நிகழ்வுகள்

உங்கள் ஊரில் நடக்கப்போகிற , நடந்த நிகழ்வுகளை இயக்கத்தில் இடம் பெற செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு அனுப்புங்கள் ieyakkam@gmail.com  தொலைப்பேசி எண்: 9843 464246
........................................................................................................................................................
35 வது சென்னை புத்தகக்  கண்காட்சி 
35 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் 05 .01 .2012 முதல் 17 .01 .2012 வரை நடைபெற இருக்கிறது. இந்த புத்தக கண்காட்சி வேலை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வார விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். நெம்புகோல் பதிப்பகத்தின் வெளியீடான தோழர் த. சிவகுமார் எழுதிய  கேளாத செவிகள் கேட்கட்டும் தியாகி பகத் சிங் கடிதங்கள் கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள் ( விலை 
ரூ.150 /- ), மற்றும் மாற்றுக்கருத்து இருமாத மார்க்சிய இதழும்(பழைய இதழ்கள் உட்பட )  (விலை ரூ.10 )விற்பனைக்கு கிடைக்கும்.

மேற்கண்ட புத்தகங்கள் தேவைப்படுவோர் 9843464246 என்ற எண்ணினை தொடர்ப்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் . 

........................................................................................................................................................

மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்' 

மார்க்சிய சிந்தனை மையம் ஒவ்வொரு மாதமும் நாகர்கோவிலில் மார்க்சிய படிப்பு வட்டத்தை  சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்  கலந்து கொள்கிறார்கள். இந்த மாதத்திற்கான வகுப்பு வரும் 27.11.2011 அன்று நாகர்கோவில், தக்கலை, லைசியம் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த படிப்பு வட்டத்தில் கடந்த இரண்டு வகுப்புகளில் நடத்தப்பட்டு வரும்   இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி தோழர் அ.ஆனந்தன் அவர்களால் எடுக்கப்பட இருக்கிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : லைசியம் பள்ளி, தக்கலை , நாகர்கோவில்
நாள் : 27 .11 .2011 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணி
பொருள்  : இயக்கவியல் பொருள்முதல்வாதம்
தலைமை : தோழர்.பிரசாத்
சிறப்புரை :தோழர். அ.அனந்தன்
ஒருகிணைப்பாளர் : தோழர்.போஸ்
தொடர்பிற்கு : தோழர் மகிழ்ச்சி செல் : 9443347801

...........................................................................................................................................................
------------------------------------------------------------------------------------------------------------


அக்டோபர் 23 : நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'


கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவாக இயங்கினாலும் அனைவரும் மார்க்சிய சித்தாந்த வழியில்  நடப்பவர்களே, அதனால் கம்யூ னிஸ்டுகள் ஓன்று பட தடை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக பல்வேறு கம்யூனிஸ்டு  கட்சிகளை சேர்ந்தவர்கள்  இணைந்து நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பாக மார்க்சிய படிப்பு வட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான படிப்பு வட்டம் வருகின்ற 23 .10 .2011 அன்று நடைபெற இருக்கிறது. தோழர்.போஸ் , தோழர். பிரசாத் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்படும் இந்த படிப்பு வட்டத்தில் மூத்த எழுத்தாளர் தோழர். பொன்னீலன் அவர்களும், தோழர்.அ.ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டு கடந்த வகுப்புகளில் எடுக்கப்பட்ட 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் ' தொடர்ச்சியை எடுக்க இருக்கிறார்கள். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்கள் தத்வார்த்த மற்றும் நடைமுறைகளை மார்க்சிய வெளிசத்தில் கூர்தீட்டி கொள்ள இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

               நாள் : 23.10.2011 , ஞயிற்றுகிழமை 
              நேரம் :காலை 10.30 மணிக்கு 
              இடம் :  நாகர்கோவில், லைசியம் பள்ளி 
              தலைப்பு :   'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' 

தொடர்பிற்கு : தோழர். மகிழ்ச்சி - 94433 47801
-----------------------------------------------------------------------------------------------------------------------------

முகப்பு

புதிய பதிவுகள்