வியாழன், 22 டிசம்பர், 2011

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி - பட்டாசுத் தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டறிக்கை


 ஜூலை - ஆகஸ்ட் ,2005 மாற்றுக்கருத்து 

கடந்த 02 .07 .2005 அன்று சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோரா வெடி விபத்து குறித்து உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ் அவர்களும் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் தோழர்.தங்கராஜ் அவர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:

சோவியத் ரசியாவின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலின் பிறந்த தினம்

சோவியத் ரசியாவினை கட்டமைத்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஸ்டாலின் 132 வது பிறந்த தினம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 18  தேதி அனுசரிக்கப்பட்டது. ஊழல்வாதி புதின் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரசிய மண்ணில் ஸ்டாலின் பிறந்த தின ஊர்வலம் செஞ்சதுக்கத்தில்  கூடுதல் உற்சாகத்தோடு அனுசரிக்கப்பட்டது. இது  உலகம் முழுவதும் இருக்கும் பாட்டளிவர்க்கதிற்கு உற்சாகம் அளிக்ககூடிய செய்தியாகும். முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும்  இன்று வரை தோழர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஏனெனில் ஸ்டாலினால் முன்னேடுத்து செல்லப்பட்ட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றும் கூட முதலாளித்துவ அரசுகளுக்கு அச்சம் தருபவையாகவே இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் கொடிய நாசிசத்தின் பிடியில் இருந்து உலகமே தோழர் ஸ்டாலின் தலைமையிலான ரசியா செம்படையால் காப்பற்றப்பட்டது. சென்ற நூற்றாண்டின் பாட்டளிவர்க்கதின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலினை நினைவு கூர்வோம். 

புதன், 21 டிசம்பர், 2011

வரலாற்றில் நினைவு கூறத்தக்க சில முக்கிய தினங்கள்


தத்துவ ஞானிகள் பல வழிகளில் நிலவும் சூழ்நிலைகளோடு இந்த உலகை பொருத்திக் காட்டுவதை மட்டுமே செய்தனர்; ஆனால் கேள்வியே அதை மாற்ற வேண்டும் என்பது தான். 

                                                                                   -காரல் மார்க்ஸ்


வரலாற்றில் நாம் அனைவரும் நினைவு கூற வேண்டிய சில தினங்களை தொகுத்துள்ளோம்.வாசகர்கள் இதை மேலும் செழுமைப்படுத்தும் படி   கேட்டுக்கொள்கிறோம். 

திங்கள், 19 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணையை காக்க மதுரையில் உண்ணாவிரதம்

முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று பல்வேறு பொய் பிரச்சாரங்களை  கேரளா ஆளும் கட்சியான காங்கிரசும் , எதிர் கட்சிகளான   சி.பி.எம்., சி.பி,ஐ., பி.ஜே.பி.போன்ற கட்சிகளும் தீவிரமாக செய்து வருகின்றன. கேரளா மக்களிடையே பயத்தை உண்டாக்கி மக்களிடையே பிரிவினை வாதத்தை தொடர்ந்து தூண்டி விட்டு வருகின்றனர். கேரளா அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் இந்த பிரிவினைவாத போக்குகளை கண்டித்தும் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க  கோரியும், தமிழகமெங்கும் உண்ணாவிரதம், மறியல், ஊர்வலம் என்று  பல்வேறு வழிகளில் மக்கள் போராடி வருகின்றனர்.

சனி, 17 டிசம்பர், 2011

பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் - தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

  கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை.

கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.

புதன், 14 டிசம்பர், 2011

துணிந்து செல்: தன்னெழுச்சியாக திரண்டு நிற்கும் மக்கள் படை


சி.பி.எம்., சி.பி.ஐ, காங்கிரஸ் , பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் கேரளாவில் பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு முல்லை பெரியாறு அணையை இடித்தே ஆக வேண்டும் என்று பல்வேறான பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். எதிர் கட்சி தலைவர் அச்சுதானந்தன் பிரிவினைவாதத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருக்கிறார்.

திங்கள், 12 டிசம்பர், 2011

அச்சுதானந்தனின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் , முல்லை பெரியாறு அணையை காப்போம்


கம்யூனிஸ்டுகள் சர்வதேசியவாதிகளாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்ப்பட்டு எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால் கேரளா மாநில சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தனோ தமிழக மக்களின் வாழ்வாதாரமாகவும், வலுவோடும் உள்ள , முல்லை பெரியாறு அணையை தனது அரசியல் சுயலாபங்களுக்காக பொய் பிரசாரங்களை இடைவிடாது மேற்கொண்டு  கேரளா மக்களிடம்  பிராந்திய வாத வெறியை தூண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே இப்படி இருக்கும் போது அங்குள்ள மற்ற கட்சிகளான காங்கிரஸ் , பி.ஜே.பி., மற்றுமுள்ள உதிரி கட்சிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.

சனி, 10 டிசம்பர், 2011

கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நெஞ்சை உருக்கும் செவிலியர்களின் உயிர் தியாகம்


9 .12 .2011 , அன்று கொல்கத்தாவில் உள்ள AMRI தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட கோரமான  தீ விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உட்பட 90 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் அதிக உயிரழப்பிற்கு முக்கிய காரணம், இந்த மருத்துவமனை  நெருக்கமான பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததும், போதியளவு அவசர கால தீயணைப்பு கருவிகள் இல்லாததும்,தீ விபத்து ஏற்பட்டவுடன் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்காததும் தான்  என்று தெரியவந்துள்ளது.  

டிசம்பர் 11 - பாரதி பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ?

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

வெள்ளி, 9 டிசம்பர், 2011

ஊழல்வாதி புதினுக்கு எதிராக ரசியா மக்களின் எழுச்சி


பாட்டாளிவர்க்கத்தின் மாபெரும் தலைவர்கள்  தோழர்.லெனின், தோழர்.ஸ்டாலின் போன்றவர்கள் தலைமையில் வழி நடத்தப்பட்ட  சோவியத்  ரசியா, உலகம் முழுவதும் உள்ள பாட்டாளிவர்க்கத்தின் பாதுகாவலானாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து பல நாடுகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. பாசிச வெறி பிடித்த ஹிட்லரிடம் இருந்து இந்த உலகத்தை இரண்டாம் உலகப்போரின் போது காப்பாற்றியது. அந்த போரின் போது ஏற்பட்ட மொத்த இழப்பையும் ஒரு தாயின் பெருந்தன்மையோடு  தன்னுள் அது தங்கி கொண்டது. ஹிட்லரின் நாசிச படையை ரசியா மண்ணில் வீழ்த்தியது வெறும் ஆயுதங்கள் மட்டும் அல்ல, தோழர்.ஸ்டாலின் தலைமையில் அங்கு உயிர்ப்போடு பராமரிக்கப்பட்ட  அந்த மக்களின் மனவுறுதி தான் மிகப்பெரிய ஹிட்லரின் ராணுவத்தையே வீழ்த்தியது.தாங்கள் கண்டுபிடித்த அறிவியல் தொழில்நுட்பத்தை, மருத்துவ கருவிகளை, உலகம் முழுவதும் அன்று விடுதலை அடைந்த நாடுகளுக்கு வாரி வாரி வழங்கியது சோவியத் யூனியன்.

புதன், 7 டிசம்பர், 2011

கருத்து சுதந்திரத்திற்கு சமாதிகட்ட கிளம்பிவிட்டார் கபில் சிபல்

இங்கு பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு, சங்கம் அமைக்கும் உரிமை உண்டு, கூட்டம் போடும் உரிமை உண்டு  என உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று புகழப்படும் இந்தியாவைப்பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகள் (சி.பி.எம்., சி.பி.ஐ.உட்பட ) பெருமையாக புகழ்வதுண்டு. ஆனால் இங்கு ஒரு பொது கூட்டத்தையோ, ஒரு கருத்தரங்கத்தையோ நடத்தி பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் (காவல்துறையினர் கடைசி வரை அனுமதி தராமல்   அலையவிடுவார்கள்). பத்திரிக்கை நடத்தவேண்டுமெனில்  ஆயிரத்தியெட்டு விதிமுறைகளை கடந்து  பத்திரிக்கை கொண்டு வருவதற்குள் சொல்ல வந்த கருத்துகளே மறந்து போய் விடும்.அந்த அளவிற்கு விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

லண்டன் : மார்க்ஸ் வாழ்ந்த மண் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது

துன்பங்களில் உழன்டு கொண்டிருந்த தொழிலாளர்களின் துயர் துடைக்க உலகில் தோன்றிய தத்துவங்களில் உன்னதமான தத்துவத்தை தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த லண்டன் மாநகரத்தில், மார்க்ஸின் கனவை நனவாக்குவதை போல  தொழிலாளர்கள்  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இரண்டாம் உலக போருக்கு முன்பு முதலாளித்துவத்தின் தலைமை பீடமாக  இருந்த இங்கிலாந்தில்  சில மாதங்களுக்கு முன்பு தீ போல பரவிய வேலை இல்லாத இளைஞர்களின் போராட்டங்களை அதிகார  வர்க்கம் வெற்றிகரமாக அடக்கியது.அந்த போராட்டத்தின் உண்மை தன்மை வெளிவரமால் அது இனவெறி கலவரம் என்று சப்பை கட்டு கட்டின முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால் பற்றி எரிகின்ற வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணமுடியாத நெருக்கடியில் முத்லாளித்துவதுவம் சிக்கி கொண்டுள்ளது.

சுப்ரமணியபுரம்: 80களின் காலக் கண்ணாடி

எந்த ஒரு கலைப்படைப்பும் தன் காலகட்டத்திற்கும், அக்காலகட்டத்தின் சமூக வாழ்க்கைக்கும் உண்மையானதாக இருந்தால் அது கதையாக இருக்கும் போது அதை எழுதியவரோ அல்லது திரைப்படமாக இருந்தால் அதை எடுத்தவரோ கூட வெளிப்படையாக கூற முன்வராத பல விஷயங்களை படிப்பவர் அல்லது பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துவதாக அமையும்.

மேலும் படிக்க  

சனி, 3 டிசம்பர், 2011

எஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மை



மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்
தருணங்களும் காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை. சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான். 
மேலும் படிக்க

வெள்ளி, 2 டிசம்பர், 2011

எழுத்தாளர் கணேசலிங்கனுடனான நமது சந்திப்பு


மார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பார்வை கொண்டவரும் அவ்வழியில் செவ்வானம், சடங்கு, நீண்டபயணம் போன்ற தலைசிறந்த நவீனங்களை எழுதியவரும், குந்தவைக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், மான்விழிக்கு கடிதங்கள் போன்ற நூல்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை எல்லோரும் படிக்கும் விதத்தில் எளிய முறையில் எடுத்துச் சொன்னவரும், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக விளங்குபவருமான செ. கணேசலிங்கன் அவர்கள் 05-06-2008 அன்று மதுரைக்கு வந்திருந்தார்.

வியாழன், 1 டிசம்பர், 2011

ஸ்டாலினுக்குச் செல்லமான‌ "குட்டிச் சிட்டுக் குருவி" ஸ்வெட்லானா மரணம்; ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு தருணம்



வரலாற்றில் மிக அதிகமாக வசைபாடப் பட்டவர்; தவறாக சித்தரிக்கப்படுபவர் ஸ்டாலின் ஒருவரே என்றால் அது மிகையல்ல. லெனின் ஸ்தாபித்துக் கொடுத்த சோவியத் நாட்டில் லெனினிசத்தை மிகச் சரியாகக் கடைபிடித்து சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் என்பதனால் ஸ்டாலின் மீது முதலாளித்துவ - ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கடுங்கோபம். எனவே அவர்கள் அடிப்படையற்ற அவதூறுகளால் ஸ்டாலின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் பொய்ச்சித்திரம் மங்கி மறைந்துவிடாமல் இருப்பதற்காக கிடைக்கும் தருணம் எதையும் பயன்படுத்த அவர்கள் தவறுவதேயில்லை. உலகளவில் முதலாளித்துவம் மூன்றாவது உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் கவனம் சோசலிசத்தீர்வை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது, ஸ்டாலினால் "குட்டிச் சிட்டுக் குருவி"(Little Sparrow) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது மகள் ஸ்வெட்லானாவின் மரணம்.

முகப்பு

புதிய பதிவுகள்