புதன், 14 டிசம்பர், 2011

துணிந்து செல்: தன்னெழுச்சியாக திரண்டு நிற்கும் மக்கள் படை


சி.பி.எம்., சி.பி.ஐ, காங்கிரஸ் , பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் கேரளாவில் பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு முல்லை பெரியாறு அணையை இடித்தே ஆக வேண்டும் என்று பல்வேறான பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். எதிர் கட்சி தலைவர் அச்சுதானந்தன் பிரிவினைவாதத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருக்கிறார்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட முல்லைபெரியாறு அணையை காக்க தமிழக மக்கள்  தேனி மாவட்டம் குமுளியில் கடந்த ஒரு வாரமாக  தன்னெழுட்சியாக  தொடர்ந்து ஊர்வலம் , மறியல் போராட்டங்களின் மூலம் தங்களின் எதிர்ப்பை கேரளா அரசியல் கட்சிகளான  சி.பி.எம்., சி.பி.ஐ, காங்கிரஸ் , பி.ஜே.பி. கட்சிகளுக்கு எதிராக பதிவு செய்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பு தமிழகத்தில் சந்தர்ப்பவாதத்தில் மூழ்கிபோயுள்ள ஊழல் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க விற்கு எதிராகவும் அவ்வப்போது திரும்புகிறது.   முல்லை பெரியாறு அணையில் 142  அடி தண்ணீர் தேக்குவது உறுதி செய்யப்படும் வரை  தமிழக மக்களின்  நியாயமான இந்த போராட்டம் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்