திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஒரு பொதுத்துறை நிறுவனம் கொள்ளை போவதைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் அரசியல் சந்தர்ப்பவாதம்ஒரு நாட்டின் தொழில்கள் தேசியமயமாக்கப் படுவதற்கும், சமூக மயமாக்கப்படுவதற்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன. உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதாவது சில தொழில்கள் தேசிய மயமாக்கப் பட்டவையாகவே உள்ளன. அவ்வாறு சில தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டு அரசுத் துறையில் இருப்பது அரசாங்கங்களுக்கு அவசியமாகவும் உள்ளது.
அதாவது தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்து பாரபட்சமின்றி அனைத்து முதலாளித்துவத் தொழில்களின் வளர்ச்சிக்கும் தேவையான ஆதார வசதிகளைக் குறைந்த செலவில் செய்து தருவது முதலாளித்துவ அரசுகளுக்கு அவசியமாக உள்ளது. அதைத் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனங்கள் செய்கின்றன.
ஆனால் இவ்வாறு முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் தேசிய மயத்தையும் அரசுத்துறையில் இருக்கும் தொழில்களையும் சோசலிசத்தின் சுவடுகள் என்று கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் கூட நமது நாட்டில் தவறாகக் கருதுகின்றன. இங்கு மட்டுமல்ல அப்போக்கு வெவ்வேறுபட்ட அளவுகளில் உலகின் பல நாடுகளிலும் நிலவுகிறது.
மேலும் படிக்க மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்