ஞாயிறு, 13 நவம்பர், 2011

தியாகி பகவதி சரண் வோரா

தியாகி பகவதி சரண் வோராவும், அவரது மனைவி துர்க்கா தேவியும் HSRA புரட்சிகரக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள். பகவதி சரண் வோராவின் பெயரிலையே கட்சியின் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வலிமை மிக்க எழுத்துக்கு சொந்தக்காரர்.காந்தியடிகள் புரட்சியாளர்களைக் கண்டித்து எழுதிய "வெடிகுண்டின் வழிபாடு " எனும் கட்டுரைக்கு வோரா எழுதிய தத்துவார்த்த மருப்புரையான 'வெடிகுண்டின் தத்துவம்' எனும் கட்டுரை அவரது எழுத்து வன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. 1930 ம் ஆண்டு மே மாதம் 28 ம் நாள், தங்கள் தயாரித்திருந்த வெடிகுண்டை சோதனை செய்து பார்க்கும் பொது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமுற்று சிறிது நேரத்தில் உயிரழந்தார் பகவதி சரண் வோரா.சிறைக்கு வெளியில் இருந்து தோழர்களில் அதிகபட்ச தத்துவார்த்த தெளிவு பெற்றிருந்த தியாகி பகவதி சரணின் துயரம் மிக்க உயிரிழப்பு HSRA க்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு என்றே கூற வேண்டும். நன்றி :
கேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்
தியாகி பகத் சிங் கடிதங்கள் கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்
தொகுப்பும் தமிழும்: தோழர் த.சிவகுமார்


1 கருத்து:

முகப்பு

புதிய பதிவுகள்