இன்று இந்திய சமூகம் பல பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளது. தொழிலாளர்,விவசாயிகள், மாணவர்கள் என்று சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் கடும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுள்ளனர். சமீப காலத்தில் ஊழல் நமது சமூகத்தின் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து உலெகெங்கும் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது.
தொழிலாளரைப் பொறுத்தவரையில் அவர்களது சம்பள விகிதங்கள் குறிப்பாகத் தனியார் துறையில் மிகப் பெருமளவு குறைந்துள்ளன. ஆலைகளை நடத்துவதற்கு ஆகும் மொத்த செலவில் தொழிலாளருக்குக் கொடுக்கும் ஊதிய விகிதங்கள் வெறும் 10 சதவிகிதமே என்ற அளவிற்கு இதுவரை கண்டிராத விதத்தில் 2008ம் ஆண்டிற்குப் பிந்திய ஆண்டுகளில் குறைந்துள்ளன. அவர்களுக்கிருந்த வேலைப் பாதுகாப்புப் பறிபோயுள்ளது. சங்கம் அமைக்கும் உரிமையை அவர்கள் இழந்து நிற்கின்றனர். அனைத்துத் தொழில் துறைகளிலும் ஒப்பந்தத் தொழில்முறை அமுலுக்கு வந்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர் ஒழிப்பு தனியார் உற்பத்தித் துறையில் தலைவிரித்தாடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக