ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அக்டோபர் 23 : நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'


கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவாக இயங்கினாலும் அனைவரும் மார்க்சிய சித்தாந்த வழியில்  நடப்பவர்களே, அதனால் கம்யூ னிஸ்டுகள் ஓன்று பட தடை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக பல்வேறு கம்யூனிஸ்டு  கட்சிகளை சேர்ந்தவர்கள்  இணைந்து நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பாக மார்க்சிய படிப்பு வட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான படிப்பு வட்டம் வருகின்ற 23 .10 .2011 அன்று நடைபெற இருக்கிறது. தோழர்.போஸ் , தோழர். பிரசாத் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்படும் இந்த படிப்பு வட்டத்தில் மூத்த எழுத்தாளர் தோழர். பொன்னீலன் அவர்களும், தோழர்.அ.ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டு கடந்த வகுப்புகளில் எடுக்கப்பட்ட 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் ' தொடர்ச்சியை எடுக்க இருக்கிறார்கள். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தங்கள் தத்வார்த்த மற்றும் நடைமுறைகளை மார்க்சிய வெளிசத்தில் கூர்தீட்டி கொள்ள இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

               நாள் : 23.10.2011 , ஞயிற்றுகிழமை 
              நேரம் :காலை 10.30 மணிக்கு 
              இடம் :  நாகர்கோவில், லைசியம் பள்ளி 
              தலைப்பு :   'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' 

தொடர்பிற்கு : தோழர். மகிழ்ச்சி - 94433 47801

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்