சனி, 31 மார்ச், 2012

SUCI- கட்சியின் தற்போதைய தலைமையுடனான நமது கருத்து வேறுபாடுகள் (Our Differences)


கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பாரம் ,
தமிழ்நாடு 

முன்னுரை 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாபெரும் தியாக வரலாற்றுடன் பங்கேற்றதும் பரந்த அளவில் மக்கள் ஆதரவினைப் பெற்றிருந்ததும் இந்தியப் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துத் தரும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்திற்கு முன்பும் , சுதந்திரமடைந்த பின்னரும் பல அடிப்படைத் தன்மை வாய்த்த தவறுகளைச் செய்தது. சுதந்திரமடைந்திற்கு முன்பு இந்திய விடுதலைப் போரில் சமரசமற்ற போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளோடு ஒருங்கிணைந்து இந்திய விடுதலைப் போரையே ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சியாக மாற்றுவதற்கு அக்கட்சி தவறியது. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த இந்திய முதலாளி வர்க்கத்தை புரட்சியின் நேச சக்தியாகச் சித்தரிக்கும்  ' தேசிய ஜனநாயகப் புரட்சி ' திட்டத்தை அது தனது அடிப்படை அரசியல் வழியாக முன் வைத்தது. அக்கட்சியும் அதிலிருந்து பிரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) உட்பட பல கட்சிகளும் இன்று வரை எந்த முதலாளி வர்க்கம் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ளதோ அந்த முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாகச் சித்தரிக்கும் ஏதாவதொரு அடிப்படை அரசியல் வழியையே இன்றும் பின்பற்றி வருகின்றன. இதனால் பொங்கிப் பிரவாகித்த மக்கள் எழுச்சி பல தருணங்களில் திசை திருப்பப்பட்டு முடங்கிப் போனதோடு இக்கட்சிகள் அனைத்தும் அப்பட்டமான வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றி நாடளுமன்ற மற்றும் தேசியவாதச் சேற்றிலும் சகதியிலும் புரளும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதையும் இன்றும் நாம் வேதனையுடன் கண்ணுறுகிறோம்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய இமாலயத் தவறுகளிலிருந்து உரிய படிப்பினை எடுத்துக் கொண்டதோடு சர்வதேச சூழ்நிலைகளையும் துல்லியமாக ஆய்ந்து இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான அடிப்படை அரசியல் வழியாக முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிஸப் புரட்சிப் பாதையினை முன் வைக்கும் SUCI கட்சியினை பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் சிப்தாஷ் கோஷ் அவர்கள் 1948 ம் ஆண்டு ஸ்தாபித்தார். தோழர்.சிப்தாஷ் கோஷின் தலைமையில் செயல்பட்டு பல அறிய வழங்கல்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கும் மார்க்சிஸ - லெனினிஸக் கருவூலத்திற்கும் நல்கும் அளவிற்கு இருந்த அக்கட்சி அவரது மறைவிற்குப் பின் போர்க்குணமிக்க இயக்கம் கட்டும் பாதையினைக் கைவிட்டு சம்பிரதாய ரீதியிலான செயல்பாட்டை மட்டும் நடத்த வல்லதாக ஆகியது. அதன் விளைவாக கட்சி வாழ்க்கையில் உயிரூட்டமிக்க போராட்டத்தை தக்க வைக்கத் தவறியதோடு மார்க்சிஸம் - லெனினிஸத்தையும் தோழர் சிப்தாஸ் கோஷ் சிந்தனைகளையும் வரட்டுச் சூத்திர வாதங்கள் போல் ஆக்கி செயல்படத் தொடங்கியது. இத்தகைய செயல்பாடுகளின் தவிர்க்க முடியாத விளைவாக கட்சியின்  அடிப்படை அரசியல் வழியிலையே தடம் புரளல் ஏற்பட்டு இந்தியாவில்  கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் மற்ற கட்சிகளைப் போல் அக்கட்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோஷத்தை  பிரதானப்படுத்தி உள்நாட்டு முதலாளித்துவத்தை மூடி மறைத்துக் காக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. அக்கட்சி இத்திசை வழியில் நடத்திய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு' அதன் இத்தகைய போக்கிற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.

வெள்ளி, 30 மார்ச், 2012

அரசு மூலதனமும் தனியார் மூலதனமும்: ஒரு ஆய்வு

அரசு மூலதனமும் தனியார் மூலதனமும்

தனியார் மயம் தாராள மயம் உலகமயம் தான் பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்வது நிஜத்தை விடுத்து நிழலை சொல்வதாகும் முதலாளித்துவம் தான் சமூக சுரண்டல் ஒடுக்குமுறைக்கு ஆதார காரணம் என சொல்லாமல் வேறு ஒரு காரணத்தை கற்பிப்பதாகும்.இதன் மூலம் அரசுடமை ஆகிவிட்டால் தனியார் சுரண்டலில் இருந்தும் ஒடுக்குமுறையில் இருந்தும் தப்பி நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லலாம் என கருதுவது தவறான கருத்துஆகும் .(அரசு உடமை வேறு, சமூக உடமை வேறு)

தனியார் மயத்தை தடுப்போம் அரசே ஏற்று நடத்த சொல்லி போராடுவோம் என கொந்தளிப்பதால் எந்த நன்மையும் மாற்றமும் ஏற்பட போவதில்லை உண்மையில் அரசு மூலதனமும் தனியார் மூலதனமும் அண்ணன் தம்பிகள் தானே தவிர வேறல்ல.

செவ்வாய், 27 மார்ச், 2012

லட்சிய தீயை பற்றவைத்தது : பகத்சிங் நினைவுதினப் பொதுக்கூட்டம்


மதுரை சமயநல்லூரில் தியாகி  பகத்சிங்கின் 81 வது  நினைவு தினத்தை முன்னிட்டு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம்( CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM )  சார்பாக 23.03 .2012 அன்று  நினைவு ஸ்தூபி எழுப்பட்டு CWP  தோழர்கள் மற்றும் அந்த பகுதி வாழும் மக்களால் வீர வணக்கம் செலுத்தப்பட்டது . 25 .03 .2012 அன்று பொது கூட்டமும் நடடத்தப்பட்டது.  மாணவர் ஜனநாயக இயக்கத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் தோழர். டேவிட் வினோத் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுகூட்டத்தில் CWP,சமயநல்லூர் கிளை பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் வரவேற்புரை வழங்கினார். மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் , உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர் .வரதராஜ் , சமயநல்லூர் மகாதேவன் ,விருதுநகர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஜெகநாதன் , சிவகாசி பட்டாசு தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் தோழர்.தங்கராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

வியாழன், 22 மார்ச், 2012

மேல் நோக்கியே எழுந்தாடும் நெருப்பு : பகத்சிங்தீ ஞான தன்மானத்தின் அடையாளம் 
தலைகீழாய் பிடித்தாலும் தீ 
மேல்நோக்கியே எழுந்தாடும் 
பகத்சிங் ஒரு வாலிப நெருப்பு 

தன்னை உரசினாலும் 
தான் உரசினாலும் 
பாதகமில்லை நெருப்புக்கு 

புதன், 21 மார்ச், 2012

தியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி : சிவகாசி - மாதாங்கோவில் பட்டி


"விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்தியஉழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்தொடர வேண்டும்.அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாகஇருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்தியமுதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்தியமுதலாளிகளாகக் கூட இருக்கலாம்அவர்கள் தங்களது நயவஞ்சகமானசுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக்கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்.. இந்தப்போர் தொடர்ந்தே தீரும்.. அது ஒரு புதியஉத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசுநிறுவப்படும் வரையிலும் இந்தப்போர் எங்களோடுதொடங்கவுமில்லை;எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை.வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சுழ்  நிலைகளினதும்தவிர்க்க முடியாத விளைவே இப்போர்".
                                                                                                                - தியாகி பகத்சிங்

செவ்வாய், 20 மார்ச், 2012

தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்


"புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம் , துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது". - பகத்சிங்

சனி, 17 மார்ச், 2012

நெருக்கடியில் தள்ளும் பட்ஜெட்கள் : பி.எப். வட்டி குறைப்பும், ரயில்வே கட்டண உயர்வும்


கடும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், என்று நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் சாதாரண மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும் விதத்தில் 2012 -2013 ம் நிதி ஆண்டுக்கானா பொது  பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் , ரயில்வே பட்ஜெட்டை  ரயில்வே அமைச்சர் திரிவேதியும் தாக்கல் செய்துள்ளனர். பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு சலுகை அளித்திருப்பதும் , அந்நிய முதலீட்டளர்களுக்கு  வரி சலுகைகள் வாரி வழங்கியிருப்பதும் பெரும் முதலாளிகள் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்க வழி வகுக்குமே அல்லாமல் சாதாரண மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்காது.

வியாழன், 15 மார்ச், 2012

மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர் - இராபர்ட் ஓவன்ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், புதிய கருவித் தயாரிப்பு எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. பட்டறைத் தொழில் காலத்தில் மந்த கதியில் நடைபோட்டு வந்த வளர்ச்சி, உற்பத்தியில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாக மாறியது. சமுதாயம் பெரு முதலாளிகளாகவும் உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுறுவது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வேகத்தில் நிகழ்ந்தது. இவ்விரு வர்க்கங்களுக்கும் இடையில், முன்பிருந்த நிலையான நடுத்தர வர்க்கத்துக்குப் பதிலாகக் கைவினைத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் அடங்கிய ஒரு நிலையற்ற மக்கள் திரள் இடம்பெற்றது. மக்களில் மிகவும் ஊசலாட்டமான பகுதியினரான இவர்கள் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கை நடத்தினர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்


பஸ் கட்டண உயர்விற்கு பிறகு பயணம் என்பதே அவ்வளவு இனிமையானதாக சாதாரண மக்களுக்கு இல்லாமல் போயுள்ள இந்த சூழ்நிலையில் பின்வரும் இடர்களையும் சாதாரண மக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. அவை ;
அரசு பேருந்துகள்:
1.சரியான மாற்றுப் பேருந்து வசதி இல்லை.
2.பேருந்துகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை.
3. தொலைதூரப்பேருந்துகளில் இடையில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பது.
4. இரண்டு ஓட்டுனர்களை பணியில் அமர்த்தாதது.

புதன், 14 மார்ச், 2012

இருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும் புகலூர் பாரிஸ் சுகர் பேக்டரி நிர்வாகம்


நமக்கு இனிப்பு சுவை தரும் பண்டங்களை சாப்பிடும் பொது சந்தோசம் பிறக்கும் , ஆனால் அந்த இனிப்பு சுவைக்கு காரணமான  சர்க்கரையை விளைவிக்கும் விவசாயிகளும் , சர்க்கரை ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் அது போன்ற சந்தோசத்தை அனுபவித்த தருணங்கள் மிக குறைவே ஆகும். மிகப்பிரமாண்டமான ஆலையில் ராட்சத அரவை இயந்திரங்களில் அறைபடுவது கரும்பு மட்டுமல்ல ஏழை தொழிலாளர்களும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொழிலாளி  அவன் விளைவிக்கும் பொருள்களில் இருந்தே அன்னியமாக்கபடும் தனிச் சொத்துடமை ஒழியும் வரை இந்த கொடுமைகள் தொடரவே செய்யும் .

ஞாயிறு, 11 மார்ச், 2012

தொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்பூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த தொழிலாளர்களான இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகவும் குறைவாகும். முதலில் ட்ரெயினியாக வேலைக்கு சேரும் இவர்களுக்கு ரூ.3000௦௦ ற்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. பிறகு என்ன தான் குட்டி கரணம் அடித்து வேலை செய்தாலும் இவர்களின் மாத சம்பளம் ரூ.6000 த்தை தாண்டுவதில்லை. வேலை நிரந்தரமாக்கப்படுவது என்பது அறவே ஒழிக்கப்பட்டு விட்டது. 

வியாழன், 8 மார்ச், 2012

அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் , பேரணி

மும்பை , கொல்கத்தா , கேரளாவில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கோரி தொடர்ந்து வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அந்த போராட்ட தீ சென்னையில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்களையும் பற்றிக் கொண்டது. மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர், அப்பல்லோ ஆகிய மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர் மருத்துவ மனைகளில் நிர்வாகத்திற்கும் ,தொழிலாளர்களுக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து செவிலியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்.(நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் பாதிக்கும் மேல் ஏற்றுக்கொண்டது )  

புதன், 7 மார்ச், 2012

சென்னை நகர செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரள்வோம்


கல்வியும் மருத்துவமும் தொழில்களாக கருதப்படுவதில்லை. அவை சேவையாக கருதப்படுகின்றன. சேவை என்பதன் பொருள் ஆதாயம் கருதமால் மனித குலத்திற்கு ஆற்றும் பணியாகும். ஆனால் இவ்விரு துறைகளும் சேவையாக இல்லாமல் லாபம் ஈட்டுவதையே முதல் மற்றும் முழு நோக்கமாகக் கொண்டு செயல்படுபவையாக இன்று ஆகி விட்டன. அதற்கான காரணம் அரசு இவ்விரு துறைகளையும் கைவிட்டுருப்பதாகும். அரசு மருத்துவ மனைகளை மட்டுமே பல காலம் நம்பியிருந்த சாதாரண மக்கள் கூட இன்று தனியார் மருத்துமனைகள் பக்கம் தள்ளப்படுகின்றனர். அம்மருத்துவமனைகள் அப்பட்டமான வணிக வளாகங்கள் போல் ஆகிவிட்டன. அறை வாடகையிலிருந்து மருத்துவர் கட்டணம் வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவை கட்டணங்களை வசூலித்து குவிக்கின்றன.

திங்கள், 5 மார்ச், 2012

மார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்


மாமேதை லெனின் கூறினார்: நடைமுறை இல்லாத தத்துவம் வறட்டுத் தத்துவம்தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டு நடைமுறை என்று. தத்துவத்தை அது பகட்டாகத் தங்கியிருந்த தந்த மாளிகையிலிருந்து விடுவித்து இதுவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உலகத்தை நடைமுறைகளோடு பொருத்திக் காட்ட மட்டுமே செய்தனஆனால் தேவை என்னவென்றால் அதனை மாற்றுவதே எனக் கூறிய மாமேதை மார்க்ஸின் கருத்தை ரஷ்யப் புரட்சியின் மூலம் நிரூபித்ததோடு தத்துவம் நடைமுறை ஆகிய இரு அம்சங்களின் உருவகங்களாகவும் விளங்கியவர்களே மாமேதைகள் லெனினும்ஸ்டாலினும் ஆவர்.

தனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும்


சென்னையில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் மருத்துவமனைகளான அப்பல்லோ,போர்ட்டிஸ் மலர், மியாட் , மெட்ராஸ் மெடிகல் மிசன் , குளோபல், பில்ராத் போன்ற மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு, ஓவர் டைம்மிற்கு இரண்டு மடங்கு ஊதியம் , கொத்தடிமைகளாக ஆக்கி வைத்துள்ள சட்டவிரோத ஒப்பந்த முறையை ஒழிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள் , வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முறைபடி ஸ்ட்ரைக் நோட்டீஸ் நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர். 

சனி, 3 மார்ச், 2012

ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் வரலாற்றுப் பூர்வ முயற்சியை வரவேற்போம் - ஆதரிப்போம்


நம் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மிக அதிகம். அப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இருக்கின்றன என்று கருதப்படக்கூடிய கட்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமே. இன்னும் குறிப்பாகப் பார்த்தால் இருக்கும் அனைத்துக் கட்சிகளிலும் பொறுப்புடன் பிரச்னைகளின் தீர்வுக்காகப் பாடுபடக் கூடியவை என்று அரசியல்  அறிவு கொண்டவர்களால் கருதப்படக் கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூட நமது நாட்டில் பஞ்சமில்லை. அவ்வாறிருக்கையில் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருக்கொடுக்கப் போகிறோம் என்றால் அதற்கான தேவை என்ன என்ற கேள்வி மக்கள் மனதில் யதார்த்தமாக எழவே செய்யும். 
கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை அமைப்பு துவக்க கன்வென்சன்நண்பர்களே!
உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விண்ணை முட்டும் விலைவாசி; உயர்மட்டத்திலுள்ள ஆளும் வட்டாரங்கள் சொல்வதற்கும் அவர்களின் வாக்குறுதிகளும் மாறாக கிராமப்புறங்கலும் நகர்புறங்களிலும் தொடர்ச்சியாகப் பெருகிவரும் வேலையின்மை; அதிகாரவர்க்கம் , நிர்வாகதுறை, நீதித்துறை என அனைத்துத் துறைகளின் அனைத்து மட்டங்களிலும் முழுவீச்சில் ஊடுருவிப் பரவி யிருக்கும் ஊழல்; சாதரண மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு அதிகச்செலவு மிக்கதாய் முழுக்க முழுக்க வியாபாரமாகிப் போன கல்வியும், மருத்துவமும்; சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் செல்லரித்துப்போன கலச்சாரக்கட்டமைப்பும் சீரழிந்து ஒழுக்கமும் நேரமையற்ற போக்குகளும் இவையே இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் அவலமான சித்திரம். இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தும் அதிகார அமைப்பாகச்செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துடன் உருவாக்கப்பட்ட நாடளுமன்றம் உட்பட பல்வேறு மட்டங்களில் செயல்படும் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளோ அப்பங்கினை ஆற்றத் தவறி நீண்ட காலமாகி விட்டது. அவை அனைத்தும் தங்களின் சுயலாபத்திற்காகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் பொதுபணத்தைச் சூறையாடும் கொள்ளைக்காரர்களின் அமைப்புகளாக மாறிவிட்டன.

மேலும் படிக்க

வெள்ளி, 2 மார்ச், 2012

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து காலை இழந்த 6 ம் வகுப்பு மாணவிஅனைவருக்கும் கல்வி திட்டத்தின் ( எஸ்.எஸ்.ஏ) கீழ், ஒவ்வொரு பள்ளியும் முறையான கட்டிட வசதி, மாணவ மாணவிகளுக்கு தனித்தனியான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம் , மாணவர்களின் முழு வருகை , மாணவர்களின் இடை நிற்றல் இல்லாமல் இருத்தல், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு , பள்ளி நூலகம், புத்தக பூங்கொத்து திட்டத்தின் முழுமையான பயன்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்த கோடிக்கணக்கான நீதி ஒதுக்கப்பட்டு ஆண்டு தோறும் அந்த நிதி செலவழிக்கப்பட்டு விட்டதாக கணக்குக் காட்டப்படுகிறது. ஆனால் கல்விக்கூடங்களோ அந்த நிதியினால் எந்தவிதப்  பயனையும் அடைய வில்லை என்று சாட்சியம் பகர்கின்றன. அப்படி கட்டப்படும் கட்டிடங்களின் தரமும் மிகவும் மோசமாக இருக்கின்றன, எவ்வாறெனில் அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியை போல. 

வியாழன், 1 மார்ச், 2012

தியாகி பகத்சிங் சிலை மதுரையில் அமைக்க வேண்டும்: மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை


சமூக வளர்ச்சியின் படிக்கட்டுகளில் அச்சுத்தொழிலுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இந்த சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட பல்வேறு அறிஞர்களின் கருத்துகளை அழகாக தொகுத்து இந்த உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருந்தது அச்சுத் தொழிலே ஆகும். அச்சு இயந்திரங்களில் தொழில்நுட்பமும், அச்சக முதலாளிகளும் முன்னேறிய அளவிற்கு அதில் காலம் காலமாக பணிபுரியும் தொழிலாளர்கள் முன்னேறவில்லை. சிறிதும், பெரிதுமாக அச்சகங்கள் இருந்த போதும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே தரப்படுகிறது, புதிய இயந்திரங்கள் வரும் போது எந்த வித இழப்பீடும் தரமால் தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்படுகிறார்கள், தொழிலாளர்களுக்கு சட்டப்படி உள்ள 8 மணி நேர வேலை, பி.எப்., இ.எஸ்.ஐ.,எதுவும் வழங்கப்படுவதில்லை.

முகப்பு

புதிய பதிவுகள்