வொயிட் காலர் தொழிலாளர்கள் அவ்வளவு எளிதில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்பதைப் பொய்யாக்கி தங்கள் போராட்டத்தின் வாயிலாக உழைக்கும் மக்களுக்கு ஒரு புது உத்வேகம் கொடுத்துள்ளனர் செவிலியர்கள். 5லட்சம் வரை செலவு செய்து செவிலியர் படிப்பை முடிக்கும் செவிலியர்கள், லட்சக் கணக்கில் நோயாளிகளிடம் பணத்தை வாங்கிக் குவிக்கும் தனியார் மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ரூ. 3000 க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். வருடங்கள் கடந்தாலும் அவர்களின் ஊதியம் ரூ.7000த்தைத் தாண்டுவதில்லை. இந்தக் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு வாங்கிய கல்விக் கடனை அடைக்கவும், ஏறியுள்ள விலைவாசியில் குடும்பத்தை நடத்தவும் முடியாமல் அல்லலுறுகின்றனர் செவிலியர்கள். அது மட்டுமல்லாமல் படிப்பிற்கான ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளும் நிர்வாகங்கள் வேலையைவிட்டு நிற்பதாகக் கூறினால் ரூ 50,000 செலுத்திவிட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் படி அவர்களை மிரட்டுகின்றன. 12மணி நேர வேலை, ஒ.டி. கிடையாது, நைட் சிஃப்ட் அலவன்ஸ் என்பது மிகவும் குறைவு,ஹாஸ்டல் கட்டணம் மிக அதிகம் என நிர்வாகம் செய்யும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள செவிலியர்கள் களம் இறங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக