வியாழன், 7 ஏப்ரல், 2011

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவை ஆதரித்து உண்ணாவிரதப்போராட்டம்


ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியவர் அன்னா ஹசாரே.தற்போது   இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச - ஊழலுக்கு எதிராக வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டில் (2011)நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார். இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவை விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால்,  இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக்  கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்,ஹசாரே. லோக்பால்   சட்ட மசோதாவை  இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு  நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.இப்போது நாடுமுழுவதும் இந்த உன்னவிரதப்போராட்டதிற்கு ஆதரவு பெருகி வருகிறது, இந்த சூழ்நிலையில் ஹசாரேவின் போராட்டத்திற்கு  வலு  சேர்க்கும்  வகையில்  மதுரை வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில்   07.04.2011 அன்று ஒரு நாள்  உண்ணாவிரதப்போராட்டம்  மேற்கொள்கிறார்கள்.  ஊழலுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் வெற்றி பெற இயக்கம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நாடு முழுவதும்  அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை  ஆதரித்து  போராட்டங்கள்  செய்ய  இயக்கம்  அழைப்பு விடுக்கிறது.  
 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்