சனி, 1 அக்டோபர், 2011

வாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்


வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே  சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.
இந்த தகவல்கள் அனைத்தும் வெளியே தெரிந்த போது அதை மறைப்பதற்கு   வாச்சாத்தி கிராமத்தை  சூறையாடினார்கள் , அப்பாவி மக்களை அடித்து விரட்டியோதொடு அங்குள்ள பெண்கள் மீது பாலியல் வன்முறையை அதிகார வர்க்கம் கட்டவிழ்த்துவிட்டது. இத்தனை தவறுகளையும் அந்த அப்பாவி மக்களுக்கு இளைத்து விட்டு அந்த மக்கள் மீதே சந்தன மரங்களை கடத்தியதாக பொய்குற்றசாட்டை பதிவு செய்தனர். அந்த மக்களின் நீண்ட நெடிய  போராட்டங்களுக்கு பிறகே இன்று அனைத்து அதிகார வர்க்கத்தினரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெளியே வந்தது இந்த கிராமம் மட்டும் தான். இன்னும் எத்துனையோ மலைவாழ் கிராம மக்களுக்கு வனத்துறையும், அதிரடிப்படையும் இழைத்துள்ள கொடுமைகள் சொல்லிமாளது. சத்தியமங்கலம் தொடக்கி மைசூர் வரை உள்ள மலை வாழ்  மக்களை இன்று வரை அதிகாரவர்க்கத்தின் கொடிய அடக்குமுறைக்கு ஆள்பட்டே வாழ்ந்து  வருகிறார்கள் . இவை அனைத்தும் மக்கள் போராட்டத்தின் மூலம் முறியடிக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்