வெள்ளி, 28 அக்டோபர், 2011

பாட்டாளிவர்க்கத்திடமிருந்து உருப்பெற்ற தத்துவம் - நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்

23 .10 .2011, ஞாயிற்று கிழமை அன்று நாகர்கோவில் , தக்கலை -  லைசியம் பள்ளி வளாகத்தில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பாக மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. தோழர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த படிப்பு வட்டத்தில் சென்ற வகுப்பில் எடுக்கப்பட்ட 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்' தொடர்ச்சி தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் நடத்தப்பட்டது. சிந்தனை என்பது சமூகத்தில் இருந்து கிடைப்பது , தொழிலாளி வர்க்கம் உருவாகும் வரை தத்துவம் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்தது .
தொழிலாளி வர்க்கம் உருவாகியதால் தான் இயக்கவியல் பொருள் முதல் வாதம் நமக்கு கிடைத்தது. மார்க்சிய தத்துவமும் நமக்கு கிடைத்தது .மார்க்சியத்தின் அனைத்து அம்சங்களையும் தர்க்க ரீதியாக முறியடிக்க முடியாத முதலாளித்துவம்  இயக்கவியல் பொருள்முதல் வாதம் தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமே சாதகமானது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை பாட்டாளி வர்க்கம் உயர்த்தி பிடித்தாலும் அது எப்படி அறிவியல் பூர்வமானதாகவும் அனைவருக்குமான தத்துவமாகவும் இருக்கிறது என்பதை தோழர் அ.ஆனந்தன் பல்வேறு எடுத்துகாட்டுகளோடு விரிவாக விவரித்தார். இந்த படிப்பு வட்டத்தில் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். 

3 கருத்துகள்:

  1. இயக்கவியல் பொருள்முதல் வாதம் குறித்து நறுக்கு தெரித்தார் போல் பத்து பதினைந்து வரிகளில் அடக்க முடிந்தால் அருமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. சூர்யஜீவா காண்க:
    http://www.sivalingam.in/philosophy/philosophyintro.htm

    பதிலளிநீக்கு
  3. தோழர் மு.சிவலிங்கத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்