வியாழன், 21 ஏப்ரல், 2011

தில்லுமுல்லுகளின் மொத்த வடிவங்களாக விளங்கும் நமது நியாயவிலைக் கடைகள் விவரம் புரியாதோரால் புகழப்படும் கொடுமை

தேர்தல் பிரச்சாரம் இந்தமுறை பெரும்பாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவே  நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெறும் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடியே 83 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி மாதம் தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படையாகவே ஏழை எளியவருக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் நிவாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மட்டும் அல்ல தெரிந்தோ தெரியாமலோ
அகில இந்தியப் பத்திரிக்கைகள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை நியாயவிலைக் கடைகள் மூலமான பொருள் விநியோகம் தமிழகத்தில் நடைபெறுவது போல் இந்தியா முழுவதும் நடைபெற வேண்டும் என்று கூறுகின்றனர். அதாவது தமிழகத்தில் அது மிகவும் நேர்த்தியாக நடைபெறுகிறது என்று பொருள்படும் விதத்தில் கூறுகின்றனர். தமிழகத்தில் இத்திட்டம் செயல்படும் லட்சணத்தை பார்ப்பவர்களுக்கு இனிப்பே இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்று சொல்வார்களே அது நினைவிற்கு வருகிறது.

மாதந்தோறும் மாமூல்

பெரிதும் பாராட்டப்படும் தமிழகத்தின் நியாய விலைக் கடைகளில் உண்மையில் நிலவும் அவலங்களைக் கண்ணுறும் நமக்கு ஆளைப் பார்த்து மயங்காதே அது ஊது காமாலை என்றே கூறத் தோன்றுகிறது. இப்போது தமிழக நியாய விலைக் கடைகளில் நிலவும் யதார்த்தங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு நியாயவிலைக் கடையில் இருந்தும் மாதம் தோறும் ஒரு கணிசமான தொகை அரசு அதிகாரிகளுக்கு கையூட்டாக போகிறது. அது ஒரு கடைக்கு 15,000 ரூபாய் என்ற அளவிற்கு உள்ளதாக தினமலர் நாளிதழ் சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படையாகவே எழுதியது. அதனைப் பல மட்டங்களிலுள்ள அரசு அதிகாரிகள் பகிர்ந்து கொள்கின்றனர். அதுதவிர நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்வட்டாரங்களில் செயல்படும் பெரும் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக நன்கொடைகள் வழங்குபவர்களாகவும் உள்ளனர். மிக அதிகம் ஊதியம் பெறுபவர்களாக இருந்து அவர்கள் அதைச் செய்தார்கள் என்றால் அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகமிகக் குறைவு. மாதத்திற்கு 3,000 ரூபாய் என்றிருந்த அவர்களது ஊதியம் தற்போது ரூ 4,000 என்று மாற்றப் பட்டுள்ளது.

பணியமரத் துடிப்பதேன்

இவ்வாறு முறையாக நடத்தப்படுவதாக பலரால் கருதப்படும் நியாயவிலைக் கடைகளிலிருந்து மூடை மூடைகளாக லாரிகளில் அரிசி கடத்தப்படுகிறது. அது பிடிபடும் செய்திகளும் அவ்வப்போது செய்தித் தாள்களின் மூலம் வருகின்றன. அவ்வப்போது குடிமைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பல நியாய விலைக்கடை ஊழியர்கள் கைது செய்யப்படும் செய்திகளும் பத்திரிக்கைகளில் வருகின்றன. சம்பளம் மிகக் குறைவு அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கையூட்டுக் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகளுக்கும் நன்கொடை கொடுக்க வேண்டும். இத்தனை பிடுங்கல்களுக்கு மத்தியிலும் நியாயவிலைக் கடை ஊழியர்களாகப் பணியமர்வதற்கு பலர் துடிக்கிறார்கள். இது எதனால் என்பது நமக்கு புரியாத புதிராக இருக்கிறது.

தமிழக முதல்வர் கூறியுள்ள ஒரு கோடியே 83 லட்சம் ஏழை மக்களுக்கு கிலோ 1 ரூபாய் வீதம் அரிசி வழங்கப்படுகிறது என்ற கூற்றில் ஒரு கோடியே 83 லட்சம் என்பது குறிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகும். உண்மையில் அந்த எண்ணிக்கையில் குடும்ப அட்டை   வைத்திருப்பவர்கள் இந்த ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசியை வாங்குவதில்லை.

மேலும் படிக்க

http://maatrukkaruthu.blogspot.com/2011/04/blog-post_5167.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்