திங்கள், 19 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணையை காக்க மதுரையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று பல்வேறு பொய் பிரச்சாரங்களை  கேரளா ஆளும் கட்சியான காங்கிரசும் , எதிர் கட்சிகளான   சி.பி.எம்., சி.பி,ஐ., பி.ஜே.பி.போன்ற கட்சிகளும் தீவிரமாக செய்து வருகின்றன. கேரளா மக்களிடையே பயத்தை உண்டாக்கி மக்களிடையே பிரிவினை வாதத்தை தொடர்ந்து தூண்டி விட்டு வருகின்றனர். கேரளா அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் இந்த பிரிவினைவாத போக்குகளை கண்டித்தும் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க  கோரியும், தமிழகமெங்கும் உண்ணாவிரதம், மறியல், ஊர்வலம் என்று  பல்வேறு வழிகளில் மக்கள் போராடி வருகின்றனர்.

 18 .12 .2011 அன்று மதுரை நாராயணபுரத்தில் பேங்க் காலனி மற்றும் நாராயணபுரத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஒரு நாள் அடையாள  உண்ணாவிரதப்போராட்டம் கலை 9 மணிக்கு தொடக்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. தோழர்.ராஜேஷ் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார், தோழர். கே.கே.சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  முல்லை பெரியாறு அணை என்பது தமிழக மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்டு, 142  அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்று  உத்தரவிட்டும் அதை இன்று வரை கேரளா அரசு நிறைவேற்ற மறுத்து வருகிறது. நீர்மின்சார உற்பத்திக்காக முல்லை பெரியாறு அணையை சார்ந்து வாழக்கூடிய மக்களின் வாழ்வாதரத்தை  பறிக்க பார்க்கிறது. கேரளா அரசின் இந்த பிரிவினைவாத போக்குகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதத்தில் பங்கேற்று பேசியவர்களால் வலியுறுத்தப்பட்டது.

நாராயணபுரம் மற்றும் பேங்க் காலனியை சேர்ந்த பொதுமக்கள் , ஆட்டோ ஓட்டுனர்கள், வழக்கறிஞர்கள்,பொறியாளர்கள் , மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  திரளாக பங்கேற்றனர்.சிறப்புடன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப்போராட்டம் அந்த பகுதி வாழ் மக்களிடையே  இது போல தொடர் போராட்டங்கள் எடுக்கப்பட வேண்டும் என்ற ஆவலை துண்டுவதாக அமைந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்