புதன், 23 மே, 2012

பாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை குறித்த மதுரை கருத்தரங்கம்



கருத்துரிமை காக்க கருத்தரங்கம் ஓன்று மதுரை மணியம்மையார் மழலையர் பள்ளி வளாகத்தில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) சார்பில் 20 . 05 . 2012 முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சுமார் 100  பேர் கலந்து கொண்ட அக்கருத்தரங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருமாத இதழ் ஆசிரியர் திரு.த. சிவகுமார் தலைமை தாங்கினார். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சென்னையை சேர்ந்த திரு.சுவாமிநாதன் , பேராசிரியர்கள் திரு.சேவுகப்பெருமாள் , திரு. க. கோவிந்தன் ஆகியோரும் CWP யின் தென் மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர் திரு.அ. ஆனந்தன் அவர்களும் உரையாற்றினர். அவர்கள் தங்கள் உரையில் சமீப காலங்களில் பல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு கருத்து சுதந்திரத்தை பறிப்பவையாக அமைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தினர். 



நூலகங்களில் எந்த பத்திரிகைகள் போட வேண்டும் என்பதை மாநில அரசே தீர்மானிக்கும் மற்றும் பாடப்புத்தகங்களில் இருந்து மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் குறித்த பாடங்கள் அகற்றப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  பானர்ஜி அறிவித்துள்ளதை கருத்தரங்கத்தில் உரையாற்றிவர்கள் வன்மையாக கண்டித்தனர். அதை போல் நேரு , அம்பேத்கர் குறித்த சங்கர பிள்ளையின் கேலிச்சித்தரத்தை 11வது  வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்போவதாக மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளதையும் வன்மையாக கண்டித்தனர். இந்த போக்கு நீடித்தால் வருங்காலத்தில் மாணவர்கள் எதை கற்க வேண்டும் என்பதை ஆட்சிக்கு வரும் அரசியல் வாதிகள் தீர்மானிப் பவர்களாக ஆகிவிடுவார்கள். அரசியல்வாதிகளின் தேர்தல் ஆதாயங்களுக்கு உகந்தவை மட்டும் பாடப்புத்தங்களில் இடம்பெறும் சூழ்நிலை உருவாகி  விமர்சனப்பூர்வ  கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியாதவர்களாக ஆகி விடுவர் . அதனால்  அவர்களது சிந்தனை திறன் பாதிக்கப்பட்டு விடும் , பல்வேறு ராமாயணங்கள்  குறித்த ஏ.கே. ராமானுஜனின்  நூல் டெல்லி பல்கலை கழகப் பாடப் புத்தகத்தில் இருந்து  நிக்கப்பட்டதும்  ரோஹிந்தன் மிஸ்த்ரியின் சச்  ஏ லாங் ஜார்னி மும்பை பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதும் , ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் சல்மான் ருஷ்டி கலந்து கொள்வது தடுக்கப்பட்டதும் , தற்போதைய மம்தா பானர்ஜி மற்றும் கபில் சிபல் ஆகியோரின் கல்வி விசயத்தின் பாலான  தலையீடும்    சேர்ந்து  ஒருவிதமான பாசிசப் போக்கு இந்திய அறிவுத் துறையில் தலை தூக்கி வருவதை கோடிட்டு காட்டுகிறது.


 இதனை தடுத்து நிறுத்த அறிவுலகம் ஒருங்கிணைந்து முன்வர வேண்டும் என்பனவற்றை உரையாற்றிவர்கள் தங்களது உரை வீச்சுகள் மூலம் எடுத்துரைத்தனர். பிற்பகல் 2 . 30 மணிவரை கருத்தரங்கம் நீடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்