ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சீரும் சிறப்புடன் நடைபெற்றது மக்கள் கவிஞர்கள் விழா

ஒவ்வொரு ஆண்டும் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 யை ஒட்டி  சோஷலிச கலை இலக்கிய மாமன்றம்   சார்பில் மக்கள் கவிஞர்கள் தின விழாவாக சிவகாசியில்  நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதி நினைவு நாளினை ஒட்டி  23 .09.2012 (ஞயிற்று கிழமை ) அன்று  சிவகாசி, சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மக்கள் கவிஞர் விழா நடைபெற்றது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப்போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ பிளாட்பார்ம் அகில இந்திய பொது செயலாளர் தோழர். அ.ஆனந்தன், அருணாசலம், சாமி , தோழர்.செல்வகுமார், தோழர் .சிவகுமார், தோழர். சுரேஷ் ஆகியோர் உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட விழா சிறப்புடன் நடைபெற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்