புதன், 13 ஜூன், 2012

விழித்துக் கொண்டது உழைக்கும் மக்கள் ரஷியா : புதினுக்கு எதிராக மாஸ்கோவில் மிகப்பெரிய ஊர்வலம்


சோவியத் யூனியன் விழுந்த போது  சோசலிசத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக முதலாளித்துவ உலகம் கொக்கரித்தது. ஊழல் மன்னன் புதின் பல்வேறு முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்தார். கடைசியாக நடைபெற்ற தேர்தலில் உலகமே முகம் சுழிக்கும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி புறவாசல் வழியாக அதிபர் பதவியை கைப்பற்றினார் புதின் . ஆனால் ரஷிய மக்கள் முன்பு முழுவதுமாக  அம்பலப்பட்டு போனார். தேர்தலில் புதின் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்ட போதே லட்சக்கணக்கான மக்கள் ஓன்று திரண்டு புதினின் முறைகேடான தேர்தல் வெற்றிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ச்சியாக தொடர் முற்றுகை , பேரணி என பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிடுகிறார் புதின். தற்போது சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தனி நபர் போராட்டக்காரர்களுக்கு 3,00,000 ரூபிள்கள் வரையும் அதை ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு 1 மில்லியன் ரூபில்களும் வரையும்  அபராதம் போடும் விதமாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார் புதின். 


ஆனால் இந்த சலசலப்பிற்கு எல்லாம் ரஷிய மக்கள் அஞ்சவில்லை. புதினின் அராஜக போக்குகளுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் மாஸ்கோவில் திரண்டு மிகப்பெரிய ஊர்வலத்தை 12.06.2012  அன்று  நடத்தினர். பெருமளவு இளைஞர்கள் திரண்டிருந்த அந்த ஊர்வலத்தில் 'அயோக்கியர்களின் கைகளில் இருந்து ரஷிய விடுவிக்கப்பட வேண்டும்', 'புதின் ஒரு திருடன்', 'புதினை சிறைக்கு அனுப்பு' போன்ற கோஷங்களை வழிநெடுக  பேரணியில் பங்கேற்ற மக்கள் எழுப்பினார்கள். முதலாளித்துவம் இயல்பிலையே அராஜகமானதாகவும் ,மோசடியானதாகவும் தான் இருக்கும். அதை காப்பதற்கு புதின் போல  எமாற்றுபேர்வழிகளையும், ஊழல்வாதிகளையுமே சிறந்தவர்களாக அது தெரிவு செய்யும். அதனால் தான் ரஷிய மக்களிடம் இன்று மிகக்கேவலமா அம்பலப்பட்டு போய் நிற்கிறது ரஷியாவின் முதலாளித்துவ அரசு. ரஷிய மக்களின் இந்த எழுச்சி இன்னும் அதிக நாள்களுக்கு அங்கு முதலாளித்துவம் நிலைத்து இருக்க முடியாது என்று முன்னறிவிக்கும் விதமாக இருக்கிறது. வாழ்க ரஷிய மக்களின் எழுச்சி !  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்