வெள்ளி, 15 ஏப்ரல், 2011

பயணிகளிடம் பகல் கொள்ளையடிக்கும் பேருந்து நிலைய கடைகள்


நாம் வெளியூர்  செல்ல அவசர அவசரமாக கிளம்பி பேருந்தை பிடிக்க ஓடுகையில் நமக்கு தேவையான பொருள்களை கொண்டு செல்ல மறந்து விடுவோம். அவசரத்திற்காக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்க  நாம் விலையை விசாரித்தால் நமக்கு தலை சுற்றலே வந்துவிடும். அந்த அளவிற்கு அதீத விலை வைத்து பொருள்களை    விற்கின்றனர். சாதரணமாக தண்ணீர் பாட்டிலின்  விலை 20 /- அதுவும் கூட்டம் அதிகம் வரும் நாட்களுக்கென்று தனி ரேட் வைத்து விற்கின்றனர்.
உணவு பொருள்களின்   விலையோ அதைவிட அதிகம். அதன் தரமோ மிகவும் மட்டமானதாகவே இருக்கும். அதுவும் இந்த  பகல் கொள்ளையானது பெரிய நகரங்களில் தான் அதிகம் நடைபெறுகிறது . பயணிகளின் அவசர தேவையை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர் இந்த கள்ள வியாபாரிகள் . இதை தையிரியமாக தட்டி கேட்கும் பயணிகள் மிரட்டப்படுகின்றனர். இது போன்ற கடைகளை நடத்துவது ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தான்.அவர்கள் பயணிகளிடம் மரியாதை குறைவாகவே எப்போதும்  பேசுவார்கள் .அதன் மூலம் தாங்கள் செய்யும் தவறுகளை பொதுமக்கள் தட்டிகேட்கமாட்டார்கள்,அத்தோடு தங்களை குறித்த பயஉணர்வை அவர்களிடம் ஏற்படுத்த  வேண்டும் என்றே ஒரு வித அரட்டல் தொனியோடே பயணிகளிடம் பேசுவார்கள் .

இதைவிட மோசம் என்னவென்றால் தொலைதூரபேருந்தாக  இருந்தால்  கண்டிப்பாக பேருந்தை மோட்டல் எனும் 'நரகத்தில்' நிறுத்துவார்கள். அப்படி குறிப்பாக அங்கு நிறுத்த சிறப்பு  காரணம் நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் கிடைக்கும் இலவச உணவு தான். அங்கு உணவு பொருள்களின் தரம் மகா மட்டமாக இருப்பதோடு அதன் விலையோ எம்.ஆர்.பி. ரேட்டை விட மூன்று மடங்கு அதிகமான விலையில் பொருள்கள் விற்கப்படும். அங்குள்ள கழிவறையோ  மகா மட்டமானதாக இருக்கும். அது போன்ற மொட்டல்களை நடத்துவதும் ஆளும் கட்சியை சார்ந்த அரசியல் புள்ளிகள் தான்.

 இது போன்ற  பயணிகளிடம் நடக்கும் பகல் கொள்ளையால் பயணிகளுக்கு கோபம் வரும். ஆனால் அந்த கோபம் பயணம் முடிந்தவுடன் காணமல் போய்விடும். அத்தோடு இவர்களை குறித்து புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும்  எடுப்பதில்லை என்பதே நிதர்சன உண்மையாகும். இது போல தமிழகம் முழுவதும் பயணிகளிடம் நடக்கும் பகல் கொள்ளையை தட்டி கேட்பதும் அதற்காக ஒன்றிணைந்து போராடுவதுமே   நம்  முன் உள்ள தீர்வாகும்.

1 கருத்து:

  1. இதை விட சென்னை விமானநிலையத்தில் விற்கும் பொருளின் விலையை பாருங்கள், தலை சுற்றி விடும். இதில் அதிகரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க நம்மிடம் தன் காசு புடுங்குவர்கள்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்