சனி, 19 மார்ச், 2011

விண்ணை தொடும் வீட்டுவாடகை என்ன செய்ய வேண்டும் சென்னை மக்கள்?

இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டு வாடகை விண்ணை தொட்டுவிடுமளவிற்கு உயர்ந்துள்ளது. சென்னையில் தொழில் நிறுவனங்கள் பெருகுவதால் தினம் தோறும் வேலை தேடி வருவோர் பெருகிவிட்டனர், இந்த அதீத தேவையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வீட்டு உடைமையாளர்கள் அதிக அளவிற்கு முன்பணம், வாடகை கேட்டு வாடகைதாரர்களை நச்சரிக் கின்றனர். தமிழக அரசும் வீட்டுவாடகை கட்டுபடுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. நீதிமன்றகளும் வீட்டு உரிமையாளர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கின்றன.  வாடகை  கட்டுபாடு  சட்டங்களும் நில மதிப்பை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்க வழி வகுக்கிறது அதனால் அதிக வாடகை கொடுக்கும் படி  நேர்கிறது.ஏனெனில் நிலா மதிப்பு இன்று பன்மடங்கு உயர்ந்துள்ளது.குறைவான கூலி வாங்கி தங்கள்  உழைப்பை விற்கும் சாதாரண தொழிலாளர்கள் வீட்டு உரிமையாளர்களாலும்  சுரண்டப்படுவதை  நாம் ஏற்க்க முடியாது.  வாடகைக்கு குடியிருப்போர் ஒரு சங்கமாக  அணிதிரண்டு  உரிமையாளர்களுடன்  நியமான 
வாடகையை  தீர்மானிப்பதே இன்று வாடகைதாரர்கள் முன் உள்ள தீர்வு.நாமெல்லாம் ஒரே வர்க்கமே என்று உணர்வு பெற்று அநீதிகளுக்கு எதிராக எழுவோம் வீட்டு உரிமையாளர்களின் அநீதிகளை தட்டி கேட்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்