ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

மறுக்கப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமை: கிரிமினல்களாகத் தொழிலாளர் சித்தரிக்கப்படும் கொடுமை


உலகமயப் பின்னணியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அங்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தொழில் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாறுதல்களில் மிக முக்கியமானது தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் போக்காகும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் மட்டுமின்றி புதிதாகத் தொடங்கப்படும் பிற தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்க உரிமை அப்பட்டமாக இன்று மறுக்கப்படுகிறது. அதை யொட்டிப் பல நிறுவனங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்களும் செயலிழந்தவையாகி விட்டன.

கூட்டு பேரம் ஒழிப்பு

அன்னிய மூலதனத்தின் வருகைதொழில் வளர்ச்சி போன்ற முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் எழுப்பிய பேரிரைச்சல் தொழிற்சங்க உரிமை இழந்து கொடும் சுரண்டலில் அல்லல் பட்ட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக் குரலை வெளியில் வராதவாறு செய்துவிட்டது. தொழிற்சங்கங்கள் இல்லாததால் கூட்டு பேரமும் இல்லாமற் போய்விட்டது. அதனால் முதலாளிகள் நிர்ணயித்ததே ஊதியம் என்றாகி ஊதிய விகிதங்கள் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்