வெள்ளி, 1 ஏப்ரல், 2011

நேபாளில் புதிய அரசியலமைப்புசட்டம் விரைவில்...
உலகமே முதலாளித்துவத்தின்  கோரப்பிடியில் சிக்கிகொண்டிருக்கும் போது விண்ணில் தோன்றிய விடிவெள்ளியாய், நேபாள வாணில் உதயமானது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச கீதம். இரசிய, சீனா ஆகிய மிகப்பெரிய நாடுகளில் சோஷலிச சமுதாயம் சிதைந்து திருத்தல் வாதபோக்குகள் மிகுந்து தொழிலாளிவர்க்கம் நம்பிக்கை இழந்து இருக்கும் நேரத்தில் கடும் போராட்டத்தின் மூலம் தொழிலாளிவர்க்கத்தை அணிதிரட்டியது தோழர்.பிரசந்தா தலமையிலான  நேபாள மாவோயிஸ்ட் கட்சி. மார்க்ஸ் கண்ட கனவை லெனின் ரசியாவில் நிஜமாக்கிகாட்டினார், அன்னியர் ஆதிக்கத்திலும் , முதலாளித்துவம் முழு வளர்ச்சி அடையாதிருந்த  சீனாவை மக்கள் ஜனநாயக புரட்சிமூலம் வென்றெடுத்து மார்க்சியத்திற்கு புதிய பரிணாமம் கொடுத்தார் தோழர். மாவோ.

அதன் தொடர்ச்சியாக  தோழர்.  பிரசந்தா  தலமையிலான நேபாள மாவோயிஸ்ட் கட்சி மார்க்சிய கருவுலத்திற்கு பல புதிய செழுமைகளை சேர்த்துள்ளது. நேபாளம் இந்திய ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக மன்னரின் ஆட்சியில் இருந்தது , அங்கு பின்தங்கிய விவசாயமும் , முன்னேறிய நகர்புற பகுதிகளுமான வித்தியாசமான பொருளாதார சூழ்நிலைகளை  கணக்கில் எடுத்து கொண்ட தோழர். பிரசந்தா தலமையிலான நேபாள மாவோயிஸ்ட் கட்சி அங்கு உள்ள 7 கட்சிகளுடன் ஒப்பந்தத்திற்கு வந்தது.அதன் மூலம் மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு அரசியலமைப்பு வரைவிற்கான  தேர்தல் நடைபெற்றது.அதில் பெரும்பான்மையான இடங்களை பிடித்தது நேபாள மாவோயிஸ்ட் கட்சி. தோழர் .பிரசந்தா பிரதமர் ஆனா போதும் மக்கள், அதிகாரத்திற்கு பலியாகாமல் மக்கள் இயக்கங்களின் தொடர்ச்சியாக தட்டி எழுப்பியது நேபாள மாவோயிஸ்ட் கட்சி . ராணுவ தளபதி பதவி  சம்பதமாக  குடியரசு தலைவர், பிரதமரின் முடிவை நிராகரித்ததால் தோழர்.பிரசந்தா பிரதமர் பதவியை துக்கு எறிந்தார். மக்கள் இயக்கங்களை நடத்தி மற்ற கட்சிகளின் மக்கள் விரோத போக்குகளை நேபாள மாவோயிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. அதன் மூலம் நேபாள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் வளம் வருகிறது.

அரசியலமைப்பு சட்டம் வரைவதில் மற்ற முதலாளித்துவ கட்சிகள் தொடர்ந்து  முட்டுக்கட்டை  போட்டுவருகின்றன. நேபாள மாவோயிஸ்ட் கட்சியானது அரசியலமைப்பு  சட்டத்தில் பல சோஷலிச தன்மையுள்ள சரத்துகளை கொண்டு வர கடுமையாக போராடிவருகிறது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது எனலாம், இன்னும் இரண்டு மாதத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வரும் என்று பிரதமர். கானல் அறிவித்துள்ளார்.இது நேபாள மாவோயிஸ்ட் கட்சிக்கும் நேபாள உழைக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறலாம். இது உலகமெங்கும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு மகிழ்சியான செய்தியாகும்.

4 கருத்துகள்:

 1. பொதுவாக

  PARILMENT IS NOT FOR PEOPLE..... WORKING CLASS SHOULD ACQUIRE THE GOVERMENT THROUGH REVOLUTION IN WHICH WE SHOULD NOT ABIDE BY THE SIDES OF PARLIMENT.... UNLESS OTHERWISE IF THIS BUILDING SHOULD BE USED AS A TOOL TO EXPOSE REAL IDEAS TO THE PEOPLE AND THEREBY CULTIVATING THE ROOTS OF REVOLUTION IN TO THE MIND SETS OF PROLETARIAN CLASS.

  IN THIS CASE COMRADE. PRACHANDA IS RIGHT TO TAKE OVER THE STATE AND EVEN OVER THROUGH THE POWER AT THE TIME IN WHICH THE NEED CRASHES.......

  BUT STILL FIGHTING FOR NEW SET UP i.e., (அரசியலமைப்புசட்டம்) SEEMS TO ME LIKE A PATH OF REVISIONISM....

  இது திருதல்வாத போக்கின் அடயாளம்மாக காட்சியளீகின்றது....... உங்கள் கருத்து.....

  பதிலளிநீக்கு
 2. நேபாள மண்ணில் அரங்கேறுவது ஆக்கபூர்வ மார்க்சிசம் தான் மேலும் படிக்க
  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2470:2010-01-25-05-13-16&catid=974:09&Itemid=231

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் நிம்ரோத்,
  பாரளுமன்றம் பற்றிய தங்களது பதிவு பொதுவாகச் சரியானதே. ஜனநாயகத்தை இதுவரை அனுபவித்திராத நேபாளத்தின் நகர்ப்புற மக்களுக்கு முதலாளித்துவ அரசியலமைப்புச் சட்டத்தின் மீது இன்னமும் மாயையும் மோகமும் இருப்பதால் இப்போது புரட்சி என்று நேபாள மாவோயிஸ்டுகள் இறங்கினால் நகர்ப்புற மக்களை புரட்சிக்கு எதிராக எளிதில் திருப்பி விட்டுவிடுவர் எதிர்ப்புரட்சி சக்திகள். எனவே நகர்ப்புற மக்களின் அபிலாஷையான அரசியலமைப்புச் சட்டத்திற்காகப் போராடிக் கொண்டே, அந்த அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் ஆதரவு முற்போக்கு அம்சங்களையும் - முதலாளித்துவத்தின் நெருக்கடி சூழ்ந்த இன்றய காலகட்டத்தில் முதலாளித்துவமே மக்களுக்குத் தர விரும்பாத‌ ஆரம்பகால முதலாளித்துவ ஜனநாயகத்தின் முற்போக்கு அம்சங்களையும் சேர்க்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து நகர்ப்புற மக்களின் பேராதரவுடன் முடிந்தால் அம்முற்போக்கான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்தி நேபாள சமூகத்தை அடுத்த அரசியல் கட்டத்திற்கு நகர்த்துவது; மாறாக தனது வர்க்க குணாம்சத்தின் காரணமாக அத்தகைய முற்போக்கான அரசியலமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ நேபாளி காங்கிரஸ்- வர்க்க சமரச சக்தியான யு.எம்.எல் போன்ற கட்சிகள் எதிர்க்குமானால் அப்போது அவர்களையும் முதலாளித்துவ அரசியலமைப்புச் சட்டத்தின் போலித்தனத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்தி கிராமப்புற-நகர்ப்புற மக்களை ஒன்றுதிரட்டி சமூகத்தை புரட்சிகரமான முறையில் மாற்றியமைக்க முற்படுவது என்ற வகையில் நேபாள மாவோயிஸ்டுகள் செயல்பட்டுக்கொண்டுள்ளனர் என்றே எனக்குப் படுகிறது. இப்போது அவர்கள் செய்து கொண்டிருப்பதும் அம்பலப் படுத்தும் அரசியலே. அது நீங்கள் நினைப்பது போல் திருத்தல்வாதமல்ல; மாறாக‌ அது மார்க்சிசத்தை ஆக்கபூர்வமாக நேபாள மண்ணில் செயல்படுத்துவதாகும். விரிவான‌ விபரங்களுக்கு படிக்க: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2470:2010-01-25-05-13-16&catid=974:09&Itemid=231

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்,

  கீற்று இனயதலதீல் உள்ள பதிவை PDF ஆக extract செய்துகொண்டன்.......

  I am just a little clear about the tactics of their movement...... anyway i will read the article so that I can get an confirmative idea over the issue......

  நேபாள மண்ணில் அரங்கேறுவது ஆக்கபூர்வ மார்க்சிஸமா? திருத்தல்வாதமா?

  I will let you know my views after the study, ASAP....................... Thanks for your Comment......... I think it will help me for a better understanding...

  நன்றீ

  பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்