நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதென்று இடதுசாரிக் கட்சிகளிலேயே பெரிய கட்சியாக விளங்கும் சி.பி.ஐ(எம்). கட்சி முடிவெடுத்துள்ளது. ஏறக்குறைய அனைத்து விசயங்களிலும் அக்கட்சியுடன் ஒத்துப்போய்க் கொண்டிருந்த சி.பி.ஐ. கட்சி தற்போது அதன் முந்தைய போக்கிலிருந்து மாறுபட்டு யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளது.
நடுநிலைத் தன்மை
இத்தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா எந்த வகையிலும் பிரணாப் முகர்ஜியைக் காட்டிலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதி உடையவர் அல்ல என்று கூற முடியாது. விடுதலை பெற்ற காலம் தொடங்கி நமது நாட்டின் குடியரசுத் தலைவர்களாக அடுத்தடுத்து வந்த ராஜேந்திரப் பிரசாத்,ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசைன் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லோரும் அறிந்த விதத்தில் நடுநிலைத் தன்மை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த ஃபக்ருதீன் அலி அஹமத் காங்கிரஸின் முக்கியத் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டவராக இருந்தாலும் அவரும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நடுநிலைத் தன்மை கொண்டவராகவே இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக