லண்டன் , ரோம் ,ஜெர்மனி, ஸ்பெயின்,போர்ச்சுகல் உட்பட 82 நாடுகளிலுள்ள 1500 நகரங்களில் போராட்டம் வெடித்தது
எந்த முதலாளித்துவம் உலக அளவில் வலுவான சக்தி என்று டாம்பிகத்தொடு வளம் வந்ததோ, அதே முதலாளித்துவம் தான் வறுமையையும், வேலை இல்ல திண்டாட்டத்தையும், உண்டாக்கி உழைக்கும் மக்களை இன்று தெருவில் நிருத்தியிருக்கிறது. எந்த முதலாளித்தும் தொழிலாளர்களை நிருவனப்படுத்தியதோ, எந்த முதலாளித்துவம் தொழிலாளர்களை சுரண்டியதோ , அந்நிய நாடுகளை சொந்த நலன்களுக்காக ஆக்கிரமித்ததோ , குறைவான கூலி கொடுத்து மக்களை அரை பட்டினியோடு வாழ நிர்பந்திததோ, மக்களை அநியாயமாக கொன்று குவித்ததோ,இயற்கை வளங்களை அதீதமாக சுரண்டி கொளுத்ததோ , சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் (கலாச்சார சீர்கேடுகள் உட்பட ) காரணமாக உள்ளதோ அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.