செவ்வாய், 1 மே, 2012

மே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்


சிகாகோ தொழிலாளர்களின் போராட்ட உரிமை குரலை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது முதலாளித்துவம். ஆனாலும் உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் எழுச்சிக்கு அந்த போராட்டமே வித்திட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேர ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி ஆகிய முழக்கங்கள் உலகம் முழுவதும் தொழிலாளர்களால் முழக்கங்கப்பட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள பல உரிமைகள் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்டவையே. அப்படி பெறப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் கொடுமையை முன்பை விட அதிகமாக அனுபவிக்கும் நிலைமைக்கு முதலாளித்துவம் தள்ளியுள்ளது. 
  முதலாளித்துவம் கொளுத்து வளரத் துவங்கிய கட்டத்திலையே அதற்கு மரண அடி கொடுத்தது ரஷிய தொழிலாளி வர்க்கம். பல்வேறு சதிகளின் மூலம் அன்று 3 இல் 1 பங்கு சோஷலிச நாடுகள் என்று இருந்த நிலை மாறி இன்று சோஷலிச நாடுகளே இல்லாத சூழ்நிலையை உருவாக்கி விட்டதாக முதலாளித்துவம் கொக்கரிக்கிறது. ஆனாலும் முதலாளித்துவம் அதாகவே அதன் சவக்குழியை வெட்டிக் கொள்ளும் என்ற மார்க்சிய ஆசான்களின் வார்த்தைகள் இன்று முதலாளித்துவம் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கி கொண்டு திண்டாடுவதில் இருந்து உண்மையாகி வருகிறது. தொழிலாளர் இயக்கங்கள் வலுவாக இல்லாமல் இருந்தாலும் தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் கோர முகத்தை அடையாளம் கண்டு கொள்ளனர். பல்வேறு நாடுகளில் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ சுரண்டல்களுக்கு எதிராக போர் கோடி தூக்கியுள்ளது . தொழிலாளர்களின் ஒற்றுமையில் தான் அவர்களின் வர்க்க விடுதலை அடங்கியுள்ளது  என்று உழைக்கும் மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். சோர்வடைந்திருக்கும் தொழிலாளர் இயக்கங்களை கட்டியெழுப்புவோம். தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் நிறுத்த உறுதியேற்போம்  

சிகாகோ தொழிலாளர்களின் ஒப்பற்ற  தியாகத்தை நினைவு கூர்வோம். மே 1 தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க சபதமேற்போம். உலக தொழிலாளர்களே ஒன்றுபடுவோம். புரட்சி நீடுழி வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்