ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

லெனினது உடலைப் புதைப்பதன் மூலம் கம்யூனிசத்தையும் புதைத்து விடலாம் எனக் கனவு காணும் புட்டின் கும்பல்


சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் மற்றும் எல்சின் கும்பலால் மேலைநாட்டு ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட எதிர்ப்புரட்சிக்குப் பின்பு ஒன்றாயிருந்த சக்திவாய்ந்த சோவியத் யூனியன் பல நாடுகளாகத் துண்டாடப்பட்டது. தங்களுக்குக் கிட்டியிருந்த உழைக்கும் வர்க்கத் தலைமையிலான அரசும் சுரண்டலற்ற ஆட்சியும் வழங்கிய பல்வேறு பலன்களை உணர்வுடன் பராமரிக்கத் தவறிய குற்றத்தைச் செய்ததற்காக அந்நாட்டின் மக்கள் அதன்மூலம் பெரும் விலையினைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.

முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சி

சுதந்திரமே இல்லாமல் போன ஒரு நாடு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு இரையான அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் தற்போது புட்டின் தலைமையில் கொண்டுவரப் பட்டுள்ள ஆட்சிமுறை எத்தனை முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிமுறை என்பதைக் கண்ணுக்கு கண்ணாக கண்டு கொண்டுள்ளனர். பணவீக்கம்வேலையின்மைசோசலிச ஆட்சியின் கீழ் சமூக விரோதிகளாக விளங்கியவர்கள் மூலம் கொண்டுவரப் பட்டுள்ள கொலைகார முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாடப்பட்டுக் கெளரவமான வாழ்க்கையை இழந்த அந்நாட்டு மக்கள் இன்று முதலாளித்துவம் அறிமுகம் செய்துள்ள ஊழல்,விபச்சாரம் போன்ற சமூகக் கேடுகளைக் குறைவின்றிப் பார்த்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்