றத் துவங்கினர். பாரதி தனது எழுத்திலும் பேச்சிலும் இந்த மானுடம் மகிழ்வுற வாழ பெரும்பங்காற்றினார் என்றால் மிகையில்லை.அன்று பாரதி போன்றவர்கள் செய்த தியாகத்தால் பெற்ற சுதந்திரம் இன்று பெரும் முதலாளிகளின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது. இன்று கடும் சுரண்டலை அரகேற்றிகொண்டு உள்ள இந்த முதலாளிவர்க்கம் தங்களது பிரதிநிதியாக அமர வைத்திருக்கும் அரசியல் வாதிகளோ நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக தினம் தினம் பல லட்சம் கோடிகளை மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளை அடித்த வண்ணம் இருக்கின்றனர். நமது மக்கள் இந்த முதலாளித்துவ கொடும் நுகத்தடியின் கீழ் சிக்கி கொண்டு நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளனர். அதிகாரிகள் மக்களை லஞ்சம் கேட்டு வருத்துகின்றனர் இவ்வாறு இந்த அதிகாரிகளும் ,அரசியல் வாதிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது என்பது பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த நாட்டில் தான் நாமும் வாழ்கின்றோமா என்ற சத்தேகத்தை கிளப்புகிறது . இந்த வெளிப்படையாக நடக்கும் பகல் கொள்ளையை எதிர்க்க களம் புகுவோம் வாருங்கள் தோழர்களே ஒன்றிணைவோம் , வென்றடைவோம். பாரதி கண்ட கனவு சாம்ராட்சியத்தை மார்க்சிய வழியில் செளுமைப்படுத்துவோம் .

2 கருத்துகள்:


 1. //நமது தமிழகத்தை தலை நிமிர செய்த பெருமை தேசிய கவி பாரதிக்கும் சேரும்.//

  அருமை அப்புறம்...இந்த ஆளுதானே மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து ஆங்கிலேயர்களிடம் கெஞ்சியவர்...கெஞ்சி பெருமை சேர்த்திருப்பாரோ..

  =============================
  //பாரதி கண்ட கனவு சாம்ராட்சியத்தை மார்க்சிய வழியில் செளுமைப்படுத்துவோம் .//

  அண்ணே இங்கதான் நீங்க நிக்குறீங்க....கொஞ்சம் உட்காருங்க

  பதிலளிநீக்கு
 2. ம்... நண்பரே ஆங்கிலேயருக்கு எதிராக சுட்டு விரலைக்கூட அசைக்காத.... சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பங்கும் வகிக்காத... பகிரங்கமாக ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த... உங்கள் புரட்சியாளரை விடவும் பாரதி ஆங்கிலேய எதிர்ப்பில் பிந்தங்கியவனல்ல...அதில் பெருமை சேர்த்தவன்தான்.
  ஆங்கிலேயர்தான் நாட்டை ஆளவேண்டும்; சென்னை மாகாணம் மட்டுமாவது விக்டோரியா மகாராணியின் காலடியில்தான் இருக்க வேண்டும் என்று உங்கள் பகுத்தறிவுத் தந்தை லண்டனுக்கு போட்ட மனுவைவிட பாரதியின் மன்னிப்புக் கடிதம் மட்டும் உங்கள் கண்ணை உறுத்துவது ஏன்?

  பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்