சனி, 2 ஏப்ரல், 2011

சக்கையாக பிழியப்படும் பங்களாதேச நூல் தொழிற்சாலை தொழிலாளர்கள் .


திருப்பூரில் ஆடை உற்பத்தியில் தினம் ஒரு இயந்திரம் புதிதாக அறிமுகமாகும் , புதிய புதிய நவீன ஆலைகள் உதயமாகும்.இவ்வாறு உலக சந்தையுடன் நேரடி தொடர்ப்புடைய    திருப்பூர் ஆலைகளுக்கு கடும் போட்டி யாரென்றால்  மிகவும் பின்தங்கிய நாடான  பங்களாதேசம் தான். அந்த அளவிற்கு கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் அதிக அளவு உற்பத்தி செய்து தள்ளுகின்றன அங்குள்ள ஆலைகள். இங்குள்ள அளவிற்கு நவீன உற்பத்தி கருவிகள் இல்லாதபோதும், அந்த ஆலைகள் குறைந்த உற்பத்தி செலவில்  உற்பத்தி செய்ய காரணம் மிகவும் மலிவாக கிடைக்கும் பங்களதேச தொழிலாளர்களின்  கடும் உழைப்பு தான்.


ஊழலில் இந்தியாவிற்கு போட்டியாக கொடி கட்டி பறக்கும் அரசியல் வாதிகள் ஒருபுறம் மதவாதிகளின் அட்டகாசம் மறுபுறம் என அந்த நாட்டில்  வறுமையில்  வாடும்  தொழிலாளர்களுக்கு  குரல்  கொடுக்க    வலிமையான தொழிற்சங்கங்கள்  அங்கு இல்லை. தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரம், மிகவும் குறைவான ஊதியம் ( ரூபாய் மதிப்பில் 2000 கீழே)பணிபாதுகாப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அகந்தை பிடித்த  நிருவாகம்  அடிமைகளை  போல வேலை வாங்கும் கொத்தடிமை தனம் என்று அந்த ஆலைகளில் இருந்து உற்பத்தியாகும்  வண்ணமயமான  உடைகளுக்கு  பின்னால் பங்களாதேச தொழிலாளர்களின் துயரங்களே   நிழலாடுகின்றன. பங்களாதேச தொழிலாளர்களுக்கு அங்குள்ள முதலாளிகள் இழைக்கும் கொடுமைகளை உலகின் பார்வைக்கு கொண்டு செல்வோம். தொழிலாளிவர்க்கம் உலகமெங்கும் அடிமை தலைகளை உடைத்து ,வெற்றி  செங்கொடி நாட்ட போராடுவோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்