சனி, 30 ஏப்ரல், 2011

தொழிலாளி வர்க்கமே விழித்தெழு - மே தின அறைகூவல்

சென்னையில் உள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெண் தொழிலாளர் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அந்த இயந்திரம் உதிரி பாகங்களின் தேவையற்ற பகுதிகளை வெட்டக்கூடியது அதில் மனிதனின் சருமத்தை உணர்ந்து  கொள்ளும் வகையிலான சென்சார் பொருத்தப்பட்டிருக்கும், அப்படி இருப்பது லாபவெறிபிடித்த முதலாளிக்கு  உற்பத்தி  குறையும் என்பதால்  அந்த  சென்சார்  இணைப்பு  அங்கு  வேலை செய்யும் தொழிலாளிக்கே தெரியாமல் துண்டிக்கப்படுகிறது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண் தொழிலாளியின் கழுத்து அந்த இயந்திரத்தில்  மாட்டிக்கொள்கிறது .  சக தொழிலாளர்கள் , அந்த இயந்திரத்தை  உடைக்க  முயற்சி செய்கிறார்கள் , ஆனால் மேலாளரோ அந்த இயந்திரம்  விலை மதிப்பற்றது,  அந்த இயந்திரத்திற்கு  சேதாரம்  ஏற்படாமல் அந்த பெண்

திங்கள், 25 ஏப்ரல், 2011

பகத்சிங்கின் கடைசிக் கடிதம்


1930 அக்டோபர் 7ம் நாள் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர் கொள்ள தீரமுடம் காத்திருந்தனர் புரட்சியாளர்கள் மூவரும்.  ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய நாடே ஒருமித்த குரலில் கோரிக்கை எழுப்பியது.  லட்சக்கணக்கான கையெழுத்துகள் கொண்ட மனுக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வந்து குவிந்தன.  அநேகம் பேர் இரத்தத்தினாலும் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தனர்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இப்படிச் செய்தாலென்ன?

தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பற்றிய கனவிலிருக்கும் பெற்றோர்களை அட்டையாய் உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை நாடறிந்ததே. பத்தாண்டுகாலமாக இக்கட்டணக் கொள்ளை அரசின் காதிலேயே விழாமல் இருந்தது. தாங்கமுடியாத கட்டணச் சுமையால் நிதானமிழந்த சில பெற்றோர்கள் ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடுவதும்; பின்னர் காவல்துறையினரால் ஏமாற்றி - மன்னிக்கவும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப் படுவதும் வாடிக்கையான ஒன்றாகிக் கொண்டிருந்தது.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தச் சீரழிவிலிருந்து காக்க ஆளும் கட்சியின் தோல்வியை உறுதி செய்வதே ஒரே வழி

தமிழகம் உட்பட 5 சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளின் அணிச் சேர்க்கைகள் முடிந்து தேர்தல் அறிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவசமாக வெட்கிரைண்டர் அல்லது மிக்சி இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி அவ்விரண்டினையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

வியாழன், 21 ஏப்ரல், 2011

மத்திய கிழக்கு ஆசிய - வட ஆப்பிரிக்க நாடுகளின் எழுச்சி முன்னிறுத்தும் படிப்பினை

சமூக நெருக்கடிகள் கிளர்ச்சிகளை உருவாக்கும் சரியான இலக்கை நோக்கியவையாக அவை ஆக அமைப்பு அவசியம்

மதவாதத்தில் மூழ்கி பல வகை பின்தங்கிய போக்குகளின் நிலைக்களனாக விளங்கியதும் உலக நாடுகளின் வளர்ச்சியோடு இணைந்து செல்லாமல் தனித்து விடப்பட்ட தீவுகள் போல் சமூக பொருளாதார கலாச்சார நிலைகளில் பெரும்பான்மை மக்களை வைத்திருந்தவையுமான பல மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் தோன்றி தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாஸ்மின் புரட்சி என்ற பெயரிலான மக்கள் எழுச்சி சமீபகால வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நாடுகள் அனைத்திலும் மன்னராட்சி அல்லது ராணுவ ஆட்சிகளே இருந்தன. இந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்கட்தொகை 33.3 கோடி. அதில் 32.5 கோடி மக்கள் வாழும் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சி இல்லை. அந்நாடுகளின் மிக முக்கிய இயற்கை வளம் எண்ணெய் ஆகும்.

நமது நாட்டில் காட்டுத் தீயெனப் பரவிவரும் பாட்டாளிமயமாதல் போக்கைக் கணக்கிலெடுத்து, உரிய வழிகாட்டுதல் வழங்கி வர்க்க விடுதலைச் சாதிக்கப் பாடுபட வேண்டும்

நமது நாட்டில் பட்டாளிமயமாதல் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சிறு உடமையாளர்கள் அவற்றை விற்றுவிட்டு பட்டாளி வர்க்க அணிகளுடன் சேரும் போக்கு காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மிகப் பெரிய வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பகாசுர வர்த்தக நிறுவனங்கள் சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அழித்தொழித்துக் கொண்டுள்ளன. அது பட்டாளி வர்க்க அணிகளுடன் உடைமை இழந்தவர்களை அணி  சேர்த்துக் கொண்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத நிலை, இடுபொருள் விலை உயர்வு, உயர்ந்து வரும் உயர்கல்விச் செலவினங்கள் போன்றவை சிறிய அளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோரைப் பொறுத்தவரை விவசாயத்தை முழுமையாக கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. அதனால் அவர்கள் அவர்களின் குண்டுகுறுக்க நிலங்களை விற்றுவிட்டு விவசாயத் தொழிலாளராகவும் உதிரித் தொழிலாளராகவும் மாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி நாட்டின் பல இடங்களில் பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.

தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்

அன்றாடத் தேவைகளுக்காகப் போராடுவது என்றிருந்த தொழிலாளர் இயக்கம் மார்க்சியத் தத்துவத்தின் வழிகாட்டுதலின் மூலம் சமுதாய மாற்ற இயக்கமாக உருவானதும் அது எதிர்கொண்ட பிரச்னைகளும்

உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கம் மே தினத்தை தனது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து படிப்பினைகள் எடுத்து எதிர்கால செயல்பாட்டிற்கான திட்டத்தினை வகுத்தெக்கவே அனுஷ்டிக்கிறது. எந்தத் திட்டத்திற்கும் ஒரு வழிகாட்டும் குறிக்கோள் அவசியம். அந்த அடிப்படையில் மே தினத்தின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தின் கூலி அடிமைத் தளையினை உடைத்தெறிந்துவிட்டு அதன் விடுதலையைச் சாதிப்பதே.

முதலாளித்துவ நுகத்தடியிலிருந்தான தொழிலாளிவர்க்க விடுதலையைச் சாதிப்பதற்கு அதனைச் சாதிக்க வேண்டும் என்ற அதன் விருப்பம் மட்டுமே போதாது. ஏனெனில் முதலாளித்துவ ஆட்சி சுரண்டலின் மூலம் ஆதாயம் ஈட்டும் அவ்வர்க்கத்தின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அது தன் வர்க்க ஆட்சியை தக்கவைப்பதற்காக

கல்வி மற்றும் பயிற்று மொழி குறித்த சில கேள்விகள்


அறிவைப் பெறுவது உரிமையாக முடியுமே தவிர; அதனை அரைகுறையாகப் பெற விரும்புவது உரிமையாகாது


நமக்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அது வழங்கப்பட வேண்டிய மொழி குறித்தும் பல விஞ்ஞானப் பூர்வமற்றக் கருத்துக்கள் குறிப்பாக இடதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்பவர்களால் முன் வைக்கப் படுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கல்விப் பிரச்னைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடிய கட்சியின் ஒரு இளம் தலைவர் உரையாற்றுகையில் கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய சில அமைப்புகளே ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கின்றன என்று ஏதோ ஆங்கிலம் படிப்பதை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியாது என்பது போல் கருத்துத் தெரிவித்தார்.

வேறு பலரும் நாம் தற்போது பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய கல்வி பிராமணியக் கல்வி என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.

தில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது நியாயவிலைக் கடைகள் விவரம் புரியாதோரால் புகழப்படும் கொடுமை

தேர்தல் பிரச்சாரம் இந்தமுறை பெரும்பாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவே  நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெறும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடியே 83 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படையாகவே ஏழை எளியவருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மட்டும் அல்ல தெரிந்தோ தெரியாமலோ

சமயநல்லூரில் பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்

................அத்தகையதொரு சந்திப்பின் போது அவரது தோழர்கள் வேடிக்கையாகத் தங்களில் யார் யாருக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை ஒருவரை நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தி நாடக பாணியில் அறிவித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களது தீர்ப்பில் பகத்சிங்குக்கும், ராஜ குருவுக்கும் என்ன தண்டனை என்பது அறிவிக்கப் படவில்லை. அதைக் கண்ட பகத்சிங் புன்முறுவலுடன் ஏன் எங்களிருவருக்கும் எந்தத் தண்டனையையும் நீங்கள் அறிவிக்கவில்லை? எங்களை விடுதலை செய்யப் போகிறீர்களா எனக் கேட்டுவிட்டுக் கூறினார்: எங்களுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்ற வருத்தத்தில் தானே நீங்கள் அதைக் கூறாதிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கான பதில் பிற தோழர்களிடமிருந்து வராத நிலையில் அடுத்த கணமே மிகுந்த கம்பீரத்துடன் அவர் “உயிர் வாழும் பகத்சிங்கை விட இறந்துவிட்ட பகத்சிங் இன்னும் வலிமை மிக்கவனாக இருப்பான். அவனது லட்சியத்தைச் சுமந்து தேச விடுதலைக்குப் பாடுபடும் எண்ணிறந்த இளைஞர்களை உருவாக்க வல்லவனாக இறந்த பின் அவன் ஆகிவிடுவான் எனவே கவலைப் படாதீர்கள்” என்று கூறினார்............................

மேலும் படிக்க

http://maatrukkaruthu.blogspot.com/2011/04/blog-post_21.html

கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்

நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது....................

............................................தள்ளிப் போடலாம் தவிர்க்க முடியாது

கம்யூனிஸ்ட் அறிக்கையில் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அம்சங்கள் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பதும், நமது சமூகத்தில் நிகழும் அனைத்துப் போராட்டங்களும் வர்க்க அடிப்படையைக் கொண்டவையே என்பதுமாகும். முதலாளித்துவம் ஒழுங்கற்ற உற்பத்தி முறையைக் கொண்டது அதனால் மக்கள் வாங்கும் சக்தியைத் தாண்டியும் அதன் உற்பத்தி செல்லக் கூடியது. அதன் விளைவாக ஆலை மூடல்கள் போன்றவை தோன்ற வழிவகுத்து சமூகத்தில் உழைப்பாளர் எழுச்சியை ஏற்படுத்த வல்லது. அந்நெருக்கடிகளின் தாக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கம் நெருக்கடியின் அடிப்படையையும் தன்மையையும் ஆழமாக உணரும் வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது. பிரச்னைகளுக்கானத் தீர்வு அந்த அமைப்பையே அகற்றி சமூக உற்பத்தியை லாப நோக்கத்திலிருந்து விடுவித்து மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டதாக ஆக்குவதிலேயே உள்ளது என்ற அரசியல் கருத்தைத் தொழிலாளி வர்க்கம் உணரும் நிலைக்கு உந்தப்படும் நிலையும் தவிர்க்க முடியாமல் தோன்றும் வாய்ப்பினைக் கொண்டது. அதன் விளைவாக சமூக மாற்றம் என்பது நடந்தே தீரும். சமூக மாற்றத்தைச் சிறிதளவு ஒத்திப் போடவோ சிலகாலம் தள்ளி வைக்கவோ முடியுமே தவிர அதனைத் தவிர்க்க முடியாது..............................


மேலும் படிக்க
http://maatrukkaruthu.blogspot.com/2011/04/19.html

விமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல் விமர்சித்தவரை தாக்குவது சரியான அணுகுமுறையா?

"உண்மை" எனும் இணைய உலாவி ஒரு நல்லெண்ணத்துடன் "போராட்டம்" எனும் ப்ளாக்கில் 'உங்களைப் பற்றிய பதிவு' என‌ நமது "பகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன் அரசியலுக்கு இழுக்கும் மகஇக-வும்" எனும் பதிவிற்கான இணைப்பை வழங்க, "போராட்டம்" நிர்வாகி (அவரது உண்மைப் பெயரை அறிய முடியவில்லை) நமக்கான பதில் ஒன்றை

புதன், 20 ஏப்ரல், 2011

தேனி நகரில் சி.டபிள்யு.பியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (சி.டபிள்யு.பி) சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30.01.2011 அன்று நடைபெற்றது. தேனி வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தோழர்கள் .சிவக்குமார், சத்தியமூர்த்தி, வரதராஜ் ஆகியோர் உரையாற்றினர். சி.டபிள்யு.பி. அமைப்பின் தென்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் .ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

தோழர் ஆனந்தன் தனது உரையில் .............

.....................சரியான அரசியல் கட்சியின் தேவையை வலியுறுத்திய அவர், அது போன்றதொரு கட்சி எகிப்தில் இல்லாததன் காரணமாகவே ஜனநாயகத்திற்காக அணிதிரண்ட மகத்தான மக்கள் சக்தி முஸ்லீம் பிரதர்கூட் அல்லது இராணுவம் ஆகியவற்றில் ஏதாவதொன்றால் பயன்படுத்திக் கொள்ளப்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது என்ற கருத்தை முன்வைத்தார். மக்கள் மெளனமாக இருப்பதால் அவர்களிடம் எழுச்சியுணர்வு இல்லாமற் போய்விட்டது என்று கருத முடியாது. அதற்கு எடுத்துக்காட்டு டுனிசியாவின் எழுச்சி, வேலையில்லாத இளைஞன் ஒருவனின் தீக்குளிப்பு அந்நாட்டில் மட்டுமல்ல பல ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளிலும் ஜனநாயகத்திற்கான மக்கள் எழுச்சிகளைத் தூண்டுவதாக அமைந்தது என்பதை எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க
http://maatrukkaruthu.blogspot.com/2011/04/blog-post_20.html

இன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற்றமே தவிர உள்ளடக்கமல்ல


இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். ஜனநாயகத்தின் முதுகெலும்பு என முதலாளித்துவ ஜனநாயகம் கருதும் தேர்தல்கள், சுதந்திரமாக முறை கேடுகளின்றி நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அது உருவாக்கப் பட்டது.
தேர்தல் முறைகேடுகள் காலங்காலமாக நடந்து வந்தாலும் எப்போதும் அவை ஒரே வகையினதாக இருக்கவில்லை. அளவிலும், பரிமாணத்திலும் அவை வேறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. கள்ள ஓட்டு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்றவை ஒரு காலத்தில் முக்கியமான முறைகேடுகளாக இருந்தன.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு அறைகூவல்

தோழர் கு.கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)

 

108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடும் இந்திய முதலாளித்துவத்தின் பகீரதப் பிரயத்தனமும்தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் 75-80 சதவீத வாக்குப்பதிவுடன் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

 இந்தியாவில் நிகழ்ந்த கடந்த சில தேர்தல்களை குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தல்களையும் நோக்கும் பொருட்டு இந்தியாவில் தேர்தல் கமிசன் செயல்படுகிறதா? இல்லையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில்

சனி, 16 ஏப்ரல், 2011

பினாயக் சென்னும் , இந்திய இறையாண்மையும்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின்   மாபெரும்  கனிமவளங்களை விற்க மத்திய,மாநில அரசுகள் ஒப்பந்தம் போட்டனஆனால் அங்கு  வசிக்கும்  பழங்குடியின  மக்களுக்கு உரிய நிவாரணம்  எதையுமே  தராமல்  அவர்களை வன்முறையாக வெளியேற்றியதுஇதுபோன்ற அரசின் மக்கள் விரோத  போக்குகளுக்கு  எதிராக தொடர்ந்து போராடி வந்தார் மக்கள் மருத்துவர் பினாயக் சென்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

பயணிகளிடம் பகல் கொள்ளையடிக்கும் பேருந்து நிலைய கடைகள்


நாம் வெளியூர்  செல்ல அவசர அவசரமாக கிளம்பி பேருந்தை பிடிக்க ஓடுகையில் நமக்கு தேவையான பொருள்களை கொண்டு செல்ல மறந்து விடுவோம். அவசரத்திற்காக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்க  நாம் விலையை விசாரித்தால் நமக்கு தலை சுற்றலே வந்துவிடும். அந்த அளவிற்கு அதீத விலை வைத்து பொருள்களை    விற்கின்றனர். சாதரணமாக தண்ணீர் பாட்டிலின்  விலை 20 /- அதுவும் கூட்டம் அதிகம் வரும் நாட்களுக்கென்று தனி ரேட் வைத்து விற்கின்றனர்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

சி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்


இந்தியாவில் அரசியல் கட்சிகளின் பல அந்தரங்கங்களை விக்கிலீக்கிசில் அடுத்தடுத்து வந்த கேபிள்கள் இந்த கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு  நிலையினை பகிரங்கப்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தமே இந்திய முதலாளிகளின் நிர்பந்தத்தால் தான் அரசு கவிழ்ந்தாலும்  பரவாயில்லை எம்பிக்களை விலைக்கு  வாங்கியாவது  அரசை  காப்பாற்றலாம் என்று காங்கிரஸ்  அரசு கொண்டு வந்தது. இது மட்டுமல்ல அப்போது இதற்கு மாநாடு போட்டு எதிர்ப்பு தெரிவித்த பி.ஜே.பி யும் கூட அந்த மாநாட்டு தீர்மானத்தை பெரிதாக கண்டு கொள்ளவேண்டாம் , இது மக்களை ஏமாற்ற நாங்கள் போடும் மாநாடு , நாங்களும்  இந்த  ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் என்று அமெரிக்காவிற்கு  பச்சை  கொடி  காட்டியதுஇதை எல்லாம் மிஞ்சும் வகையில் அருண் ஜெட்லி   ‘நாங்கள் சந்தர்ப்பவாதிகள்’ பொதுமேடைகளில்  பேசுவதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்  என்று அமெரிக்க தூதரிடம் சொல்லுகிறார்இப்படி காங்கிரசும் , பி.ஜே.பியும் இந்திய முதாளித்துவத்தின் இருவேறு முகங்கள் என்பதும் இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு முதலாளித்துவ சேவை செய்வதும் அசலும் , நகலுமாக அம்பலமாகி இருக்கிறது.

ஓட்டுக்காக நீங்கள் பணம் வாங்குவதும் லஞ்சம் தான்அரசு அலுவலகங்களில், அரசு அலுவலர்கள் தங்களின்  கடமையை  செய்யவே லஞ்சம் வாங்குவார்கள், அப்படி லஞ்சம் வாங்குபவர்களை நாம் மனிதர்களாக கூட மதிப்பதில்லை, அவர்களை நாம் ஒருவித அருவருப்புடன் தான் பார்க்கிறோம்ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும்   நாம் அதே அருவருப்புடன் தான் உற்று நோக்குகிறோம். இதோ அங்கு தொட்டு இங்கு தொட்டு நம்மையே ஊழலில் கூட்டாளியாக்க நமக்கு லஞ்சம் கொடுத்து ஒட்டுக்கேட்க கையில் கவருடன் வந்துகொண்டுள்ளனர் மெஹா ஊழல் அரசியல்வாதிகள். இந்த தேர்தல் மூலம் எந்த மாற்றமும் இந்த நாட்டில் ஏற்பட்டுவிடப்போவதில்லை இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும் வரையிலும் அது சாத்தியமில்லை என்ற போதிலும் நம்மிடம் உள்ள விலை மதிக்கமுடியாத சொத்து நமது தன்மானமே. அந்த தன்மானம் ஓட்டுக்காக  விலை பேசப்படுவதை நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால் நம்முடைய போராட்ட குணம் மழுங்கி நாமும் இந்த ஊழல் சாக்கடையில் ஒரு அங்கமாகிவிடுவோம். அடுத்து ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு ஊழலுக்கும் நாமும்   பங்குதாரர்களாகிவிடுவோம். ஆகவே வாக்காளர்களே நீங்கள் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்.அது உங்களையும்,  இந்த      சமூகத்தையும், எதிர்கால தலைமுறையையும்  நீங்காத  துன்பத்தில்   மூழ்கடித்து விடும்.
  

ஊழலுக்கெதிரான சமூக ஆர்வலர் திரு. அன்னா ஹசாரே அவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சமூக ஜனநாயக சக்திகளின் பங்கு

  
  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுடன் தோன்றிய முதலாளித்துவ ஜனநாயகம் அதன் உண்மையான உள்நோக்கமான -  முதலாளி வர்க்க நலனை மட்டுமே பேணிக்காக்கும் தங்கு தடையில்லாத வாணிபச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதாகவே இன்று சுருங்கிப் போயுள்ளது. இம்முதலாளித்துவ சமூக அமைப்பின் அடிப்படைகக் கோட்பாடுகளில் மிகப்பெரிய சறுக்கல்கள் தோன்றும் போது அவற்றிக்கெதிராக கிளர்ச்சிகள் சமூகத்தில் வெடித்துக் கிளம்பும் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டே திரு. அன்னா ஹசாரே அவர்களால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்காலங்களில் அரங்கேறும் மாபெரும் ஊழல்களுக்கெதிரான சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகும்.


 இவ்வகையிலான ஒரு மாபெரும் கிளர்ச்சியானது 1970 களில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஜே.பி) அவர்களால் தொடங்கப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய அரசியலில் தோற்றுவித்தது. இக்கிளர்ச்சியின் வாயிலாக இன்று திரு. அன்னா ஹசாரே அவர்களை திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ஒப்பிடும் போக்கு தோன்றியுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
 ஊழலுக்கெதிரான லோக்பால் - ஒரு திடமான சட்டவரைவு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் திரு. அன்னா ஹசாரே அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில்  நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் பொதுவாக இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய உலகக்கோப்பை வெற்றி போன்ற சம்பவங்களுக்கு மத்தியிலும் இந்திய மக்களனைவரையும், குறிப்பாக இந்திய நடுத்தர மக்களனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு மாபெரும் நாடு தழுவிய இயக்கமாக இவ்வியக்கம் உருப்பெற்றது. எங்கே ஜே.பி இயக்கத்தின் 2ஆம் பகுதி தொடங்கிவிட்டதோ என்ற ரீதியில் ஆட்சியாளர்களுக்கு ஒரு மிரட்சியை ஏற்படுத்தியது.


 வரும் குளிர்காலக் கூட்டத்தொடருக்குள் ஊழலுக்கெதிரான திடமான லோக்பால் சட்டவரைவு கொண்டு வரப்படும் நோக்கில் திரு. அன்னா ஹசாரே உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் திரு.மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்டு திரு.அன்னா ஹசாரே அவர்களால் தொடங்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனநாயகப்போராட்டத்திற்கான ஒரு மிகப்பெரிய வெற்றியாகவே சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இக்கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற திரு. அன்னா ஹசாரே அவர்களின் அறிவிப்பு சமூக ஜனநாயக சக்திகளுக்கு ஒரு உத்வேகத்தையும் வழங்கியுள்ளது.


 உண்மையான சமூக ஜனநாயகத்தை இன்றைய சமூக அமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதின் மூலமே நிறுவமுடியும் என்ற மார்க்சிய பொதுவுடமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் சமூக ஜனநாயகவாதிகள் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பவர்களாக திரு. அன்னா ஹசாரே அவர்களின் கரங்களை வலுப்படுத்த முழுவீச்சில் முன்வர வேண்டும். அதே சமயத்தில் சமூக மாற்றத்தை இந்திய மண்ணில் நிலைநாட்ட இவ்வகையிலானப் போராட்டங்கள் தங்கு தடையில்லாமல் தொடர வேண்டும். சமூக மாற்றத்தை நிலை நிறுத்துவதற்கு ஒரு சரியான கருவியான இவ்வியக்கத்தில் முழுவீச்சுடன் பங்கு பெற வேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும். கோடிக்கால் பூதமென கிளர்ந்தெழ வேண்டும்.   

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

ஐ.பி.எல்லின் ஏலத்தை மிஞ்சியது பார்கவுன்சிலின் சேர்மன் பதவி


பார்கவுன்சிலின்  உறுப்பினர் தேர்தல் சென்ற மாதம் நடந்து முடிந்தது. உயர் நீதிமன்றம் பல கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்திருந்தும் பணமும் ,சரக்கும்,பிரியாணியும் ஆறாக பாய்ந்தது. நாகர்கோவில்  போன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் தேர்தலில் முறைகேடுகள் நடந்த இடங்களின் வாக்குகளை செல்லாததாக்கியது. தற்போது 25  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இருந்து சேர்மன் தேர்வு நடைபெறபோகிறது. அந்த தேர்வுக்கு தான் குதிரைப்பேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஏலத்தின் ஆரம்ப பேரம் ரூபாய்.50  ௦லட்சம் ஆகும். இப்படி விலைபோகும் உறுப்பினர்களை கொண்டு நமது பார் கவுன்சில் இயங்குமானால் அது ஒட்டுமொத்த நீத்துறையையே கடும் ஊழலுக்கு இறையாக்கி விடும். மக்கள் கடைசி புகலிடமாக தான் நீதிமன்றங்களை நாடிவருகிறார்கள் அந்த நீதிமன்றங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதித்துறையில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்போம்.  ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம்.  


அண்ணா ஹசாரேவிற்கு ஆதரவு பெருகுகிறது- மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம்


ஊழலை ஒழிப்பதற்கான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் அலை  அலையாக ஆதரவு  பெருகி கொண்டே செல்கிறது.  நாட்டில் பல இடங்களில் மாணவர்கள் , சமூக  ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வரும் ஏப்ரல் 13  அன்று  சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவெங்கும் துடிப்புடன்  மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்ப துவங்கியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் இன்றும் (08 .04 .2011  )  நடைபெற்றன. மதுரையில் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு அருகிலல் உண்ணாவிரதப்போராட்டத்தினை

 கே.கே.சாமி , பிளமின் ராஜ் , வேல்முருகன், பகத்சிங் ஆகியோர் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு  தெரிவித்தனர்.   ஊழலுக்கு எதிராக  இந்தியாவெங்கும்  மக்கள் கிளர்ந்து எழுவது  1970  ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கத்தை(J.P.Movement) ஞாபகமூட்டுகிறது.

முகப்பு

புதிய பதிவுகள்