ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இலங்கை அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்திய அரசு காட்டிய தயக்கமும் - அதன் பின்னணியும்


இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த நான்காவது அலைவரிசையின் ஆவணப்படம் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை தமிழக மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு அது போலியான ஆவணங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட படம் என்று எத்தனை கூறினாலும் அது அதனைப் பார்ப்பவர் மனதில் அதன் நம்பகத்தன்மையைப் பெருமளவு நிலைநாட்டவே செய்துள்ளது. இலங்கை அரசின் அப்பட்டமான பொய்கள்,உண்மைகளை மூடிமறைக்கும் செயல்கள் அனைத்தும் அப்படத்தில் இடையூடாக வரும் உலக அளவில் அறியப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களின் நேர்காணல் செய்திகளால் தெளிவாக நிலைநாட்டப் பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுச் செயலாளர் மில்லிபாண்ட் போன்றவர்களின் கூற்றுக்களும் இடைஇடையே அந்த ஆவணப் படத்தில் சேர்க்கப்பட்டு அதன் நம்பகத் தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்