செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஓ அமெரிக்கா ! - உனக்கும் வருது பார் நெருக்கடி


உலக பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்தி சென்று கொண்டிருந்த ரஷ்ய  கூட்டமைப்பு உடைந்து சிதறிய போது முதலாளித்துவ நாடுகள் கொக்கரித்தன. குறிப்பாக உழைக்கும் வர்க்கமாக இருந்த போதும் அமெரிக்க முதலாளிகள் உலகம் முழுவதும் அடித்த கொள்ளையில் அவர்களுக்கு வாழ்க்கை சம்பளம் எனும் சலுகையில் மிதந்த அமெரிக்காவின் தொழிலாளி வர்க்கமும் பட்டாசு வெடித்து கொண்டாடியது. இன்று நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. அமெரிக்க அரசு கடன் சுமையால் தத்தளிக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் ரத்து செய்ய அமெரிக்க அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தில் வீடுகளை பறிகொடுத்து விட்டு தெருவில் டென்ட் அடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க உழைக்கும் வர்க்கம் இப்போது விழித்து  கொண்டு விட்டது.


எகிப்து போன்ற அரபு நாடுகளும், கிரீஸ் போன்ற ஐரோப்பா நாடுகளை போலவே அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தினர் வால் ஸ்ட்ரீட்டில் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஆட்டம் காண துவங்கி விட்டபோதும், அதன் தலையாக இருக்கும் அமெரிக்காவும் ஆட்டம் காண்பது இயக்கவியலில் தவிர்க்கவியலாதது. மாமேதை மார்க்சின் கூற்று உலகம் முழுவதும் மெய்யாகி வருகிறது, கம்யூனிசம் எனும் கோடிக்கால் பூதம் அமெரிக்காவையும் ஆட்ட ஆரம்பித்து விட்டது. ஓ அமெரிக்கா! உலகம் முழுவதையும் உனது சுண்டு விரலால் ஆட்டுவதாக கனவு கண்டு கொண்டிருக்காதே , உனது கைவிரல்களே உன்னை குத்த தயாராகி வருகிறது. உனது முதலாளித்துவ கிழவன் மரணப்படுக்கையில் விழுந்து விட்டான். கம்யூனிச குழந்தை அல்ல பூதம் உன்னை விழுங்க தயாராக உள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்