வியாழன், 6 அக்டோபர், 2011

தொழிலாளி வர்க்கமே வெற்றி 'வாகை சூட வா'

இன்று மலையளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உருவாவதற்கு காரணமான செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை யாரவது எண்ணி பார்த்ததுண்டா , வெறும் மண்ணை தங்கள் ஓய்வறியாத உழைப்பின் மூலம் செங்கல்லாக மாற்றும் தொழிலாளர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை காலமெல்லாம் அடிமைகளாக சுரண்டி கொழுக்கும் முதலாளிகள் , தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை கூட அறியாமல் வைத்திருக்கும் கொடுமையையும், கல்வி மூலம் அவர்கள் வாழ்வில் சிறு வெளிசத்தை நம்பிக்கையை ஊட்டுப்படுவதையும் 'களவாணி'பட இயக்குனர் சற்குணம் அவர்களின் இரண்டாவது படைப்பாக வெளிவந்துள்ள 'வாகை சூட வா' நம் முன் காட்சி படுத்துகிறது.


அப்பாவி கிராம மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதொடு தங்களுடைய குழந்தைகளையும் அடிப்படை கல்வி கூட தரமால் அவர்கள் வாங்கியுள்ள கடனை அடைக்க செங்கல் சூளையில் வேலை செய்ய அனுப்புவதும் , அந்த கிராமத்திற்கு கல்வி பயிலவிக்கும் வரும் ஆசிரியர் அந்த குழந்தைகளுக்கு கல்வி பயிலவிக்கவே கடுமையாக போராட வேண்டி இருப்பதும், அந்த கல்வி மூலம் கிடைக்கும் விழிப்புணர்வால் தாங்கள் ஏமாற்றப்படுவதை எதிர்த்து அந்த கிராம மக்கள் கேள்வி கேட்பதும், முதலாளியின் தாக்குதலை ஓன்று பட்டு முறியடிப்பதையும், அந்த தொழிலாளர்களுக்காக ஆசிரியர் தனக்கு கிடைத்த அரசாங்க வேலையை உதறிவிட்டு அந்த கிராம மக்களுக்காக தன்னை அற்ப்பணிப்பதையும் மிகுந்த அழகியலோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர். குண்டு சட்டிக்குள் குதிரை ட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இது போல அந்திபூத்தார் போல சில நல்ல படைப்புகள் வெளி வருவது பாராட்டிற்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்