வியாழன், 20 அக்டோபர், 2011

மார்க்சிசம் - லெனினிசமே இக்காலக்கட்டத்தின் விஞ்ஞான பூர்வமான , அதி உன்னதமான சித்தாந்தம் ஆகும்.


               -      தோழர். சிப்தாஸ் கோஷ்

மார்க்சிசம் - லெனினிசம் மட்டுமே ஒரே புரட்சிகரக் கருத்தியல். இக்காலக்கட்டத்தின் மிகவும் விஞ்ஞான பூர்வமான அதி உன்னத சித்தாந்தம் , அதனால் மட்டுமே முடமாகிப்போன  இந்த முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து மனிதனை விடுவித்து, மனிதனை மனிதன் சுரண்டுகிற அனைத்து வித சுரண்டல்களிருந்தும் விடுதலை பெற்ற , வர்க்க பேதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாமறிவோம். மேலும் ஒரு புரட்சிகரக் கருத்தியல், எப்போதுமே ஒரு உயர்ந்த கலாச்சார மற்றும் அறநெறித் தரத்தை உருவாக்குகிறது என்பதையும் நாமறிவோம். எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டு மக்கள் தேவையான குறைந்தபட்ச கலாச்சார , அறநெறித் தரத்தை அடையாவிட்டால் புரட்சியை கட்டியமைப்பதற்கு சாத்தியம் இல்லை. 

ஆக அவர்கள் அழுத்தமாகக் கூறுவது போன்று அவை உண்மையான மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகளாக இருந்திருந்தால் அவர்களது வளர்ந்து வருகின்ற செல்வாக்கின் விளைவாக மிகவும் அழுகிப்போன கேடுகெட்ட முதலாளித்துவ கலாச்சாரத்தின் தாக்கமானது அவ்வளர்ச்சிக்கு ஏற்ப, உணரக்கூடிய அளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கும். குறைந்தபட்சம் ஜனநாயக இயக்கங்களில் பங்காற்றி வரும் வெகுஜனங்கள் , மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையேயாவது அதனைக் காண முடிந்திருக்கும். அதேசமயம் அவர்கள் ஒரு புதிய உயர்ந்த கலாச்சார மற்றும் அறநெறி தரத்தை பிரதிபளித்திருப்பார்கள். ஆனால் உண்மை நிலவரம் நேரெதிராக இருக்கிறது. இந்த உண்மையே அவர்கள் மார்க்சிசம் - லெனினிசத்தின் பெயரில் கடைப்பிடித்து வருவதெல்லாம் மார்க்சிசம் - லெனினிசத்திற்குப் புறம்பான வேறொன்று என்பதை நிரூபிக்கவில்லையா ?

ஒவ்வொரு காலகட்டத்திற்குரிய எந்த ஒரு மாபெரும் புரட்சிகர சித்தாந்தத்தின் அடிப்படையும் அதன் உயுருள்ள ஆன்மாவும், உட்கருவும் அச்சித்தாந்ததின் மிக உயர்ந்த கலாச்சார மற்றும் அறநெறித் தரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. பூர்ஷ்வா புரட்சியின் காலகட்டத்தில் அடைய முடிந்த அதிகபட்ச மனித நேய கலாச்சாரம் , அறநெறி மற்றும் மதிப்புர்வுகளைக் காட்டிலும் மிக உயர்ந்த கலாச்சார அறநெறித் தரத்தையும் மதிப்புணர்வுகளையும் கொண்டிருக்கின்ற பாட்டாளி வர்க்கக் கலாச்ச்சாரத்தின் உட்கருவை , அதன் உயிருள்ள ஆன்மாவை, இன்றைய கம்யூனிஸ்டுகள் கிரகித்து உள்ளீர்த்தாக வேண்டும் . இதனை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியது தான் இத்துயரிய நிலைக்கு பிரதான காரணமாகும் . இவர்களின் கரங்களில் மார்க்சிசம் - லெனினிசம் தனது உயுருள்ள ஆன்மாவை இழந்து முற்றிலும் உயிரற்றதாகி விட்டது . மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் என்றழைக்கப்படும் இக்கட்சிகள் நீடித்துக் கொண்டிருப்பதாலும், வளர்ந்து வரும் செல்வாக்கின் காரணமாகவும் அவை முற்றிலும் தொந்தரவாக, உயிரற்ற உடல்களைப் போன்று அவர்கள் அழுகிக் கொண்டிருப்பதால், நாட்டின் புரட்சிகர இயக்கத்திற்கும், சமுதாயத்திற்கும் மோசமான சீரழிவினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அவர்கள் நிரூ பித்துக் கொண்டிருக்கின்றனர். 

இடது சாரி மற்றும் ஜனநாயக வெகுஜன இயக்கங்கள் இத்தகைய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் என்றழைக்கப்படும் கட்சிகளின் தலைமையின் கீழ் நடத்தப்படுகின்ற காலம் வரை , அன்றாட அரசியல் மற்றும் பொருளாதார கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் இப்போராட்டங்கள் எவ்வளவுதான் போர்க்குனம் மிக்கதாக தோற்றமளித்தாலும் வெறுமனே இவற்றின் மூலம் பொதுவாக , வெகுஜனங்களிடம் குறிப்பாக இளைஞர்களிடமும் காணப்படுகின்ற தொடர்ச்சியான கலாச்சாரத்திற்கு மக்கள் அடிமைகளாக இருப்பார்களானால் அவர்கள் வெகுஜனங்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் காணப்படுகின்ற தொடர்ச்சியான கலாச்சாரச் சீரழிவுப் போக்கினை தடுத்து நிறுத்த முடியாது. கீழ்த்தரமான பூர்ஷ்வா மற்றும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்கு மக்கள் அடிமைகளாக இருப்பார்களானால் அவர்கள் வெகுஜன இயக்கங்களின் மோசமான தோழ்வியை, நாடுதழுவிய விரக்தியை எதிர்கொள்ளும் போது எந்த நிமிடத்திலும் பிற்போக்குத் தனத்திற்கு பலியாகிவிடக்கூடும். மேலும் நாம் இந்தோனேஷியாவில் பார்த்தது  போல அவர்கள் பிற்போக்குத்தனத்தின் கரங்களில் எதிர்புரட்சிக்கான ஒரு சேம சக்தியாகவும் மாறிவிடக்கூடும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் , லெனின், ஸ்டாலின் மற்றும் மாசேதுங் ஆகியோரின் படிப்பினைகளை நாம் சரியாக கிரகித்துக் கொண்டோமெனில் நாம் மிக உயர்ந்த கலாச்சாரத் தரத்தினை எட்டாமல் அதாவது பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத் தரத்தினை எட்டாமல் மார்க்சிய - லெனினியத் கருத்தியல்களை நுணுக்கமாக மதிப்பிடும் திறனை ஒருக்காலும் பெற முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . ஆக புரட்சியின் கருத்தியல் சரியானதாக இருப்பதால் கட்சியும் கட்சியும் சரியானது தான் என்று அவர்கள் கூறுகின்ற போது தங்களது தாழ்ந்த கலாச்சாரத் தரத்தின் காரணமாக தங்களின் கருத்தியல் சரியானதா இல்லையா என தங்களால் உரிய முறையில் தீர்மானிக்க முடியாது என்பதை மறந்து போய் விட்டனர். 

தங்களது அடிப்படை அரசியல் வழியை வரையறுப்பதிலும் இந்திய புரட்சியின் கட்டத்தை தீர்மானிப்பதிலும் , புரட்சிகர வெகுஜன இயக்கங்களின் அன்றாட நடைமுறை உபாயங்களைத் தீர்மானிப்பதிலும் மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் என்றழைக்கப்படும் இக்கட்சிகள் மீண்டும் மீண்டும் தவறுகள் புரிந்ததற்கு பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். 

(தோழர்.சிப்தாஸ் கோஷ் தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது )

2 கருத்துகள்:

  1. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

    பதிலளிநீக்கு
  2. புரட்சியின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.... ஏழைகளை பணக்காரரோக்குகிரோம் என்று வேற்று சவடால் விடும் தனி உடமை கொள்கையை தூக்கி போட்டு, பணக்காரநாகா விட்டாலும் ஏழையாய் இல்லாமல் தேவையானதை அனைவருக்கும் கிடைக்க வழி செய்யும் பொது உடமை கொள்கையை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம்...

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்