ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சீரும் சிறப்புடன் நடைபெற்றது மக்கள் கவிஞர்கள் விழா

ஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி  சோஷலிச கலை இலக்கிய மாமன்றம்   சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில்  நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி  23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று  சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மக்கள் கவிஞர் விழா நடைபெற்றது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப்போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ பிளாட்பார்ம் அகில இந்திய பொது செயலாளர் தோழர். அ.ஆனந்தன், அருணாசலம், சாமி , தோழர்.செல்வகுமார், தோழர் .சிவகுமார், தோழர். சுரேஷ் ஆகியோர் உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட விழா சிறப்புடன் நடைபெற்றது. 

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தாராளவாதக் கொள்கையா, ஆளும் முதலாளி வர்க்கமா, யார் காரணம்?


இன்று இந்திய சமூகம் பல பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. தொழிலாளர்,விவசாயிகள்மாணவர்கள் என்று சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் கடும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுள்ளனர். சமீப காலத்தில் ஊழல் நமது சமூகத்தின் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து உலெகெங்கும் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது.

தொழிலாளரைப் பொறுத்தவரையில் அவர்களது சம்பள விகிதங்கள் குறிப்பாகத் தனியார் துறையில் மிகப் பெருமளவு குறைந்துள்ளன. ஆலைகளை நடத்துவதற்கு ஆகும் மொத்த செலவில் தொழிலாளருக்குக் கொடுக்கும் ஊதிய விகிதங்கள் வெறும் 10 சதவிகிதமே என்ற அளவிற்கு இதுவரை கண்டிராத விதத்தில் 2008ம் ஆண்டிற்குப் பிந்திய ஆண்டுகளில் குறைந்துள்ளன. அவர்களுக்கிருந்த வேலைப் பாதுகாப்புப் பறிபோயுள்ளது. சங்கம் அமைக்கும் உரிமையை அவர்கள் இழந்து நிற்கின்றனர். அனைத்துத் தொழில் துறைகளிலும் ஒப்பந்தத் தொழில்முறை அமுலுக்கு வந்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர் ஒழிப்பு தனியார் உற்பத்தித் துறையில் தலைவிரித்தாடுகிறது.

கூலி அடிமைத்தனத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் - தோழர் ஆனந்தனின் மேதின உரைவீச்சு


திருத்தங்கல் நகரில் சி.டபிள்யு.பி-யின் மேதினப் பொதுக்கூட்டம்

இந்த ஆண்டு மேதினப் பொதுக்கூட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அமைந்திருந்த அரங்கில் 27.05.2012 அன்று மாலை நடைபெற்றது. அழகுற அமைக்கப்பட்டிருந்ததொரு மேடையில் நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமை ஏற்றார். தோழர்கள் தங்கராஜ்செல்வராஜ்ஜெகநாதன்கதிரேசன்சத்தியமூர்த்தி மற்றும் மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆகியோர் அக்கூட்டத்தில் உரையாற்றினர்.

இறுதியில் சிறப்புரையாற்றிய சி.டபிள்யு.பி-யின் தென்இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் ஆனந்தன் ஆற்றிய உரை சாராம்சத்தில் பின்வருமாறு இருந்தது.


நேபாள அரசியல் நிகழ்வுகள் - ஒரு இயக்கவியல் பூர்வ ஆய்வு


நேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் ஜனநாயகத்திற்காகவும் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு பல திருப்பங்கள் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளன. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-கள் தாங்கள் அதற்கு முன்பு நடத்தி வந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் முழுவீச்சுடன் இறங்கியது அப்போராட்டத்தின் பரிமாணத்தையே மாற்றியது.

நாடாளுமன்ற அரசியல் வட்டத்திற்குள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-களைக் கொண்டுவந்து விட்டால் அவர்கள் வீரியம் இழந்தவர்களாகவும் பதவி மோகம் கொண்டவர்களாகவும் மாறிவிடுவர்மேலும் நாடாளுமன்ற அரசியலின் நெளிவு சுளிவுகளை அறியாத அவர்கள் பெரிய தேர்தல் வெற்றிகளையும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தில் நேபாளத்தில் செயல்பட்ட யு.என்.எம்.எல். உள்பட சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை விரும்பாத  அனைத்து சக்திகளும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களை அப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டன.

குடியரசுத் தலைவர் தேர்தல்: சி.பி.ஐ(எம்) ன் சந்தர்ப்பவாத நிலைபாடும் ஜே.என்.யு-வின் எஸ்.எஃப்.ஐ. கிளை கலைப்பும்


நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதென்று இடதுசாரிக் கட்சிகளிலேயே பெரிய கட்சியாக விளங்கும் சி.பி.ஐ(எம்). கட்சி முடிவெடுத்துள்ளது. ஏறக்குறைய அனைத்து விசயங்களிலும் அக்கட்சியுடன் ஒத்துப்போய்க் கொண்டிருந்த சி.பி.ஐ. கட்சி தற்போது அதன் முந்தைய போக்கிலிருந்து மாறுபட்டு யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளது.

நடுநிலைத் தன்மை

இத்தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா எந்த வகையிலும் பிரணாப் முகர்ஜியைக் காட்டிலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி உடையவர் அல்ல என்று கூற முடியாது. விடுதலை பெற்ற காலம் தொடங்கி நமது நாட்டின் குடியரசுத் தலைவர்களாக அடுத்தடுத்து வந்த ராஜேந்திரப் பிரசாத்,ராதாகிருஷ்ணன்ஜாகீர் உசைன் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லோரும் அறிந்த விதத்தில் நடுநிலைத் தன்மை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த ஃபக்ருதீன் அலி அஹமத் காங்கிரஸின் முக்கியத் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவரும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நடுநிலைத் தன்மை கொண்டவராகவே இருந்தார்.


வழக்கு எண் 18/9 ஆர்ப்பாட்டமின்றி உள்ளத்தை உருக்கும் யதார்த்தமான சமூக விமர்சனம்


திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதும் நண்பர் ஒருவர் ஒருமுறை அவரைத் தனது திரைப்படத்திற்கு உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொண்ட இயக்குனரோடு நடந்த உரையாடலைச் சுவையோடு கூறிக்கொண்டிருந்தார்.

அவர் திரைப்படம் எழுத வேண்டியிருந்த திரைக்கதையில் பாத்திரங்களாக வரும் கதாநாயகனும் வில்லனும் ஒரே கல்லூரியில் படிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கிடையில் குணநலன்களில் பெரிய வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. என்னவோ கதாநாயகிக்கு கதாநாயகனைப் பிடிக்கிறது;மற்றவனைப் பிடிக்கவில்லை. உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட எனது நண்பருக்கு அவளுக்கு ஏன் கதாநாயகக் கல்லூரி மாணவனை மட்டும் பிடிக்கிறது. வில்லனாக வரும் கல்லூரி மாணவனை ஏன் பிடிக்கவில்லை என்பது புரியவில்லை.

இயக்குனரிடம் அது ஏன் அப்படி என்று அவர் கேட்கஅது அப்படித்தான் என்று இயக்குனர் கடுப்புடன் கூறியிருக்கிறார். இறுதியாக அத்திரைப்படத்திற்கு அவர் உரையாடல் எழுதவில்லை.

மேலும் படிக்க

மறுக்கப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை: கிரிமினல்களாகத் தொழிலாளர் சித்தரிக்கப்படும் கொடுமை


உலகமயப் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தொழில் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாறுதல்களில் மிக முக்கியமானது தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் போக்காகும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் மட்டுமின்றி புதிதாகத் தொடங்கப்படும் பிற தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்க உரிமை அப்பட்டமாக இன்று மறுக்கப்படுகிறது. அதை யொட்டிப் பல நிறுவனங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்களும் செயலிழந்தவையாகி விட்டன.

கூட்டு பேரம் ஒழிப்பு

அன்னிய மூலதனத்தின் வருகைதொழில் வளர்ச்சி போன்ற முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் எழுப்பிய பேரிரைச்சல் தொழிற்சங்க உரிமை இழந்து கொடும் சுரண்டலில் அல்லல் பட்ட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக் குரலை வெளியில் வராதவாறு செய்துவிட்டது. தொழிற்சங்கங்கள் இல்லாததால் கூட்டு பேரமும் இல்லாமற் போய்விட்டது. அதனால் முதலாளிகள் நிர்ணயித்ததே ஊதியம் என்றாகி ஊதிய விகிதங்கள் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டன.

சமயநல்லூரில் தியாகி பகத்சிங்கின் நினைவுதினக் கூட்டம்


25 மார்ச் 2012 ஞாயிறு அன்று சமயநல்லூர் தொலைத் தொடர்பு அலுவலகத்தை ஒட்டியுள்ள திடலில் பகத்சிங்கின் 81 வது நினைவு தினப் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. அத்தருணத்தில் சி.டபிள்யு.பியின் தென்னிந்தியப் பொதுச் செயலாளர் ஆனந்தன் பகத்சிங்கின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சமயநல்லூர்ப் பகுதி சி.டபிள்யு.பி. பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற நினைவுதினக் கூட்டத்தில் மற்ற பல தோழர்களோடு தோழர்கள் த.சிவக்குமார் (மாற்றுக்கருத்து ஆசிரியர்) மற்றும் வி.வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி) ஆகியோரும் உரையாற்றினர். தோழர்.ஆனந்தன் இறுதியில் சிறப்புமிக்கதொரு உரையினை ஆற்றினார். இடதுசாரி மனநிலை கொண்ட பொதுமக்களும் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சி.டபிள்யு.பி. தொண்டர்களும் திரளான எண்ணிக்கையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் கம்யூனிஸக் கருத்துக்களை முதல்தரச் சிந்தனைத் தெளிவுடன் இந்திய மண்ணில் முன்வைத்த தியாகி.பகத்சிங்கின் கருத்துக்களை மக்கள் மனதில் பதிக்கும் சி.டபிள்யு.பி யின் அயராத முயற்சிக்கு உரிய பலன் கிட்டும் விதத்தில் அந்த நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தேறியது.

தொழிற்சங்க உரிமைப் பறிப்பைக் கண்டித்து கருத்தரங்கம்


ஏனாம் ரெஜென்சி ஆலைத் தொழிலாளர்களின் இயக்கம் காவல்துறையின் காட்டுத்தனமான தாக்குதலை எதிர்கொண்ட பின்னணியில் தொழிற்சங்க உரிமையைக் கட்டுப்படுத்தும் அரசு மற்றும் ஆளும்வர்க்க சக்திகளைக் கண்டித்து26.02.2012 ஞாயிறு மாலை மணி அளவில் மதுரை  வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரிலுள்ள மணியம்மையார் மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக அரங்கக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு தோழர்.அ.ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார். போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் சம்பத்பத்திரிக்கையாளர் தோழர்.கருப்பன் சித்தார்த்தன்உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர்.வி.வரதராஜ் ஆகியோரும் அக்கூட்டத்தில் உரையாற்றினர். உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை தடுக்கப்படும் போக்கைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரம் ஆயிரக் கணக்கில் மதுரை நகரின் உழைப்பாளி மக்களிடையே இதனையயாட்டி வினியோகிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் கேள்வி கேட்பாரின்றித் தொடர்ந்து கொண்டுள்ள இந்நாளில் ஏனாம் நிகழ்வையும்அதுகுறித்து ஆளும் வர்க்கப் பிரச்சார சாதனங்கள் மேற்கொள்ளும் துஷ்பிரச்சாரத்தையும்பொதுவாகவே தொழிற்சங்க உரிமை பல்வேறு பெயர்களில் தடுக்கப்படும் போக்கையும் அம்பலப்படுத்துவதாக சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அரங்கக் கூட்டம் அமைந்தது.

லெனினது உடலைப் புதைப்பதன் மூலம் கம்யூனிசத்தையும் புதைத்து விடலாம் எனக் கனவு காணும் புட்டின் கும்பல்


சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் மற்றும் எல்சின் கும்பலால் மேலைநாட்டு ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட எதிர்ப்புரட்சிக்குப் பின்பு ஒன்றாயிருந்த சக்திவாய்ந்த சோவியத் யூனியன் பல நாடுகளாகத் துண்டாடப்பட்டது. தங்களுக்குக் கிட்டியிருந்த உழைக்கும் வர்க்கத் தலைமையிலான அரசும் சுரண்டலற்ற ஆட்சியும் வழங்கிய பல்வேறு பலன்களை உணர்வுடன் பராமரிக்கத் தவறிய குற்றத்தைச் செய்ததற்காக அந்நாட்டின் மக்கள் அதன்மூலம் பெரும் விலையினைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.

முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சி

சுதந்திரமே இல்லாமல் போன ஒரு நாடு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு இரையான அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் தற்போது புட்டின் தலைமையில் கொண்டுவரப் பட்டுள்ள ஆட்சிமுறை எத்தனை முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிமுறை என்பதைக் கண்ணுக்கு கண்ணாக கண்டு கொண்டுள்ளனர். பணவீக்கம்வேலையின்மைசோசலிச ஆட்சியின் கீழ் சமூக விரோதிகளாக விளங்கியவர்கள் மூலம் கொண்டுவரப் பட்டுள்ள கொலைகார முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாடப்பட்டுக் கெளரவமான வாழ்க்கையை இழந்த அந்நாட்டு மக்கள் இன்று முதலாளித்துவம் அறிமுகம் செய்துள்ள ஊழல்,விபச்சாரம் போன்ற சமூகக் கேடுகளைக் குறைவின்றிப் பார்த்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க

வெண்மைப் புரட்சி: செவிலியர்கள் போராட்டம் தரும் புது உற்சாகம்


வொயிட் காலர் தொழிலாளர்கள் அவ்வளவு எளிதில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்பதைப் பொய்யாக்கி தங்கள் போராட்டத்தின் வாயிலாக உழைக்கும் மக்களுக்கு ஒரு புது உத்வேகம் கொடுத்துள்ளனர் செவிலியர்கள். 5லட்சம் வரை செலவு செய்து செவிலியர் படிப்பை முடிக்கும் செவிலியர்கள்லட்சக் கணக்கில் நோயாளிகளிடம் பணத்தை வாங்கிக் குவிக்கும் தனியார் மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ரூ. 3000 க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். வருடங்கள் கடந்தாலும் அவர்களின் ஊதியம் ரூ.7000த்தைத் தாண்டுவதில்லை. இந்தக் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு வாங்கிய கல்விக் கடனை அடைக்கவும்ஏறியுள்ள விலைவாசியில் குடும்பத்தை நடத்தவும் முடியாமல் அல்லலுறுகின்றனர் செவிலியர்கள். அது மட்டுமல்லாமல் படிப்பிற்கான ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளும் நிர்வாகங்கள் வேலையைவிட்டு நிற்பதாகக் கூறினால் ரூ 50,000 செலுத்திவிட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் படி அவர்களை மிரட்டுகின்றன. 12மணி நேர வேலைஒ.டி. கிடையாதுநைட் சிஃப்ட் அலவன்ஸ் என்பது மிகவும் குறைவு,ஹாஸ்டல் கட்டணம் மிக அதிகம் என நிர்வாகம் செய்யும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள செவிலியர்கள் களம் இறங்கினார்கள். 

இலங்கை அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்திய அரசு காட்டிய தயக்கமும் - அதன் பின்னணியும்


இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நான்காவது அலைவரிசையின் ஆவணப்படம் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை தமிழக மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு அது போலியான ஆவணங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட படம் என்று எத்தனை கூறினாலும் அது அதனைப் பார்ப்பவர் மனதில் அதன் நம்பகத்தன்மையைப் பெருமளவு நிலைநாட்டவே செய்துள்ளது. இலங்கை அரசின் அப்பட்டமான பொய்கள்,உண்மைகளை மூடிமறைக்கும் செயல்கள் அனைத்தும் அப்படத்தில் இடையூடாக வரும் உலக அளவில் அறியப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களின் நேர்காணல் செய்திகளால் தெளிவாக நிலைநாட்டப் பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுச் செயலாளர் மில்லிபாண்ட் போன்றவர்களின் கூற்றுக்களும் இடைஇடையே அந்த ஆவணப் படத்தில் சேர்க்கப்பட்டு அதன் நம்பகத் தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கருத்துரிமை காக்க மதுரையில் சி.டபிள்யு.பி-யின் கருத்தரங்கம்


கருத்துரிமைக்காக கம்யூனிஸ்ட்கள் போராட வேண்டியதின் அவசியத்தை
விளக்கும் தோழர் ஆனந்தனின் உரை:

சமீப காலத்தில் கருத்துரிமையின் மீதான தாக்குதல்கள் மிகப் பெரிதாக வந்துகொண்டுள்ளன. ராஜஸ்தானில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ள அனுமதிக்கப்படாததில் தொடங்கி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாடப் புத்தகங்களில் மார்க்ஸ் எங்கெல்ஸ் போன்ற மாமேதைகள் குறித்த பாடங்கள் அகற்றப்படும் என்று அறிவித்தது வரை பல தாக்குதல்கள் அறிவிற்கும் கருத்துரிமைக்கும் எதிராக வந்துகொண்டுள்ளன.

கொலைகார, குரோனி முதலாளித்துவ நிர்வாகங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுத்துள்ள சவாலை எதிர் கொள்வோம்


மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் ஏகபோகங்கள் உருவாவதைப் பற்றி விரிவாக எழுதினார். குறிப்பாக டிரஸ்ட்கள் மற்றும் கார்டல்கள் என்ற ஏகபோக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விரிவாக விளக்கினார். எவ்வாறு ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏகபோகங்கள் உருவாயின என்பதை அந்நூலில் அவர் விளக்கினார்.

ஆனால் நவீன முதலாளித்துவம் அதனைத் தாண்டித் தற்போது பல மடங்கு சென்றுள்ளது. ஒரே தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஏகபோகங்கள் உருவாகும் போக்கையெல்லாம்   தாண்டி லாபம் கிடைக்கும் அனைத்துத் தொழில்களிலும் சேவைகளிலும் மூலதன வலுக் கொண்ட நிறுவனங்கள் முதலீடு செய்து அத்தொழில்களை நடத்துகின்றன. இதில் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒப்பந்தத் தொழிலிலும் பெரும் பெரும் ஒப்பந்தத் தொழிலாளர் நிறுவனங்களை ஏற்படுத்தி பல ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் நுழைந்துள்ளன.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

டேவிட் ஹார்வியின் இனிப்பு தடவப்பட்ட ஒரு நஞ்சு – ஜீவாடேவிட் ஹார்வியின் “மார்க்ஸின் மூலதனத்திற்கு வழிகாட்டி“ தமிழில் இலக்குவன் நூலைப் படிக்கிற போக்கில் எதிர்கொண்ட விபரங்களைத்தான் என்னுடைய கட்டுரையில் பதித்துள்ளேன்.

நூலின் அறிமுகத்திலேயே டேவிட் ஹார்வி மார்க்ஸுடன் முரண்படுவதை பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறார். மூலதனத்தின் முதல் அத்தியாயத்தை சரக்கு குறித்த கோட்பாட்டுடன் ஏன் மார்க்ஸ் துவங்கினார்? என்ற கேள்வியை எழுப்புவதுடன் அதைத்  தேர்வு செய்வதற்கான காரணத்தையும் விளக்க முயற்சிக்கவில்லை என்று  மார்க்ஸை குறை கூறுகிறார். ஆக மூலதன நூலின் அடிப்படை ஆய்வையே சந்தேகத்துள்ளாக்குகிறார். அதேபோல் மூலதன நூல் கம்யூனிசப் புரட்சியை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பேசவில்லை என்றும், கம்யூனிச சமுதாயம் எவ்வாறு தோற்றமளிக்கும் என்று விளக்கவில்லை என்றும்   கூறுவதன் மூலம் வாசகர்களை மூலதன நூலை வாசிப்பதற்கான  முயற்சியை முறியடிக்க விரும்புகிறார் என்று கருத இடமளிக்கிறது.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

பாரதி நினைவு நாளில் மக்கள் கவிஞர்கள் தின விழா


ஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி  சோஷலிச கலை இலக்கிய மாமன்றம்   சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில்  நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி  23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று  சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 1 மணி மக்கள் கவிஞர் விழா நடைபெறும். இந்த விழாவினை ஒட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் பொது பிரிவிலும் கவிதை , கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பொது பிரிவில் நடத்தப்படும் கவிதை கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்பு கீழ் வருமாறு:

திங்கள், 23 ஜூலை, 2012

மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி -நூல் விமர்சனம்


                                               டேவிட் ஹார்வி
                                              தமிழில்: இலக்குவன்
                                              வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
                                               421, அண்ணாசாலை,
                                              தேனாம்பேட்டை,
                                              சென்னை - 600 018
                                               பக்: 496, விலை: ரூ. 300/-

“மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிட்டுள்ளது.

தமிழில் வெளிவந்து சுமார் இருபது நாட்களுக்குள் "தீக்கதிரில்" தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் விமர்சனம் எழுதியிருக்கிறார்.

வியாழன், 19 ஜூலை, 2012

பொய் புகாரில் கைது செய்யப்பட்டவர்களை போராடி மீட்டது COITU19  . 07 2012  காலை 4 . 30 மணிக்கு கொட்டாம்பட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளனதில் இ . எம். டி. சரவணன் உயிர் இழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள்(1 வயது, 4 வயது)   இருக்கின்றன. தகவல் கேள்விப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு ஊழியர்கள் வருவதை பார்த்த மதுரை டி.எம். மற்றும் பி லீ  ட்  இருவரும் ஊழியர்களை திட்ட ஆரம்பித்தனர். 'இந்த வேலையில்(108 ) சாவு என்பது சர்வசாதாரணம்' என்று டி.எம். கூறியிருக்கிறார். அதனால் கோபமுற்ற இறந்து போன சரவணனின் உறவினார்கள் அந்த இடத்தை விட்டு போய்விடுமாறு டி.எம்.மிடம் கூறியிருக்கின்றனர். இதனால் கோபமுற்று பழிவாங்கும் போக்குடன் செயல்பட்ட டி.எம். மற்றும் பி லீ  ட்   இருவரும் காவல் நிலையத்தில் சங்கத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மீது தங்களை அடித்ததாக பொய் புகார் அளித்தனர். 

வெள்ளி, 29 ஜூன், 2012

மார்க்சியத்தை புதைக்க முடியாதுநனைகிறதே ஆடு என 
இப்போது 
நரிகளுக்கென்ன அக்கறை!!! 
சுதந்திரம் விரும்பிய ராஜாளிக்கு ?
திசைகளுண்டா  கட்டுப்பாடுகளுண்டா ?
லெனின் ஒரு மலைக்கழுகு. 

சனி, 23 ஜூன், 2012

கம்யூனிசமே நம் முன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு


கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)யின் தென் இந்தியாவிற்கான பொதுச் செயலாளராக இருக்கும் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே கம்யூனிச இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு SUCI கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர் தலைவராக அனுபவம் பெற்றவர். SUCI கட்சி தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர். AIUTUC-யில் பொறுப்பாளராக இருந்த இவர் பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். குறிப்பாக திண்டுக்கல் விளாம்பட்டி காகித ஆலை தொழிலாளர் சங்கம், விருதுநகர் சுவாமிஜி மில், சிவகாசி பட்டாசுத் தொழிலாளர் சங்கம் ஆகியவை உருவாவதில் பெரும்பங்களித்தவர். வங்கி ஊழியர் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.
 
நன்றி : கீற்று 

திங்கள், 18 ஜூன், 2012

பங்களாதேஷில் மிகப்பெரிய தொழிலாளர் எழுச்சிகார்மென்ட் தொழிற்சாலைகள் மிகுந்த பங்களாதேசில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. கடுமையாக சுரண்டப்பட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக உருவெடுத்தனர். பல்வேறு தொழிற்சங்கங்க ள் நிர்வாகம் ,அரசு இரண்டின் அடக்குமுறையை மீறியும் நன்கு செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் திரு.அமினுள் இஸ்லாம் என்ற பிரபலமான  தொழிற் சங்க தலைவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதை செய்தது கார்மென்ட் தொழிற்சாலை அதிபர்களின் கூலி படை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஊதிய உயர்வு, பணிநேரக் குறைப்பு, மலிவு விலையில் சாப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 5 லட்சம் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் தற்போது பந்களாதேஷில் வெடித்துள்ளது. தொழிலாளர்கள் தினமும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை உடல்நோக உழைக்கின்றனர். வாரத்தில் 6 நாள்கள் வேலைக்கு வந்தால்தான் வார இறுதியில் கூலி என்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உழைப்பதால் உடல் சோர்ந்து தொழிலாளர்கள் தளர்வடைகின்றனர்.

புதன், 13 ஜூன், 2012

விழித்துக் கொண்டது உழைக்கும் மக்கள் ரஷியா : புதினுக்கு எதிராக மாஸ்கோவில் மிகப்பெரிய ஊர்வலம்


சோவியத் யூனியன் விழுந்த போது  சோசலிசத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக முதலாளித்துவ உலகம் கொக்கரித்தது. ஊழல் மன்னன் புதின் பல்வேறு முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்தார். கடைசியாக நடைபெற்ற தேர்தலில் உலகமே முகம் சுழிக்கும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி புறவாசல் வழியாக அதிபர் பதவியை கைப்பற்றினார் புதின் . ஆனால் ரஷிய மக்கள் முன்பு முழுவதுமாக  அம்பலப்பட்டு போனார். தேர்தலில் புதின் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்ட போதே லட்சக்கணக்கான மக்கள் ஓன்று திரண்டு புதினின் முறைகேடான தேர்தல் வெற்றிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ச்சியாக தொடர் முற்றுகை , பேரணி என பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிடுகிறார் புதின். தற்போது சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தனி நபர் போராட்டக்காரர்களுக்கு 3,00,000 ரூபிள்கள் வரையும் அதை ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு 1 மில்லியன் ரூபில்களும் வரையும்  அபராதம் போடும் விதமாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார் புதின். 

ஞாயிறு, 10 ஜூன், 2012

உண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம் - சங்கர் சிங்


மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 

வெள்ளி, 8 ஜூன், 2012

போராட்டக் களத்தில் விஜயா மருத்துவமனை செவிலியர்கள்

கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக பல்வேறு தனியார்  மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை , சட்ட விரோதமான ஒப்பந்தம் கூடாது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல  போராட்டங்கள் வெற்றியும் பெற்றன. தற்போது வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையை சேர்ந்த 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப் படாததால் மே 28 , 2012 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.  

செவ்வாய், 5 ஜூன், 2012

'செ’ படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒர் ஆவணம்மக்களிடையே இரண்டு மாபெரும் மனிதர்களைப் பற்றி மிகத்தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்களில் ஒருவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சமரசமற்ற போக்கினை பிரதிநிதித்துவப்படுத்திய தியாகி பகத்சிங். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையைத் தேச விடுதலைப்போரோடு அப்படியே இணைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். மிக குறுகிய காலத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டவர். அதனால் அவர் என்றென்றும் வீரம், மனோதிடம், அநியாயத்திற்கும் அநீதிக்கும் எதிராக வளைந்து கொடுக்காது போராடும் குணம் ஆகியவற்றின் இலக்கணமாய் இன்றும் விளங்குபவர். அவர் மிக வேகமாக ஒரு கம்யூனிஸ்ட் ஆகிக் கொண்டிருந்தவர்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும்


மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC ) பணிபுரியும் ஒப்பந்தத்  தொழிலாளர்கள் ஏப்ரல் 21 ,2012 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்று பேச்சு வார்த்தைகள் நிர்வாகத்திற்கும் , தொழிலாளர்களுக்கும்  இடையே நிகழ்ந்தபோதும்  தொழிலாளர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும்  ஏற்க என்.எல்.சி நிர்வாகம் முன்வரவில்லை. 

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் . பணி மூப்பின்  அடிப்படையில் சம்பள உயர்வை வழங்காமல் அப்ரைசல் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கு சற்று கூடுதலாகவும்  ( அதுவும் அதிகம் இல்லை ) , மற்றவர்களுக்கு மிக குறைந்த ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. 

சனி, 2 ஜூன், 2012

இருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி , சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU ) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய  மே தினப்பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் , எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளி எதிரில்  27 . 05 . 2012 அன்று நடைபெற்றது. உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி தலைவர் தோழர். வரதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் தலைமையுரையில் தோழர்.வரதராஜ் பேசும்போது பட்டாசு விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகளின் மேத்தனப்போக்கே ஆகும், மே தின தியாகிகள் எந்த காரணத்திற்காக தங்கள் இன்னுயிரை துறந்தார்களோ அந்த நோக்கத்தை இன்னும் அடையமுடியாத நிலையிலையே இன்றும் உழைக்கும் வர்க்கம் இருக்கிறது , இதை அம்பலப்படுத்தி தொழிலாளர்களை அமைப்பாக்கி வருகிறது CWP  என்று குறிப்பிட்டார். 

ஞாயிறு, 27 மே, 2012

மேதின உறுதியேற்போம்


உழைக்கும் வர்க்கம் ஒருநாளில் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்த சூழ்நிலை அதனைப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது. அதன் விளைவாகத் தோன்றிய போராட்டப் பேரலைகள் 8 மணி நேர வேலை நாளை உறுதி செய்தன. எதிர்ப்பேதுமின்றி உழைக்கும் வர்க்கம் அதனைச் சாதித்துவிட வில்லை. கடுமையான அடக்கு முறைகளை எதிர்கொண்டு எண்ணிறந்த தொழிலாளரின் உயிர்த் தியாகத்தின் விளைவாகவே அது சாதிக்கப்பட்டது.  அதன்மூலம் அடக்குமுறைகளால் உழைக்கும் வர்க்கத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாற்றின் படிப்பினையாகியது.

புதன், 23 மே, 2012

பாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை குறித்த மதுரை கருத்தரங்கம்கருத்துரிமை காக்க கருத்தரங்கம் ஓன்று மதுரை மணியம்மையார் மழலையர் பள்ளி வளாகத்தில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) சார்பில் 20 . 05 . 2012 முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சுமார் 100  பேர் கலந்து கொண்ட அக்கருத்தரங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருமாத இதழ் ஆசிரியர் திரு.த. சிவகுமார் தலைமை தாங்கினார். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சென்னையை சேர்ந்த திரு.சுவாமிநாதன் , பேராசிரியர்கள் திரு.சேவுகப்பெருமாள் , திரு. க. கோவிந்தன் ஆகியோரும் CWP யின் தென் மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர் திரு.அ. ஆனந்தன் அவர்களும் உரையாற்றினர். அவர்கள் தங்கள் உரையில் சமீப காலங்களில் பல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு கருத்து சுதந்திரத்தை பறிப்பவையாக அமைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தினர். 

வியாழன், 17 மே, 2012

கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசிசப்போக்குகளைக் கண்டித்து கருத்தரங்கம்


ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள். வரலாற்றில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலைநாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஒன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடாளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது; மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது; நான்கு, தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவது; ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது.

செவ்வாய், 15 மே, 2012

CWP யின் மே தினப் பொதுக் கூட்டம், திருத்தங்கல்,சிவகாசிCWP யின் மே தினப் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் திருத்தங்களில் நடைபெறுகிறது, இந்த பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அழைக்கிறோம் . 

திங்கள், 14 மே, 2012

மதுரையிலும் உதயமாகிறது மார்க்சிய சிந்தனை மையம்: நாகர்கோவில் வகுப்பில் முடிவு


13 .05 .2012 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பில்   மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும்  இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர்.போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் இயக்கவியல் பொருள் முதல்வாதம் பற்றிய வகுப்பு நடத்தப்பெற்றது.

வெள்ளி, 11 மே, 2012

இந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டுகிறது 'வழக்கு எண் 18 \9 '

உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லும்  கலை இலக்கியங்கள் மாபெரும் புரட்சிக்கே வித்திடும். தமிழில் அபூர்வமாக சில படங்கள் அப்படி வருவதுண்டு, ரங்கநாதன் தெருவில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு  வெளிச்சம் போட்டுக் காட்டியது வசந்த பாலன் இயக்கிய அங்காடி தெரு படம். அந்த படம் வந்த பிறகு ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை கண்டித்து பல தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அப்படி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களே இந்த காலத்திற்கு தேவை.அதை உணர்ந்து இந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டும் ஒரு அருமையான படைப்பை (வழக்கு எண் 18 \9 ) தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். 

ஞாயிறு, 6 மே, 2012

உலகம் முழுவதும் கூடுதல் உற்சாகத்துடன் மே தின ஊர்வலங்கள்
மே 1 தொழிலாளர் தினம் வழக்கத்தை விட இந்த ஆண்டு உற்சாகத்துடன் நடைபெற கூடுதல் காரணங்கள் உண்டு கடந்த சில ஆண்டுகளாகவே முதலாளித்துவ உலகம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவத்தின் சொர்க்கபுரி என்று நேற்றுவரை பீற்றிக் கொண்டு இருந்த அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பல முதலாளித்துவ நிறுவனங்களும்  , வங்கிகளும் திவாலாயின. அமெரிக்கா உலகிலையே அதிகம் கடன் வாங்கிய கடன்கார நாடாக ஆகிவிட்டது.

சனி, 5 மே, 2012

மே 1 தொழிலாளர் தினம்

ஒரு காலத்தில் 
இயந்திரங்களோடு இயந்திரங்களாய் 
இயங்கிய இயந்திரங்களின் பெயர் உங்களுக்கு 
தெரியுமா ?
அதன் பெயர் தான்  தொழிலாளர்கள்.

ஹீமோகுளோபின் கச்சாவில்
18 மணி நேரம் இயங்கிய
முதுகெலும்பு இயந்திரம் அது.இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் - ஏங்கெல்ஸ்


இதற்கிடையில் 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சுத் தத்துவத்துடன் கூடவேயும் அதற்குப் பின்பும், புதிய ஜெர்மன் தத்துவம் உதித்தெழுந்தது. ஹெகலின் தத்துவத்தில் அது உச்சநிலையை அடைந்திருந்தது. அறிவாய்வின் (reasoning) மிக உயர்ந்த வடிவமாக இயக்கவியலை மீண்டும் எடுத்துக் கொண்டதுதான் ஜெர்மன் தத்துவத்தின் தனிச்சிறப்பு. பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாக இருந்தனர்.

வியாழன், 3 மே, 2012

இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு முழுமையான பார்வை - மார்க்சிய படிப்பு வட்டம் , நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று "மார்க்சிய சிந்தனை மையம்" என்ற அமைப்பை உருவாக்கினர் .அதில்  கீழ்வரும்  பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும்  இதே போன்ற பொது வேலைதிட்டத்தை  இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்றும் உறுதி ஏற்றனர்.


புதன், 2 மே, 2012

உரிமையுடன் வேண்டுகிறோம்

மாமேதை மார்க்ஸ்-ம் எங்கெல்ஸ்-ம் கம்யூனிசக் கருத்தோட்டத்தை முன் வைத்த போது அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்; வழக்குகள் பல அவர்கள் மீது தொடுக்கப்பட்டன. அப்போது வெறும் இருவராக மட்டும் இருந்த அவர்கள் கூறினர் "எங்கள் இருவரையும் கண்டு முதலாளித்துவ உலகம் அஞ்சுகிறது" என்று. அத்தகைய வலிமை மிக்கதாக அவர்கள் முன்வைத்த தத்துவம் இருந்தது. பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக அது விளங்கியது. 

செவ்வாய், 1 மே, 2012

மே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்


சிகாகோ தொழிலாளர்களின் போராட்ட உரிமை குரலை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது முதலாளித்துவம். ஆனாலும் உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் எழுச்சிக்கு அந்த போராட்டமே வித்திட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேர ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி ஆகிய முழக்கங்கள் உலகம் முழுவதும் தொழிலாளர்களால் முழக்கங்கப்பட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள பல உரிமைகள் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்டவையே. அப்படி பெறப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் கொடுமையை முன்பை விட அதிகமாக அனுபவிக்கும் நிலைமைக்கு முதலாளித்துவம் தள்ளியுள்ளது. 

திங்கள், 30 ஏப்ரல், 2012

ஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு: உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட முயலும் முதலாளித்துவச் சதிமத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011-ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.

அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சியினர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதனை எதிர்க்க முன்வரவில்லை என்பதே. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முதலில் இதனை ஆதரித்தது. அதற்கு அது முன்வைத்த வாதம் ஒவ்வொரு ஜாதியிலும் உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால் ஜாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அது பலரது மிகைப்படுத்தப்பட்ட அவர்களது ஜாதியினர் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அம்பலப்படுத்திவிடும் என்பதாகும். ஆனால் அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். இதனை எதிர்த்தவுடன் இது குறித்து அக்கட்சியின் தலைவர்களுக்கு இரண்டாவது சிந்தனை ஏற்பட்டுவிட்டது.

நம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்
மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்  மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக   19.04.2012  அன்று மாலை 4 மணியளவில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார். 

புதன், 25 ஏப்ரல், 2012

சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்


இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்ற அம்சத்தில் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. ப்ளெக்ஸ் போர்டுகளும், சுவரொட்டிகளும் கண்ணைக்கவரும் இத்தனை வண்ணங்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பார்க்குமிடமெல்லாம் பளிச்சிடுவதை இந்தியாவின் வேறு எந்த மூலைக்குச் சென்றாலும் பார்க்கவே முடியாது.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது

காவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில்  உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள தண்ணீர் வளத்தை பயன்படுத்தி சாராய ஆலை நிறுவி கொள்ளை லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்ட  டி.ஆர். பாலு கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன்  லிமிடேட் என்ற எரிசாராய ஆலையை பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி ,மோசடியாக அனுமதி பெற்று 2010ல் துவங்க முயற்சி செய்தார்.  

வியாழன், 19 ஏப்ரல், 2012

கோவை பி.,எஸ்.ஜி மருத்துவமனை செவிலியர்களின் உறுதி மிக்க போராட்டம் வெற்றிபெற தோள்கொடுப்போம்


Nurses at the PSG Institute of Medical Sciences and Research stage a demonstration in Coimbatore on Tuesday. Photo: S. Siva Saravanan5 லட்சம் வரை செலவு செய்து படித்து பட்டம் பெரும் செவிலியர்களுக்கு ஒவ்வொரு நோயாளியிடமும் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் மருத்துவமனை நிர்வாகங்கள் வெறும் 3,000 முதல் 5 ,000 வரை மட்டுமே ஊதியமாக தந்து வருகிறார்கள்.  இதை எதிர்த்து இந்திய முழுவதும் செவிலியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுக்கப்பிற்காக சங்கம் அமைத்து  போராடி வருகிறார்கள். சென்னையில் பெட்ரோலில் பற்றிய தீயாக போராட்டம் பரவி அப்பல்லோ , மலர் , எம்.எம்.எம். , உட்பட பல தனியார் மருத்துவ மனைகளில் செவிலியர்கள் போராட்டம் வெற்றிபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் சங்கமாக அணிதிரண்டு போராட வேண்டும் என்ற எண்ணம் செவிலியர்களுக்கு ஏற்பட்டது. கோவையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ,  மருத்துவமனைகளை நடத்தி வரும் பி.எஸ்.ஜி. நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.

மெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி


சமீபகாலமாக இணையதளங்களில், மெக்காலே 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய உரையின் ஒரு பகுதி என்பதாக ஒரு ஆவணம் உலா வந்து கொண்டுள்ளது. அது பழங்கால ஆவணம் என்பதைக் காட்டுவதற்காக மெக்காலேயின் படம் அச்சிடப்பட்ட  அக்காலத்திய ஆவணம் ஒன்றில் அக்காலத்திய ஆங்கில எழுத்து வடிவங்களுடன் அந்த ஆவணம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்:

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

பாசிசப் பாதையில் பீடு நடை போடும் மம்தாநன்றி : தி ஹிந்து 
மேற்கு வங்கத்தில் 34 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த இடது முன்னணி வன்முறையின் மூலம் ஆட்சியைத்தக்க வைத்து இருந்தது. தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லிக்கொண்டே முதலாளித்துவ சேவை செய்து கொண்டிருந்த இடது முன்னணியின் கோரமுகம் சிங்கூர், நந்திகிராமில் தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த நிலத்தை டாட்டவிற்கு பறித்து கொடுக்கும் புத்ததேவின் முயற்சிக்கு எதிராக போராடிய விவசாயிகளை துப்பாக்கி கொண்டு சுட்டுத் தள்ளிய போதே அம்பலப்பட்டு போனது. .கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டங்களை அரசு இயந்திரத்தின் மூலமும், தனது கட்சி குண்டர்கள் மூலமும் வன்முறையை அரங்கேற்றி நசுக்கி டாட்டாவிற்கு  தனது நன்றி விசுவாசத்தை காட்டியது அப்போது ஆட்சியில் இருந்த இடது முன்னணி.  

வியாழன், 12 ஏப்ரல், 2012

ஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934


                                                                                                   தமிழாக்கம் : Dr . ஜீவானந்தம் 
stalin_400hg_wells
வெல்ஸ் : ஸ்டாலின் நீங்கள் என்னை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. அண்மையில் நான் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுடன் அவரது லட்சியங்கள் குறித்த நீண்ட நேரம் உரையாடினேன். உலகை மாற்றும் உங்கள் முயற்சி பற்றி அறிய விரும்புகிறேன்.

ஸ்டாலின் : அது போன்ற பெரிய திட்டங்கள் எதுவுமில்லை.

வெல்ஸ் : நான் ஒரு எளிய மனிதனாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றேன். உலகின் மாற்றங்களை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன்.

முகப்பு

புதிய பதிவுகள்