வியாழன், 23 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் நம்முன் உள்ள கடமைகள் என்ன?




இன்று எங்கு திரும்பினாலும் ஸ்பெக்ட்ரத்தை பற்றி தான் பேச்சு ஏனெனில் அதில் சம்பாத்தபட்ட தொகையானது 1.76 லட்சம் கோடி இன்றுஉள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சாதரணமாக  ஏன்   பெரிய தொழில் அதிபர்கள் கூட இவ்வளவு தொகையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மிகபிரமாண்டமான ஊழலை நமது திமுக , காங்கிரஸ் கூட்டணி நிகழ்த்தி உள்ளது. இது போன்ற சாதனைகளை இனி வரும் அரசுகளால் முறியடிக்க முடியாத அளவிற்கு உலகத்திலையே மிகப்பெரிய ஊழலை நிகழ்த்தி உள்ளன நமது திருவாளர் பரிசுத்தம் பிரதமராக உள்ள அரசு. இதில் ஆச்சரியமான  விஷயம் என்னவென்றால் இன்றைய மக்கள் அனைத்தையும் சகித்து கொள்கின்றனர் இவ்வளவு பெரிய ஊழல் நடந்து முடிந்துள்ளது ஊழலில் சம்பத்தப்பட்டவர்கள் அனைவரும் தமிழக அரசியலில் உள்ளவர்கள் என்றபோதும் இந்தியாவில் மற்ற அனைத்து பகுதிகளிலும் நடக்கும் போராட்டங்களை ஒப்பிடும் பொது இங்கு மக்கள் தூங்கி கொண்டிருப்பது வெட்கக் கேடான விஷயம் ஆகும். மக்கள் அனைவரும் தம்மை புத்திசாலிகள் என்றும் தாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் தாங்கள் எந்த அரசியல் விஷத்திலும் தலையிடப்போவத்தில்லை என்றும் இது ஏதோ எதிர்கட்சிகளின் விவகாரம் என்றும் நினைப்பார்களையானால் நம்பை போல அடிமுட்டாள்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். 




இங்கு யாருமே (காட்டில் வாழும் மிருகங்களும் கூட ) அரசின் பிடியில் இருந்து விலகி செல்ல முடியாது. அரசு நீங்கள் வானத்தில் பறந்தாலும் கடலில் மிதந்தாலும் அதன் அதிகாரத்தை உங்கள் மேல் கண்டிப்பாக திணிக்கும். அரசியல் சாக்கடை என்றபோதும் அது சுத்தம் செய்யபடாவிட்டால்   அந்த சாக்கடை தண்ணீரை குடித்து தான் நாம் உயிர் வாழ வேண்டி உள்ளது. இவ்வாறு அரசும் அதன் அக்டோபஸ் கரங்களும் உங்களை எப்போதும் தனது கைபிடிக்குள் இருந்து விட்டுவிடாது . ஏனெனில் அதன் முதலீட்டில் உங்கள் உழைப்பு பிரதானமாக கலந்து உள்ளது. நாம் ஒதுங்கி இருப்பதால் தான் இன்று குள்ள நரிகள் நாட்டமை செய்து கொண்டுள்ளது சிங்கங்களை போல சிலிர்த்து எழுங்கள் , அனைவரும் தமிழ்நாடு முழுவதும் இந்த மெகா ழலுக்கு எதிராக போராட்டங்களை அறிவியுங்கள் அது உங்களது கடமை ஆகும். நமது உழைக்கும் கரங்கள் கோர்க்க வேண்டும் அது இல்லாவிட்டால் நம்மால் நமது அடிமை சங்கிலியை உடைக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்