ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

வழக்கு எண் 18/9 ஆர்ப்பாட்டமின்றி உள்ளத்தை உருக்கும் யதார்த்தமான சமூக விமர்சனம்


திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதும் நண்பர் ஒருவர் ஒருமுறை அவரைத் தனது திரைப்படத்திற்கு உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொண்ட இயக்குனரோடு நடந்த உரையாடலைச் சுவையோடு கூறிக்கொண்டிருந்தார்.

அவர் திரைப்படம் எழுத வேண்டியிருந்த திரைக்கதையில் பாத்திரங்களாக வரும் கதாநாயகனும் வில்லனும் ஒரே கல்லூரியில் படிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கிடையில் குணநலன்களில் பெரிய வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. என்னவோ கதாநாயகிக்கு கதாநாயகனைப் பிடிக்கிறது;மற்றவனைப் பிடிக்கவில்லை. உரையாடல் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட எனது நண்பருக்கு அவளுக்கு ஏன் கதாநாயகக் கல்லூரி மாணவனை மட்டும் பிடிக்கிறது. வில்லனாக வரும் கல்லூரி மாணவனை ஏன் பிடிக்கவில்லை என்பது புரியவில்லை.

இயக்குனரிடம் அது ஏன் அப்படி என்று அவர் கேட்கஅது அப்படித்தான் என்று இயக்குனர் கடுப்புடன் கூறியிருக்கிறார். இறுதியாக அத்திரைப்படத்திற்கு அவர் உரையாடல் எழுதவில்லை.

மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்