வெள்ளி, 7 அக்டோபர், 2011

டுனீசியாவில் பற்றிய தீ அமெரிக்காவிலும் எரிகிறது

டுனீசியாவில் பற்றிய போராட்டத்தீ அரபுநாடுகளில் பரவி, ஐரோப்பாக் கண்டத்தைத் தீண்டியபின் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தலைநகர் நியூயார்க்கில் எரிந்து கொண்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 17 அன்று வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு எதிராக அதன் வீதிகளை நிரப்பத் தொடங்கினர் அமெரிக்க
இளைஞர்கள். இன்று 20வது நாளாக வீதிகளையே வீடுகளாக்கி நியூயார்க் நகரத்தையே ஸ்தம்பிக்கச் செய்துகொண்டுள்ளனர். தங்கள் நாட்டு இளைஞர்களை அரசியலே தெரியாதவர்களாக திட்டமிட்டு வளர்த்து வந்திருந்த அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது தவிர்க்க முடியாத நெருக்கடிகள் மூலம் அவர்களுக்கு அனுபவப்பூர்வமாக அரசியலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளது. அவர்களது முழக்கமே இதுதான்: "1 சதவீதத்திற்கு எதிராக நாங்கள் 99 சதவீதம்"

அமெரிக்க மக்களின் போர்க்குரலோடு நமது குரலையும் ஒன்றிணைப்போம்!
மார்க்ஸின் குரல் மீண்டும் விஸ்வரூபமெடுத்து அழைக்கிறது:
"உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்