சனி, 10 டிசம்பர், 2011

கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நெஞ்சை உருக்கும் செவிலியர்களின் உயிர் தியாகம்


9 .12 .2011 , அன்று கொல்கத்தாவில் உள்ள AMRI தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட கோரமான  தீ விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உட்பட 90 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் அதிக உயிரழப்பிற்கு முக்கிய காரணம், இந்த மருத்துவமனை  நெருக்கமான பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததும், போதியளவு அவசர கால தீயணைப்பு கருவிகள் இல்லாததும்,தீ விபத்து ஏற்பட்டவுடன் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்காததும் தான்  என்று தெரியவந்துள்ளது.  

இன்றுள்ள அனைத்து மருத்துவமனைகளும் லாப வெறி பிடித்த மருத்துவர்களால் நடத்தப்படுகிறது. அவர்களின் ஒரே நோக்கமே அந்த மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பது என்பதெல்லாம் கிடையாது, நோயாளிகளிடம் இருந்து எப்படி பணத்தை கறப்பது என்பது தான். அத்தோடு லஞ்சம் கொடுத்து மருத்துமனைக்கு என்று உள்ள விதிமுறைகளை பின்பற்றமலையே அனுமதி பெற்று விடுகின்றனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட போது முதல் வேலையாக அனைத்து மருத்துவர்களும் நோயாளிகளை காப்பாற்ற முயலாமல் ஓட்டம் பிடித்துள்ளனர்கள். 

ஆனால் அந்த மருத்துவமனையில் செவிலியர்களாக பணிபுரிந்த கேரளாவை சேர்ந்த பி. கே. வினிதா மற்றும் ரம்யா ராஜன் இருவரும் தங்கள் உயிரையும்  பொருட்படுத்தாமல் பொது வார்டில் இருந்த 8 பேரை காப்பாற்றியுள்ளனர். அப்படி காப்பாற்றி கொண்டிருக்கும் போது அந்த இருவரும் தீ விபத்தில் இறந்து போய் விட்டனர். தங்களுடைய உயரை பொருட்படுத்தாமல் ஆபத்து காலத்தில் கடமையை செய்து வீர மரணம் அடைந்த அந்த செவிலியர்களின் தியாகத்தை போற்றுவோம். அதிகம் படித்தவர்கள் என்ற மமதையோடு சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழுகின்ற மருத்துவர்கள் , உழைக்கவும் ,சேவை செய்யவும், தனது சேவையின் மூலம் உயிர் துறந்து மற்றவர்களை காக்கவும் செய்த இந்த சகோதிரிகளின் தியாகத்தில் இருந்து பாடம் படிக்க வேண்டும்.  அப்படியும் நீங்கள் திருந்தாவிட்டால் நீங்கள் மனிதர்களாகவே வாழ கூட தகுதியற்றவர்களாகிவிடுவீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்