25 மார்ச் 2012 ஞாயிறு அன்று சமயநல்லூர் தொலைத் தொடர்பு அலுவலகத்தை ஒட்டியுள்ள திடலில் பகத்சிங்கின் 81 வது நினைவு தினப் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. அத்தருணத்தில் சி.டபிள்யு.பியின் தென்னிந்தியப் பொதுச் செயலாளர் ஆனந்தன் பகத்சிங்கின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சமயநல்லூர்ப் பகுதி சி.டபிள்யு.பி. பொறுப்பாளர் தோழர்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற நினைவுதினக் கூட்டத்தில் மற்ற பல தோழர்களோடு தோழர்கள் த.சிவக்குமார் (மாற்றுக்கருத்து ஆசிரியர்) மற்றும் வி.வரதராஜ் (உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி) ஆகியோரும் உரையாற்றினர். தோழர்.ஆனந்தன் இறுதியில் சிறப்புமிக்கதொரு உரையினை ஆற்றினார். இடதுசாரி மனநிலை கொண்ட பொதுமக்களும் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சி.டபிள்யு.பி. தொண்டர்களும் திரளான எண்ணிக்கையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தத்தில் கம்யூனிஸக் கருத்துக்களை முதல்தரச் சிந்தனைத் தெளிவுடன் இந்திய மண்ணில் முன்வைத்த தியாகி.பகத்சிங்கின் கருத்துக்களை மக்கள் மனதில் பதிக்கும் சி.டபிள்யு.பி யின் அயராத முயற்சிக்கு உரிய பலன் கிட்டும் விதத்தில் அந்த நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக