சனி, 2 ஏப்ரல், 2011

ஏகாதிபத்தியத்தின் குறிப் பண்பான மூலதன ஏற்றுமதியில் இந்தியா - (1) அமெரிக்காவினுள் பாயும் இந்திய மூலதனம்


தடையில்லாப் போட்டி தனியாட்சி புரிந்த பழைய முதலாளித்துவத்தின் குறிப் பண்பாய் இருந்தது பண்டங்களின் (சரக்குகளின்) ஏற்றுமதி. ஏகபோகங்கள் ஆட்சி புரியும் முதலாளித்துவத்தின் இன்றய (ஏகாதிபத்தியக்) கட்டத்தின் குறிப் பண்பாய் இருப்பது மூலதனத்தின் ஏற்றுமதி. -லெனின் (ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்சகட்டம்)
அமெரிக்காவினுள் பாயும் இந்திய மூலதனம்

சமீபத்தில் (2010 நவம்பர் 06) அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. http://www.america.gov/st/texttrans-english/2010/November/20101106160106yggep0.6983868.html&distid=ucs அதில் நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போலவே அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே(?!!!) அமெரிக்காவில் முதலீடு செய்த இந்தியப் பன்னாட்டு நிறுவனங்களைப் பாராட்டியிருந்தது வெள்ளை மாளிகை. அதன் அறிக்கையின் ஒருபகுதி:

"இந்திய நிறுவன‌ங்கள் தத்தளித்துக் கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, வேலைகளைப் பாதுகாத்து அமெரிக்கப் பொருளாதாரத்தில் உற்பத்தியைத் தூண்டிவிட்டுள்ளன. 

அவற்றுள் சில உதாரணங்களே இவை:
  • இந்தியாவின் எஸ்ஸார் குழும நிறுவனம் அமெரிக்காவின் மின்னசொட்டா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து 12 மாகாணங்களில் 7200 பேருக்கு வேலை வழங்கிக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் டாடா குழுமம் அமெரிக்காவில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து நாடு முழுவதும் 19,000 பேரை வேலைக்கு வைத்துள்ளது.
  • இந்தியாவின் ஜுப்லியன்ட் ஆர்கன்ஸி நிறுவனம் அமெரிக்காவில் 246 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து நாடு முழுவதும் 900 பேரை வேலைக்கு வைத்துள்ளது.
  • Wockhardt எனும் இந்தியாவின் மருந்து நிறுவனம் அமெரிக்காவின் மோர்டன் க்ரோவ் எனும் மருந்து நிறுவனத்தை 37 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி அந்நிறுவனத்தின் 200 தொழிலாளர்களையும் வேலைக்கு வைத்துக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் அவந்தா குழுமத்தின் க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் நிறுவனம் அல்பேனி பல்கலைக் கழகத்துடன் இணைந்து 20 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது".
........................தொடரும்.
வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனம் பல்வேறு நாடுகளுக்கிடையில் எவ்வாறு வினியோகமாகியிருக்கிறது? இம்மூலதனம் எங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? இக்கேள்விகளுக்குத் தோராயமான பதில்தான் அளிக்க முடியும்; ஆயினும் தற்கால ஏகாதிபத்தியத்தின் பொதுவான சில உறவுகளையும் தொடர்புகளையும் தெளிவுபடுத்த இந்தப் பதில் போதுமானதாகும்.                                                                    -லெனின்
இந்திய முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியக் கூறுகளைத் தெளிவுபடுத்தவும் இவை போதுமானவையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்