ஞாயிறு, 27 நவம்பர், 2011

எது வளரும் முரண்பாடு -நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்


27 .11 .2011 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும்  இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால்  கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட  இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி இந்த மாதம் எடுக்கப்பட்டது.


 உலகம் முழுக்க பிரதான முரண்பாடாக இருப்பது முதலாளி, தொழிலாளி முரண்பாடே. ஒவ்வொரு நாட்டிலும் எந்த முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கிறது , எது வளரும் முரண்பாடு , உள் முரண்பாடு எது?,வெளி முரண்பாடு எது? என்பதை பற்றி பல்வேறுபட்ட தரவுகளோடு விரிவாக விளக்கி கூறினார். நாம் தேய்ந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளை பிரதான முரண்பாடாக கொள்ளாமல் , எது வளரும் முரண்பாடோ அந்த முரண்பாட்டை அடிப்படையாக கொண்டே கட்சி திட்டத்தை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் வகுக்க வேண்டும் என்பதை அனைவர் மனதிலும் ஆழப்பதிய வைத்தார். மிகுந்த உற்சாகத்தோடு கலந்து தோழர்கள் அனைவருக்கும் மார்க்சிய சிந்தனை மையம் தனது நன்றியை உரித்தாக்குகிறது. 

1 கருத்து:

முகப்பு

புதிய பதிவுகள்