புதன், 2 பிப்ரவரி, 2011

2 ஜி ஊழல்: ஆ.ராசா கைது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மத்திய புலனாய்வுத் துறையால் தில்லியில் இன்று கைது செய்தது.ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராசாவிடம் இன்று காலை 4-வது முறையாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளிலும், ஜனவரி 31-ம் தேதியும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த நிலையில் 2 ஜி ஊழல் தொடர்பாக அவரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.இந்திய மக்கள் ஓன்று பட்டு குரல் கொடுத்ததால்தான் இந்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை நெருக்கியது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்