நேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் ஜனநாயகத்திற்காகவும் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு பல திருப்பங்கள் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளன. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-கள் தாங்கள் அதற்கு முன்பு நடத்தி வந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் முழுவீச்சுடன் இறங்கியது அப்போராட்டத்தின் பரிமாணத்தையே மாற்றியது.
நாடாளுமன்ற அரசியல் வட்டத்திற்குள் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்)-களைக் கொண்டுவந்து விட்டால் அவர்கள் வீரியம் இழந்தவர்களாகவும் பதவி மோகம் கொண்டவர்களாகவும் மாறிவிடுவர்; மேலும் நாடாளுமன்ற அரசியலின் நெளிவு சுளிவுகளை அறியாத அவர்கள் பெரிய தேர்தல் வெற்றிகளையும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தில் நேபாளத்தில் செயல்பட்ட யு.என்.எம்.எல். உள்பட சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை விரும்பாத அனைத்து சக்திகளும் யு.சி.பி.என்(மாவோயிஸ்ட்) களை அப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக